இடர் நீங்கியது, ஒளி பெருகியது

இர்­ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரின் 57வது பிறந்­த­நாளை சவால் மிக்க இரண்டு ஆண்­டு­களுக்­குப் பிறகு மிகுந்த மகிழ்ச்­சி­யோடு நேற்று கொண்­டா­டி­னர் சிங்­கப்­பூர் மக்­கள்.

தேசிய தின அணி­வ­குப்பு நடை­பெற்ற மரினா பே மிதக்­கும் மேடை அரங்கை நிறைத்து 25,000 பேர் கூடி­யி­ருக்க, அப்­ப­கு­தி­யைச் சுற்றி­லும் மரினா பே சேண்ட்ஸ், மெர்லயன் பூங்கா என்று மரினா நீர் முகப்­பெங்­கும் அலையெனத் திரண்டு வந்து ஆர்வத்துடன் ஆரவார மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மரினா பே வட்­டா­ரமே வெள்ளை சிவப்பு வண்­ணத்­தில் பளிச்­சிட்­டது. எங்­கும் உற்­சா­கக் கூக்­கு­ரல்­கள்.

சின்­ன­தும் பெரி­து­மாக சிங்கப்­பூர் கொடி­களை அசைத்­த­படி குழந்­தை­கள், மாண­வர்­கள், இளை­யர்­கள், பெரி­ய­வர்­கள், வெளி­நாட்­டி­னர் என்று சிங்­கப்­பூ­ரில் வாழும் மக்­கள் எல்­லா­ரும் நீண்­ட­கா­லத்­துக்­குப் பிறகு ஒன்­று­கூ­டிய உணர்­வோடு ஒன்­றி­ணைந்­த­னர்.

மக்­கள் எல்­லா­ரும் அன்­ப­ளிப்­புப் பையில் வழங்­கப்­பட்­டி­ருந்த இதய வடி­வி­லான அட்­டை­களில் வாழ்த்து வாச­கங்­களை எழு­திப் பிடித்­தி­ருந்­த­னர். ஒளி­பொ­ருந்­திய அந்த அட்­டை­கள் வெள்ளை, சிவப்பு நிறங்­களில் ஒளிர்ந்து இர­வில் அந்­தப் பகு­தி­யெங்­கும் ஒளி­பரப்­பி­யது.

ஆர­வா­ரக் குழு­வி­னர் மக்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­யப்­படி இருந்­த­னர். ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட்­டுக்கு தங்­க­ளின் வாழ்த்­தை­யும் எதிர்­பார்ப்­பை­யும் கடப்­பாட்­டை­யும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்­த­னர்.

"தேசிய தினத்தை மக்­க­ளோடு சேர்ந்து கொண்­டா­டு­வது பெரு­மை­யாக உள்­ளது," என்று நெகிழ்ந்­தார் 61 வயது திரு­வாட்டி ரேவதி.

அணி­வ­குப்­பைக் காண கடந்த 43 ஆண்­டு­க­ளாக முயற்சி செய்து வந்த அவ­ருக்கு இந்த ஆண்டு வாய்ப்­புக் கிடைத்­தில் மனம் கொள்­ளாத பெருமை. அவ­ரது 48 வயது சகோ­தரி திரு­வாட்டி கல்­பனா 29வது முறை­யாக முயற்சி செய்து இந்த ஆண்டு நுழை­வுச் சீட்டை பெற்­றி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் மீள்­தி­ற­னின் பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் எல்லா முகங்­க­ளி­லும் மிளிர்ந்­தன. கொவிட்-19 கொள்­ளை­நோயின் எச்­ச­மாக முகக் கவ­சங்­கள் மட்­டுமே இருந்­தன.

கடந்த 2020, 2021ஆம் ஆண்­டு­க­ளின் நெருக்­க­டி­யும் கவ­லை­யும் நீங்கி இந்த ஆண்­டின் தேசிய தின அணி­வ­குப்பு எதிர்­கா­லத்­திற்கு நம்­பிக்­கையை அளிப்­ப­தாக இருந்­தது.

சமூ­கத்­தில் தொற்று அதி­க­ரித்­ததை அடுத்து கடந்த ஆண்டு நிகழ்ச்சி இரு வாரங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தது.

