2023 இலக்கை 2022ல் நிறைவேற்ற எஸ்ஐஏ தீவிரம் விமானப் பயணம் சூடுபிடிப்பதால் மேலும் 800 பேரை விரைவில் சேர்க்க முயற்சி

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கடந்த பிப்­ர­வ­ரி­யில் ஊழி­யர்­களைச் சேர்க்­கத் தொடங்­கி­யது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வாக்­கில் 2,000 விமான ஊழி­யர்­களைச் சேர்க்க வேண்­டும் என்று அது இலக்கு நிர்­ண­யித்­தது.

இன்­றைய தேதி­யில் 1,200 பேரை சேர்த்து இருக்­கிறது. மேலும் 800 பேரை­ வரும் டிசம்­பர் வாக்­கிலேயே வேலை­யில் சேர்த்து விட வேண்­டும் என்று அது இப்­போது விரும்­பு­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக ஓய்ந்து கிடந்த விமா­னப் பய­ணம் இப்­போது தொடர்ந்து சூடு­பி­டிப்­பதே இதற்­கான கார­ணம்.

பல நாடு­க­ளின் எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வ­தால் எஸ்­ஐஏ நிறு­வனம் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சியா­வுக்­கும் வெளியே இருந்­தும் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்ப்­பது பற்றி பரி­சீ­லித்து வரு­கிறது.

கொவிட்-19க்கு முன்பு சீனா, இந்­தோ­னீ­சியா, தென் கொரியா, தைவா­னில் இருந்து அது ஊழி­யர்­களை வேலை­யில் சேர்த்தது.

எஸ்­ஐஏ போலவே உள்­ளூர் விமான தொழில்­து­றை­யைச் சேர்ந்த இதர விமான நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­க­ளைச் சேர்ப்­பதில் நாட்­டம் கொண்டுள்ளன.

விமான நிலைய தரைத்­தள ஊழி­யர்­கள் முதல் பாது­கா­வ­லர்­கள், துப்­பு­ர­வா­ளர்­கள், விமான ஊழி­யர்­கள், விமான போக்­கு­வரத்து கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் வரை கிட்­டத்­தட்ட எல்லா வகை விமான நிலைய ஊழி­யர்­களுக்­கும் தேவை இப்­போது மிக அதிகமாக இருக்­கிறது. ஊழி­யர் பற்­றாக்­குறை நில­வு­வதே இதற்­கான கார­ணம்.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் செயல்­படும் விமான நிறு­வ­னங்­களுக்கு இதுவே இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக உள்ளது.

எடுத்­துக்­காட்­டாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஊழி­யர்­ பற்­றாக்­குறை கார­ண­மாக விமான நிறு­வனங்­களும் விமான நிலை­யங்­களும் தேவை­களை நிறை­வேற்­றும் அள­வுக்­குச் செயல்­பட முடி­யா­மல் தவிக்­கின்­றன.

இத­னி­டையே, விமா­னப் போக்கு­வ­ரத்து நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் விளாடிமிர் பிளோ­காட்ச், சீனா, ஹாங்­காங், தைவான், ஜப்­பான் போன்ற ஆசிய சந்­தை­கள் இன்­ன­மும் கட்­டுப்­பா­டு­களை முற்­றி­லும் அகற்­றா­மல் இருக்­கின்­றன. இவற்றின் விளை­வாக ஆசி­யாவில் மீட்சி வேகம் ஒரு வரம்­புக்­குட்­பட்­ட­தா­கவே இருக்­கிறது என்றார்.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், 2022 முடி­வில் ஆசி­ய பயணி ­கள் போக்­கு­வ­ரத்து 70% முதல் 80% வரை­தான் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஐரோப்­பா­வில் இது ஏற்கெனவே கொவிட்-19 முந்­திய நிலை­யில் 90%ஐ கடந்து­விட்­டது.

சாங்கி விமான நிலை­யத்­தில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் 25,000லிருந்து 29,000 ஆகக் கூடி­யது. மேலும் 3,500 முதல் 4,000 ஊழி­யர்­கள் தேவை என்று போக்கு ­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வரன் சென்ற மாதம் தெரி­வித்­தார்.

இந்த அள­வுக்கு ஊழி­யர்­கள் சேர்க்­கப்­பட்­டால் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை முன்­பி­ருந்த அள­வில் 95%ஐ எட்­டி­வி­டும்.

விமா­னச் சேவைகளின் எண்ணிக்கை வரும் அக்­டோ­ப­ரில் கொவிட்-19க்கு முன்பு இருந்த அள­வில் 80%ஐ தொட்­டு­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, ஊழி­யர்­கள் மிக­வும் முக்­கி­யம் என்­ப­தால் விமான நிறு­வ­னங்­களும் விமான நிலை­யங்­களும் மனித வளத்­தில் இப்­போது முத­லீடு செய்ய வேண்­டிய தேவை இருக்­கிறது என்று பேரா­சி­ரி­யர் விளா­டி­மிர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!