அக்கரைச் சீமை அழகினிலே இசைஞானி இளையராஜா

பொன்­மணி உத­ய­கு­மார்

ரசி­கர்­க­ளுக்கு வித்­தி­யா­ச­மான ஓர் இசை­வி­ருந்­தைத் தாம் வழங்கப்போவதில் தமக்­குச் சந்­தே­கம் இல்லை என்­றும் அது என்ன என்­பதை இசை நிகழ்ச்­சி­யின்­போது ரசி­கர்­கள் உணர்­வார்­கள் என்­றும் ஆர்­வத்­தைத் தூண்­டும் விதத்­தில் உறு­தி­ய­ளித்­துள்­ளார் இசை­ஞானி இளை­ய­ராஜா.

“ஆனால் ரசி­கர்­க­ளின் ரத்­தத்­தில், நரம்­பில், நாடி­யில், ஊறிப் போன பாட­லைக் கேட்­டும் அந்­தச் சுவையை ரசிக்­க­வும்­தான் வரு­கி­றார்­கள்,” என்று நகைச்­சு­வை­யா­கக் கூறிய பின்­னர் இசை­நி­கழ்ச்­சி­யின் மற்ற சுவா­ர­சி­ய­மான அங்­கங்­க­ளைப் பற்றி மேலும் விவ­ரித்­தார் அவர்.

போன விஸ்­தா­வில் அமைந்­துள்ள ஸ்டார் விஸ்தா அரங்­கில் நாளை நடை­பெ­ற­வி­ருக்­கும் ‘இசை ராஜாங்­கம்’ நிகழ்ச்சி­யில் இசை விருந்­த­ளிக்க சிங்­கப்­பூர் வந்­துள்ள இசை­ஞானி இளை­ய­ராஜா, நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இவ்­வாறு பேசி­னார்.

ஒவ்­வொரு முறை இசை­ய­மைக்­கும் போதும் தம்­மு­டைய உடம்­பில் அதிர்வு அலை­கள் ஓடிக்­கொண்டே இருப்­ப­தா­கக் கூறி­னார் இசை­ஞானி. ஒவ்­வொரு முறை­யும் தான் தெரி­யாத இசையை அமைப்­ப­தும் ரசி­கர்­கள் அதைக் கேட்டு கேட்டு ஊறிக் கிடப்­ப­தும் தான் வியக்­கும் ஒன்று என்­றார். அது இறை­வன் தமக்­குக் கொடுத்த கரு­ணை­யா­கத் தாம் கரு­து­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

புதிய பாட­கர்­களை அறி­மு­கப்­ப­டுத்த இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளைத் தாமே தேர்ந்­தெ­டுத்து இருப்­ப­தா­க­வும் திற­மை­மிக்க தர­மான பாட­கர்­க­ளாக அவர்­கள் உள்­ள­னர் என்­றும் உறு­தி­ய­ளித்­தார். தம்­மு­டன் இணைந்து பணி­யாற்­றும் இசைக்­கு­ழு­வினரே இசை மழை பொழி­ய­வுள்­ள­னர் என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரு­டன் அவ­ருக்கு இருக்­கும் நெருங்­கிய தொடர்பு குறித்து கூறு­கை­யில் நிகழ்ச்­சி­யில் ‘அக்­க­ரைச் சீமை அழ­கி­னிலே’ பாடல் கண்­டிப்­பாக இடம்­பெ­றும் என்­றும் தெரி­வித்­தார். இதற்­கு­முன், 2018ஆம் ஆண்டு திரு இளை­ய­ராஜா இதே அரங்­கில் இசை நிகழ்ச்சி படைத்­தார். ஏறத்­தாழ 5,000 பேர் அம­ரக்­கூ­டிய அரங்­கில் நடை­பெ­றும் நாளைய இசை நிகழ்ச்சி, கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லுக்­குப்­பின் நடை­பெ­ற­வுள்ள முதல் மாபெ­ரும் தமிழ் இசை நிகழ்ச்சி­யா­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!