ஒன்றிணைந்த சமூகம் உருவாக விடாமுயற்சி அவசியம்: வோங்

நெருக்­கடி ஏற்­ப­டும்­போது அத­னைச் சமா­ளிக்க சமூக ஒற்­று­மை­யும் நம்­பிக்­கை­யும் எந்த அள­வுக்கு இன்­றி­ய­மை­யா­தவை என்­பதை கொவிட்-19 கொள்­ளை­நோய் உணர்த்தி இருப்­ப­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

நம்­பிக்கை மிகுந்த நாடு­களில் குறை­வான கொவிட்-19 மர­ணங்­கள் நிகழ்ந்­த­தாக ஆக்ஸ்­ஃபர்ட் ஆய்வு ஒன்று தெரி­வித்­தி­ருப்­பதை திரு வோங் மேற்­கோள் காட்­டி­னார். நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க நட­வ­டிக்கை எடுக்­கும் அதி­கார அமைப்­பு­கள் மீது மக்­கள் நம்­பிக்கை கொண்­டி­ருக்­கும் நாடு­கள் இவை.

“கொவிட்-19 கொள்ளைநோயை தொடர்ந்து தற்­போ­தும் சவால்­கள் உள்­ளன. விலை­வாசி ஏற்­றம், புவி அர­சி­யல் பதற்­றம் போன்­றவை சமூக ஒன்­று­மையை மீண்­டும் சீர்­கு­லைக்­கக்­கூ­டும்.

“ஏற்­றத்­தாழ்­வான உல­கில் எவ்­வ­ளவு ஆழத்­திற்கு நம்­பிக்கை விதை ஊன்­றப்­பட வேண்­டும் என்­பதே இப்­போ­தைய கேள்வி.

“சமூக ஒற்­றுமை என்­பது தானாக வந்­து­வி­டாது. சமூகத்தில் உள்ள ஒரு­வ­ரைப் புரிந்­து­கொள்­ள­வும், ஏற்­றுக்­கொள்­ள­வும், ஒன்­று­சேர்ந்து முன்­னே­ற­வும் தொடர்ந்து முயன்­றால் மட்­டுமே இதனை அடை­ய­மு­டி­யும்.

“நாடு முன்­னே­றி­னால் நாமும் பல­ன­டை­ய­லாம் என்­பதை மக்­கள் நம்­ப­வேண்­டும். இது சாத்­தி­ய­மா­ன­தால் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சியை சிங்­கப்­பூ­ரால் சாதிக்க முடி­கிறது,” என்­றார் திரு வோங்.

சமூக ஒற்­றுமை பற்றிய அனைத்­து­லக மாநாடு ஒன்­றில் பங்­கேற்று அவர் உரை நிகழ்த்­தி­னார்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்­ட­பத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை தொடங்­கிய ‘ஒன்­றி­ணைந்த சமூ­கங்­கள் பற்­றிய அனைத்­து­லக மாநாடு’ நேற்று முடி­வ­டைந்­தது.

இறுதி நாள் நிகழ்­வு­களில் பங்­கேற்ற நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், சம­யத் தலை­வர்­கள், கொள்கை வகுப்­பா­ளர்­கள், கல்­வி ­யா­ளர்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் பேசி­னார்.

இந்த மாநாடு 2019ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இரண்­டா­வது முறை­யாக இப்போது நடத்­தப்­பட்­டது.

40க்கும் மேற்­பட்ட நாடு­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 800 பேர் மூன்று நாள் நிகழ்­வு­களில் பங்­கேற்­ற­னர்.

நம்­பிக்கை, அடை­யா­ளம் மற்­றும் ஒற்­றுமை ஆகிய அம்­சங்­கள் குறித்து மாநாட்­டில் விரி­வா­கப் பேசப்­பட்­டது.

பல்­வேறு பின்­ன­ணி­க­ளைக் கொண்ட மக்­க­ளுக்கு இடை­

யி­லான தொடர்­பை­யும் இரு­வழி நட்­பை­யும் பேணு­வ­தி­லி­ருந்து சமூக ஒற்­றுமை தொடங்­கு­வ­தாக திரு வோங் தமது உரை­யில் குறிப்­பிட்­டார். இத­னைக் கருத்­தில்­கொண்டு சிங்­கப்­பூர் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

“பொது வீட­மைப்­புக்­கான கொள்­கை­கள் வெவ்­வேறு இன மக்­களும் ஒன்­றாக வசிப்­பதை உறு­தி­செய்­கிறது. தேசிய பள்­ளிக்­கூ­டங்­களும் தேசிய சேவை­யும் பகிர்வு அனு­ப­வத்­தைத் தரு­கின்­றன. விளை­யாட்­டுத் திடல்­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் போன்ற பொது­வான இடங்­களில் மக்கள் அதி­கம் ஒன்று சேர உத­வு­கின்­றன.

“இது தவிர, சமூக, சமய, அர­சாங்­கத் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லுக்­கும் சிங்­கப்­பூர் ஏற்­பாடு செய்­கிறது,” என்­றார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!