‘ஒன் பாஸ்’ தகுதிகள் வரையறுக்கப்படும்

வெளி­நாட்டு கட்­ட­மைப்பு, நிபு­ணர்­க­ளுக்­கான புதிய வேலை அனு­மதி அட்­டைக்கு (ஒன் பாஸ்) தகு­தி­பெ­று­வோ­ரில் விளை­யாட்டு அறி­வி­ய­லா­ளர்­கள், கல்­வி­யா­ளர்­கள், கலைத் தயா­ரிப்­பா­ளர்­கள் ஆகியோர் அடங்­கு­வர்.

மாதச் சம்­ப­ள­மாக $30,000ஐ பெறா­விட்­டா­லும் இந்த வேலை அனு­மதி அட்­டைக்கு அவர்­கள் தகுதி பெற முடி­யும். அவர்­க­ளது தலை­சி­றந்த சாத­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளுக்கு ஒன் பாஸ் வழங்­கப்­படும்.

இந்­தப் பிரி­வி­ன­ருக்­கான தகுதிக்­கூ­று­களைக் கல்வி அமைச்சு, கலா­சார, சமூக, இளையர்­துறை அமைச்சு உள்ளிட்­ட­வற்­று­டன் இணைந்து மனி­த­வள அமைச்சு வரை­ய­றுக்­கும்.

இதற்­கி­டையே, மாதச் சம்­ப­ள­மாக $30,000 அல்­லது அதற்­கும் மேல் பெறு­வோர், ஒன் பாஸ் அட்டைக்கு விண்­ணப்­பிக்­கும்­போது ஒரு விஷ­யத்­தைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். அச்­சம்­ப­ளத்தை ஒரே முத­லா­ளி­யி­டம் இருந்து அவர்­கள் பெற வேண்­டும்.

இது­கு­றித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த மனி­த­வள அமைச்­சின் பேச்­சா­ளர், "ஒரு­வர் ஒரே நிறு­வனத்­தில் பங்­க­ளித்­துள்­ளாரா அல்­லது பங்­க­ளிக்­கப் போகி­றாரா என்­பதை உறு­தி­செய்ய இது உத­வும்," என்­றார்.

மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், ஆக்ஸ்ட் 29ஆம் தேதி ஒன் பாஸ் அட்டை பற்றி அறி­வித்­து இ­ருந்­தார்.

இந்த அட்­டையை வைத்­தி­ருப்­போர், சிங்­கப்­பூ­ரில் ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட நிறு­வனங்­க­ளைத் தொடங்­கு­வ­தற்­கும் பல வேலை­க­ளைச் செய்­வ­தற்­கும் நீக்­குப்­போக்கு அளிக்­கப்­படும்.

இந்த அட்­டைக்­கான விண்­ணப்­பங்­கள் அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி­யில் ­இருந்து தொடங்­கும்.

கலைத் துறை­யைப் பொறுத்­த­வரை, தலை­சி­றந்து விளங்­கி­ய தற்­காக பிர­சித்­தி­பெற்ற அனைத்­து­லக அல்­லது வட்­டா­ரப் பரி­சு­களைப் பெற்­றி­ருப்­பது, உன்­னத சாத­னை­யா­கக் கரு­தப்­படும்.

விளை­யாட்­டுத் துறை­யைப் பொறுத்­த­மட்­டில் சிறந்து விளங்­கும் விளை­யாட்டு வீரர்­கள், பயிற்று­விப்­பா­ளர்­கள், விளை­யாட்டு அறி­வி­ய­லா­ளர்­கள், விளை­யாட்டு­டன் தொடர்­பு­டைய இதர நிபு­ணர்­கள் ஒன் பாஸ் அட்டைக்கு தகுதி பெற­லாம்.

ஆய்வு, கல்வி அல்­லது அறி­வி­யல், தொழில்­நுட்­பத் துறை­களில் உள்­ளோர் இந்த அட்டைக்கு தகு­தி­பெற அறி­வி­யல் மற்­றும் இதர கல்வி ஆய்­வில் பெரிய அள­வில் சாதனை புரிந்­தி­ருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரிந்து வரு­வோர், ஏற்­கெ­னவே தங்­க­ளி­டம் உள்ள வேலை அனு­மதி அட்டை காலா­வ­தி­யா­வ­தற்­கு­முன் ஒன் பாஸ் அட்­டைக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

புதிய ஒன் பாஸ் அட்­டைக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்ட பிறகு, அது வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு ஏற்­கெ­னவே உள்ள வேலை அனு­மதி அட்­டையை அவர்­க­ளது முத­லாளி ரத்து செய்ய வேண்­டும்.

ஒன் பாஸ் அட்­டை­தா­ரர்­க­ளின் எண்­ணிக்­கைக்கு வரம்பு விதிக்­கப்­ப­டாது என்­பதை மனி­த­வள அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யது.

என்­ற­போ­தி­லும், எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் வைத்­தி­ருப்­போ­ரில் மேல்­நி­லை­யில் உள்ள 5 விழுக்­காடு ஊழி­யர்­க­ளின் தர­நி­லைக்கு ஒன் பாஸ் அட்டை ஈடா­னது என்­ப­தால், தற்­போ­தைய இ-பாஸ் அட்­டை­தா­ரர்­க­ளின் எண்­ணிக்­கையை வைத்து பார்க்­கை­யில், 7,000 முதல் 8,000 பேர் வரை ஒன் பாஸ் அட்­டையை வைத்­தி­ருப்­பர் என அமைச்சு எதிர்­பார்க்­கிறது.

ஒன் பாஸ் விண்­ணப்­பங்­கள் பெரும்­பா­லும் நான்கு வாரங்­களுக்குள் பரி­சீ­லிக்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!