மலேசியப் பிரதமருடன் துணைப் பிரதமர் வோங் சந்திப்பு

மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், நேற்று மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்­ரி­யைச் சந்­தித்­தார். துணைப் பிர­த­ம­ராக மலே­சி­யா­வுக்­கு திரு வோங் மேற்­கொண்­டுள்ள முதல் அதி­கா­ரத்­துவ பய­ணம் இது.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே நில­வி­வ­ரும் முக்­கி­ய­மான, விரி­வான ஒத்­து­ழைப்பை இரு நாட்­டுத் தலை­வர்­களும் மறு­உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­ட­னர்.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் இணைப்­புத் திட்­டம் நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தை­யும் இரு­வ­ரும் வர­வேற்­ற­னர். 2026ஆம் ஆண்­டில் இத்­திட்­டத்­தின்­ சேவை தொடங்­கும்­போது இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள இணைப்பு மேம்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர்-கோலா­லம்­பூர் அதி­வேக ரயில் திட்­டம் குறித்து மீண்­டும் பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்க மலே­சியா ஆர்­வம் காட்டி வரு­வ­தைத் தாம் அறி­வ­தாக திரு வோங் குறிப்­பிட்­டார்.

இதன் தொடர்­பில் மலே­சியா முன்­வைக்­கும் புதிய திட்­டங்­க­ளைப் பரி­சீ­லிக்க சிங்­கப்­பூர் தயா­ராக உள்­ள­தென்று அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, 10வது சிங்­கப்­பூர்-மலே­சி­யத் தலை­வர்­க­ளின் சந்­திப்­பில் கலந்­து­கொள்ள சிங்­கப்­பூர் வரு­மாறு பிர­த­மர் லீ சியன் லூங் முன்­ன­தாக விடுத்­தி­ருந்த அழைப்பை திரு இஸ்­மா­யி­லுக்கு மீண்­டும் விடுத்­தார் திரு வோங்.

இரு நாடு­களும் தொடர்ந்து பல­ன­டை­யும் வகை­யில் சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் இணைந்து செயல்­பட வேண்­டும் என்று தாம் விரும்­பு­வ­தாக துணைப் பிர­த­மர் வோங் குறிப்­பிட்­டார். பசுமை, மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல்­களில் அடை­யா­ளம் காணப்­படும் புதிய அம்­சங்­கள் குறித்த ஒத்­து­ழைப்­பு பற்றியும் அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹி­மை­யும் திரு வோங் நேற்று சந்­தித்­தார்.

இரு­வ­ரும் பொரு­ளி­யல் விவ­கா­ரங்­கள், வர்த்­தக உற­வு­கள், ஆசி­யான் விவ­கா­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி சந்­திப்­பின்­போது பேசி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

நான்கு நாள் பய­ணமாகச் சென்­றுள்ள துணைப் பிர­த­மர் வோங், மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா சுல்­தான் அக­மது ஷாவை­யும் சந்­திப்­பார்.

மலே­சிய தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஹுசேன், மலே­சிய மத்­திய வங்கி ஆளு­நர் நூர் ஷம்­சியா முகம்­மது யூனோஸ் ஆகி­யோ­ரு­டன் சந்­திக்க உள்­ள­தா­க­வும் தக­வல் தெரி­விக்­கப்ட்­டுள்­ளது.

வெளி­யு­றவு, நிதி, தொடர்பு தக­வல் அமைச்­சு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளு­டன் துணைப் பிர­த­மர் இந்­தப் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!