தொற்­றுப் பர­வல் உல­கெங்­கும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த 2020லும் சிறிய நிகழ்ச்­சி­யா­கவே தேசிய நாள் கொண்­டா­டப்­பட்­டது. அணி­வ­குப்பு இடம்­பெ­ற­வில்லை.

அதை­யெல்­லாம் ஈடு­செய்­வ­தைப் போல அரங்­கம் நிறைந்த கூட்­டத்­தோடு ஏறக்­கு­றைய 2,000 பங்­கேற்­பா­ளர்­க­ளு­டன் மிகச் சிறப்­பாக நடை­பெற்­றது இந்த ஆண்­டின் அணி­வ­குப்பு.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் வரு­வ­தற்கு முன்­ன­தாக, மாலை 5.30 அள­வில் அணி­வ­குப்­புக்கு முந்­தைய அங்­கங்­கள் தொடங்­கின.

முதல் அங்­கத்­தில் 10 செஞ்­சிங்­கங்­கள் வான்­குடை சாக­சம் புரிந்து பார்­வை­யா­ளர்­களை வியக்க வைத்­த­னர். முதல்முறை­யாக பெண் ஒரு­வ­ரும் பங்­கேற்ற அந்த அற்­பு­தக் காட்சி கண்­பட்­ட­து­போல், ஒரு சிறிய விபத்து.

காற்று அதி­க­மாக வீசி­ய­தால் இறு­தி­யா­கத் தரை­யி­றங்­கி­ய­வர் 3ஆம் வாரண்ட் அதி­காரி ஜெஃபரி ஹெங் தடு­மாறி விழுந்­தார்.

மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் உட­ன­டி­யாக அவ­ருக்கு மருத்­துவ உத­வி­ய­ளித்­த­னர். அவர் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் நினை­வோடு இருப்­ப­தா­க­வும் அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் ஃபேஸ்புக்­கில் உட­ன­டி­யா­கத் தெரி­வித்­தார்.

நிகழ்ச்­சி­யின் போது மேடை­யி­லும் இதனை அறி­விப்­பா­ளர்­கள் கூறி மக்­க­ளுக்கு நிம்­ம­தி­யைத் தந்­த­னர்.

பிர­த­ம­ரின் வரு­கை­யைத் தொடர்ந்து ஆயு­தப்­ப­டை­யின் பாவ­னைக் காட்சி ஒரு கதை­யாக விரிந்­தது.

கடல் வழி ஊடு­ரு­விய பயங்­க­ர­வா­தி­களை தாக்க கட­லுக்­குள் குதித்­த­னர் கடற்­ப­டை­யின் அதி­ரடி முக்­கு­ளிப்­பா­ளர்­கள்.

தானி­யங்கி பீரங்கி வாக­னங்­கள் பட­கு­க­ளைத் தரை­யி­லி­ருந்து தாக்­கி­யது. வானி­லி­ருந்து ஆகா­யப்­ப­டை­யின் ஹெலி­காப்­டர் வேக­மா­கப் பறந்து, செங்­குத்­தா­கச் சுழன்று தன் தாக்­கு­தலை நடத்­தி­யது.

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­படை, ஆகா­யப்­படை, ராணு­வம் ஆகி­ய­வற்­றின் அதி­ந­வீன தொழில்­நுட்­பச் சிறப்­பு­க­ளை­யும் செயல் திறன்­களை­யும் எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமைந்­தது இக்­காட்சி.

முப்­ப­டை­கள், காவல்­துறை, குடி­மைத் தற்­காப்பு, சமூக பொரு­ளி­யல் குழுக்­கள், பள்­ளி­கள் உள்­ளிட்ட 31 அணி­வ­குப்­புப் பிரி­வு­களின் அணி­வ­குப்­பைத் தொடர்ந்து கொடி­ய­ணி­யின் அணி­வ­குப்புக்கு மேலும் வண்­ணம் சேர்ந்­தது.

இந்த அணி­க­ளு­டன் மரி­யா­தைக் காவல் அணி­யின் அணி­வ­குப்­பும் இணைந்து அதி­பரை வர­வேற்­றது.

