காமன்வெல்த் போட்டிகளில் வரலாறு படைத்த சிங்கப்பூர் இணை

இங்­கி­லாந்தின் பர்­மிங்­ஹ­ம் நகரில் நடந்து­வ­ரும் காமன்­வெல்த் விளை­யாட்­டுப் போட்­டி­களில் கலப்பு இரட்­டை­யர் பூப்­பந்­துப் போட்­டி­யில் முதன்­முறை­யா­கத் தங்­கம் வென்று சாதனை படைத்­தது சிங்­கப்­பூ­ரின் டெரி ஹீ-ஜெசிக்கா டான் இணை.

உல­கத் தர­வ­ரி­சை­யில் 35ஆம் இடத்­தில் இருக்­கும் சிங்­கப்­பூர் இணை, 10ஆம் இடத்­தி­லுள்ள இங்கி­லாந்­தின் மார்க்­கஸ் எல்­லிஸ் - லாரன் ஸ்மித் இணையை 21-16, 21-15 என்ற புள்­ளிக் கணக்­கில் தோற்­க­டித்­தது.

மொத்­தம் 5,000 பேர் அமர்ந்து பார்க்­கும் வச­தி­கொண்ட அரங்­கத்­தில் நடந்த இறு­திப் போட்­டி­யில் உள்­ளூர் ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்கே பேரா­த­ரவு இருந்­தது.

இருந்­தா­லும், சக சிங்­கப்­பூர் குழு­வி­ன­ரும் மலே­சிய ரசி­கர் ஒரு­வரும் உற்­சா­கக் குரல் எழுப்பி, ஹீ - டான் இணையை ஊக்­கப்­ப­டுத்­தி­ய­படி இருந்­த­னர்.

கடந்த 2002ஆம் ஆண்­டில் மக­ளிர் ஒற்­றை­யர் பிரி­வில் லீ லீ தங்­கம் வென்ற பிறகு, காமன்­வெல்த் போட்­டி­களில் பூப்­பந்­தில் சிங்­கப்­பூர் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது இதுவே முதன்­முறை.

இதற்­கு­முன் 2006, 2010ஆம் ஆண்டு நடந்த காமன்­வெல்த் போட்டி­களில், கலப்பு இரட்­டை­யர் பூப்­பந்­தில் சிங்­கப்­பூர் வெண்­க­லம் வென்­றி­ருந்­தது.

நடப்பு காமன்­வெல்த் போட்­டி­களில் பூப்­பந்து விளை­யாட்­டில் சிங்­கப்­பூர் இது­வரை மூன்று பதக்­கங்­களைத் தன­தாக்­கி­யுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!