பீகாரில் ஆட்சியை இழந்த பாஜக கூட்டணி; நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பு

பீகா­ரில் பாஜ­க­வு­ட­னான உறவை அம்­மா­நில முதல்­வர் நிதிஷ் குமார் முறித்­துக்கொண்­ட­தால் அங்கு ஐக்­கிய ஜனதா தளம்-பார­திய ஜனதா கூட்­டணி ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

இத­னால் இந்­தி­யாவை ஆளும் பார­திய ஜனதா கட்சி ஒரு மாநி­லத்­தில் ஆட்­சியை இழந்­துள்­ளது. பாட்­னா­வில் நடந்த ஐக்­கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்­டத்­தில் பார­திய ஜன­தா­வு­ட­னான கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யே­று­வது என முடிவு செய்­யப்­பட்­டது. இதை யடுத்து நிதிஷ் குமார் முதல்­வர் பத­வி­யி­லி­ருந்து விலகி புதிய கூட்­ட­ணி­யு­டன் ஆட்சி அமைப்­ப­தற்­கான அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னார்.

பீகா­ரின் முன்­னாள் முதல்­வ­ரும் முன்­னாள் மத்­திய அமைச்­சர் லாலு பிர­சாத் யாத­வின் மனை­வி­யு­மான ராப்ரி தேவி­யின் வீட்­டுக்­குச் சென்று லல்லு பிர­சாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவை சந்­தித்து அவர் ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது ராஷ்­டி­ரிய ஜன­தா­ த­ளம், காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் உள்­ளிட்ட 7 கட்­சி­கள் ஆத­ர­வு­டன் புதிய மெகா கூட்­டணி அமைக்க முடிவு செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து 8வது முறை­யாக பீகார் மாநில முதல்­வ­ராக நிதிஷ்­கு­மார் நேற்று மீண்­டும் பத­வி­யேற்­றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!