சிங்­கப்­பூர் கொடி ஏந்தி மூன்று ஹெலி­காப்­டர்­கள் வானில் பிறை போட, சிங்­கப்­பூர் தேசிய கீதத்தை ஆனந்­தக் கண்­ணீர் பொங்க பாடி, மக்கள் மெய்­சி­லிர்த்து நின்றனர்.

தேசிய சேவை­யின் 55வது ஆண்டு நிறை­வை­யொட்டி அரங்­கி­லி­ருந்த தேசிய சேவை­யா­ளர்­களுக்கு அணிவகுப்­பி­னர் மரி­யாதை செலுத்­தி­னர்.

இந்த ஆண்டு அணி­வ­குப்­பின் மற்­றொரு விறு­வி­றுப்­பான சாகச அங்­கம், முழு­மைத் தற்­காப்­புக் காட்சி.

தீச்­சம்­ப­வம், ரசா­ய­னக் கழிவு, வெடி­குண்டுச் சம்­ப­வம், பேருந்து கடத்­தல் என ஒன்­றன்­பின் ஒன்­றாக எதிர்­பா­ராத தாக்­கு­தல்­கள். அத்­த­னை­யை­யும் வெற்­றி­க­ர­மாக சமா­ளித்­த­னர் வீரர்­கள்.

இந்­தப் பிரி­வில் ஆகா­யப்­படை, ராணு­வம், கடற்­படை, காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகிய பங்­கேற்­றன.

ஐந்து அத்­தி­யா­யங்­க­ளைக் கொண்ட காட்சி அங்­கம் பல வண்ண ஊடு­க­திர் ஒளி­யால் மேடையை சில கணங்­களில் உரு­மாற்றி மிளி­ர­ வைத்­தது.

மரினா பே மிதக்­கும் மேடை­யில் நடை­பெ­றும் இறுதி தேசிய தின அணி­வ­குப்பு இது. 2007ஆம் ஆண்டு தேசிய தின அணி­வ­குப்­புக்­காக உரு­வாக்­கப்­பட்ட இந்த மிதக்­கும் மேடை, தேசிய சேவை சதுக்­க­மாக மேம்­பாடு காண­வுள்­ளது.

அணி­வ­குப்­பின் உச்­ச­மாக அமைந்­தது வாண­வே­டிக்­கைக் காட்சி. அதி­க­பட்ச வாண­வெ­டி­கள் அந்த வட்­டா­ரத்தை ஒளி­பிழம்­பாக்­கி­யது.

பல நிறங்­களில் வானை நிறைத்த ஒளிப் பூக்­களில் நாடே பளிச்­சிட்­டது.

"ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் அரங்­கி­னுள் மூன்று வெவ்­வேறு வழி­களில் வரு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்­தப் பாதை­களும் அதற்­கான தக­வல்­களும் தெளி­வாக இருந்­தது.

மேலும் பாது­காப்பு நடை­மு­றை­கள் சுமு­க­மாக இருந்­தன. கிட்டத்­தட்ட 20 நிமி­டத்­திற்­குள் இருக்­கைக்கு வந்­து­விட்­டோம்," என்று மருத்­து­வத் துறை­யில் பணி­யாற்­றும் ஆ‌ஷியா ஃபர்­வின் தெரி­வித்­தார்.

இந்த ஆண்­டின் தேசிய தின அணி­வ­குப்­பின் கருப்­பொ­ருள், 'ஒன்­றி­ணைந்து மேலும் வலுப்­பெறு­வோம் மாஜுலா'.

இந்த சிர­ம­மான காலத்­தில் ஒன்­றி­ணைந்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது. இரு விரல்­கள் கோர்த்­தி­ருக்­கும் இவ்­வாண்­டின் சின்­னம், பரி­வு­மிக்க அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமு­தா­யத்­தைக் குறிக்­கிறது.

இதை மெய்­ப்பித்­த­னர் மரினா பே வட்­டா­ரத்­தி­லும் நாட்­டின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் ஒன்­று­கூடி நாட்­டின் பிறந்­த­நா­ளைப் பெரு­மை­பொங்­கக் கொண்­டாடி மகிழ்ந்த மக்­கள்.

தேசிய தின அணிவகுப்பு படங்களும் செய்திகளும்

பக்கம் 2, 3

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!