சிங்கப்பூர்-பிலிப்பீன்ஸ் இணக்கம்

மின்னிலக்கம், பயங்கரவாத முறியடிப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் ஒத்துழைப்பு

சிங்­கப்­பூ­ரும் பிலிப்­பீன்­சும் மின்­னி­லக்­கத் தொடர்­புத்­தி­றன், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் பயங்­க­ர­வாத முறி­ய­டிப்பு போன்ற அம்­சங்­களில் வலு­வான ஒத்­து­ழைப்பை நல்க ஒப்­புக்­கொண்டு உள்­ளன.

இதன் தொடர்­பில் நேற்று இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பல ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

இஸ்­தா­னா­வில் நடை­பெற்ற ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டும் சடங்கை சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னண்ட் மார்க்­கோஸ் ஜூனி­ய­ரும் பார்­வை­யிட்­ட­னர்.

திரு மார்க்­கோஸ் இரு­நாள் வரு­கை­யாக நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் வந்­தார்.

மின்­னி­லக்க ஒத்­து­ழைப்­புக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் சிங்­கப்­பூ­ரின் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ­வும் பிலிப்­பீன்ஸ் தக­வல், தொடர்­புத் தொழில்­நுட்­ப அமைச்சர் இவான் ஜான் உய்­யும் கையெ­ழுத்­திட்­ட­னர்.

மின்­னி­லக்­கத் தொடர்­புத்­தி­றன், தர­வு­கள் மற்­றும் இணை­யப் பாது­காப்பு தொடர்­பான தக­வல்­க­ளை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் பரி­மா­றிக்­கொள்ள இந்த ஒப்­பந்­தம் வழி­வகை செய்­கிறது. மேலும், மோசடி அழைப்­பு­கள் மற்­றும் குறுந்­த­க­வல்­கள் தொடர்­பான ரகசியத் தக­வல்­ க­ளை­யும் இந்த ஒப்­பந்­தத்­தின்­கீழ் இரு நாடுகளும் பரி­மாறிக்கொள்ள லாம்.

இது தவிர, பிலிப்­பீன்­சின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­களை சிங்­கப்­பூ­ருக்­குத் தொடர்ந்து வர­வ­ழைப்­ப­தற்­கான ஒப்­பந்­தம் ஒன்­றில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் பிலிப்­பீன்ஸ் வெளி­நாட்டு ஊழி­யர் துறை அமைச்சர் மரியா சூசனா ஒப்­லும் கையெ­ழுத்­திட்­ட­னர்.

ஆயு­தப் படை­க­ளுக்கு இடை­யி­லான ஒப்­பந்­தம் ஒன்­றும் நேற்று கையெ­ழுத்­தா­னது. நாடு­க­ளுக்கு இடை­யில் பயங்­க­ர­வா­தம் தொடர்­பான உள­வுத் தக­வல்­க­ளைப் பரி­மாறி கண்­கா­ணிப்­பில் ஈடு­ப­டு­வ­தற்கு வச­தி­யாக பயங்­க­ர­வாத முறி­ய­டிப்­புத் தக­வல் பரி­மாற்ற ஏற்­பாட்டை அண்­மை­யில் சிங்­கப்­பூர் செய்­தி­ருந்­தது.

இதற்­கான பிலிப்­பீன்ஸ் குழுவை நிறுவ நேற்று ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

கடந்த ஜூன் மாதம் பிலிப்­பீன்ஸ் அதி­பர் பொறுப்பு ஏற்ற திரு மார்க்­கோஸ் சிங்­கப்­பூ­ருக்கு முதல் பய­ணம் மேற்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பை­யும் அவர் நேற்று சந்­தித்­தார். அந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய திரு­வாட்டி ஹலிமா, முன்­னாள் பிலிப்­பீன்ஸ் அதி­ப­ரும் திரு மார்க்­கோ­ஸின் தந்­தை­யு­மான ஃபெர்டி­னண்ட் மார்க்­கோஸ் சீனி­யர், 1976 ஜன­வரி மாதம் தமது மனைவி இமெல்டா மார்க்­கோ­ஸு­டன் சிங்­கப்­பூ­ருக்கு வந்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

ஜூரோங் நக­ரக் குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­கும் கப்­பல் பட்­ட­றைக்­கும் அவர்­கள் அப்­போது வரு­கை­ய­ளித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் நில­வி­யல் தோற்­றம் பல்­லாண்டு கால­மாக மிகப்­பெ­ரிய மாற்­றம் கண்­டு­வந்த நேரத்­தில் சிங்­கப்­பூ­ருக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடை­யி­லான தோழமை நீடித்து நிலைத்ததுடன் வலு­வாக வளர்ந்­தி­ருக்­கிறது என திரு­வாட்டி ஹலிமா கூறி­னார்.

இரு நாடு­களும் 2019ல் 50ஆம் ஆண்டு தூத­ரக உற­வைக் கொண்­டா­டி­ய­தை­யும் அப்­போது அவர் நினை­வு­கூர்ந்­தார். சிங்­கப்­பூ­ருக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடை­யில் ஆழ­மான அர­சி­யல் உற­வு­கள் நீடிப்­ப­தன்­வழி வலு­வான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­பும் வளர்ந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

பிலிப்­பீன்­சில் கடந்த ஆண்டு ஆக அதி­க­மான முத­லீடு செய்த நாடு சிங்­கப்­பூர். மேலும், ஆசி­யா­னில் பிலிப்­பீன்­சின் ஆகப்­பெ­ரிய வர்த்­த­கப் பங்­காளி சிங்­கப்­பூர் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!