‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ அடுத்த ஆண்டு அறிமுகமாகலாம்

60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் நோய்த் தடுப்பு செயல்திட்டம்

பொது மருத்­து­வர்­கள் நோய்த் தடுப்புப் பரா­ம­ரிப்­பில் கூடு­த­லாக ஈடு­ப­டு­வதை இலக்­காக கொண்­டி­ருக்­கும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' செயல்திட்டம், அடுத்த ஆண்டு 60 வயதும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளு­டன் தொடங்கி பின்­னர் மற்ற வய­துப் பிரி­வி­ன­ருக்கு விரி­வு­படுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பல­துறை மருந்­த­கங்­க­ளு­டன் ஒப்­பி­டும் அள­வுக்கு பொது மருந்­த­கங்­களில் நாள்­பட்ட நோய்­க­ளுக்­கான மருந்­துச் செல­வு­க­ளைக் கட்டுக்குள் வைத்திருப்பது பற்றியும் அமைச்சு ஆராய்ந்து வரு­கிறது. வயது முதிர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்­கள் தாங்கள் வழக்­க­மாக பார்க்கும் பொது மருத்­து­வர்­களையே பார்க்க விரும்­பு­கின்­ற­னர். ஆனால், உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு போன்ற நாள்­பட்ட நோய்­களுக்­கான மருந்­து­கள் பல­துறை மருந்­த­கங்­களில் கட்­டுப்­ப­டி­யான விலை­களில் கிடைப்­பதாக அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்­டம் பற்றி 1,000 சுகா­தா­ரப் பரா­மரிப்பு நிபு­ணர்­கள் உட்­பட 6,000க்கும் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள், இதர பங்­கு­தா­ரர்­களை அமைச்சு ஈடு­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

'புளாசம் சீட்ஸ்' எனும் அமைப்பு நேற்று ஏற்பாடு செய்த அறக்கொடை நடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், தொடக்­க­மாக இந்­தத் திட்­டம் ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் குடி­யி­ருப்­பாளர்­க­ளுக்கு சேவை­யாற்றும் என்று தெரி­வித்­துள்­ளார்.

குடும்ப மருத்­து­வர்­கள் தங்­கள் ஆற்­றலை மேம்­ப­டுத்தி, படிப்­ப­டி­யாக கூடு­த­லான குடி­யி­ருப்­பா­ளர்­களை இத்­திட்­டத்­தில் சேர்க்க கால­அ­வ­கா­சம் வழங்­கப்­படும்.

மூன்­றில் இரண்டு குடி­யி­ருப்­பா­ளர்­கள் வழக்­க­மான குடும்ப மருத்­து­வரைப் பார்ப்­ப­தற்­கான யோச­னைக்கு ஆத­ரவு அளிக்­கின்­ற­னர். குடும்ப மருத்­து­வர்கள், நோயா­ளி­க­ளின் மருத்­து­வத் தேவை­களை நன்கு அறிந்திருப்­பர்.

ஆனால், தேவை ஏற்­ப­டும்­போது மற்ற மருத்­து­வர்­க­ளி­டம் சென்று பார்க்க முடி­யாமல் போவது குடி­யி­ருப்­பா­ளர்­கள் சில­ரின் கவலை. எனவே, தேவை ஏற்­ப­டும்போது மருத்­து­வர்­களை மாற்ற தனி­ந­பர்­களுக்கு நீக்­குப்­போக்கு அளிக்­கப்­படும் என்று அமைச்­சர் ஓங் கூறி­னார். 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்­டம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குப் பலன் தரும் என்று பொது மருத்­து­வர்­கள் கூறி­னர். எனி­னும், தர­வுகளைப் பதிவு­செய்­வது அல்லது தக­வல் தொழில்­நுட்­பப் பிரச்­சி­னை­க­ளைக் கையாள்­வதில் நேரத்தைச் செல­வ­ழிப்­ப­தற்­குப் பதி­லாக நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிப்­பதில் கவனம் செலுத்த அவர்­கள் விரும்­பு­வ­தாக அமைச்சு சொன்­னது.

இத்­திட்­டம் 60 வயதும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யப்­ப­டும்­போது சில குளறு­படி­கள் ஏற்­ப­ட­லாம் என்று குறிப்­பிட்ட திரு ஓங், தமது அமைச்சு அவற்­றைச் சரி­செய்­யும் என்று உறு­தி­ய­ளித்­தார்.

மருத்­து­வப் பிரச்­சி­னை­களை ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே எதிர்­கொள்­வ­தன் மூலம் அதி­க­ரித்­து­வ­ரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளைக் கட்­டுப்­படுத்து­வதே இத்­திட்­டத்­தின் இலக்கு. மக்­கள் நீண்­ட­கா­லம் உடல்நலத்­து­டன் இருந்­தால், அவர்­க­ளுக்கு மருத்­து­வப் பரா­மரிப்பு குறை­வாக தேவைப்­படும்.

பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து சேக­ரிக்­கப்­படும் கருத்துகள், 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்­டத்­துக்­கான சுகா­தார அமைச்­சின் பரிந்­து­ரை­களை வகுக்க ஆரா­யப்­படும். இத்­திட்­டம் குறித்த பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கிய வெள்ளை அறிக்கை, அடுத்த மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!