சிங்கப்பூர் - இந்திய உறவை மேம்படுத்த புதிய அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம்

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான புதிய உய­ரிய வட்­ட­மேசை கூட்­டம் பல்­வேறு அம்­சங்­களில் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­துவ­து­டன் இணைந்து செயல்­பட்டு இரு­த­ரப்­பும் சம­ப­ல­ன­டைய வகை­செய்­யும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார். உணவு, எரி­சக்­திப் பாது­காப்பு, பசு­மைத் தொழில்­நுட்­பம், மின்­னி­லக்­கத் தொடர்பு உள்­ளிட்ட அம்­சங்­களில் ஒத்­து­ழைக்க இரு நாடு­களும் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக திரு வோங் தெரி­வித்­தார்.

"இரு­த­ரப்­பும் தொடர்ந்து சந்­தித்து ஒத்­து­ழைப்­ப­தற்­கான அம்­சங்­க­ளை மேற்­பார்­வை­யிட சிங்­கப்­பூர்-இந்­திய அமைச்­சர்­நிலை வட்­ட­மேசை கூட்­டத்தை ஆவ­லு­டன் எதிர்­பாக்­கி­றோம்," என்று நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் சொன்­னார்.

"இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் ஒத்­து­ழைக்­க­வி­ருக்­கும் இந்த அம்­சங்­கள் இவ்­விரு நாடு­க­ளுக்­கும் மட்டு­மின்றி பல­த­ரப்­பட்ட அல்­லது பல நாடு­கள் சம்­பந்­தப்­பட்ட முயற்­சி­க­ளுக்கு அடித்­த­ள­மா­க­வும் வழி­காட்­டி­க­ளா­க­வும் அமை­ய­லாம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"அந்த வகை­யில் மேலும் நிலை­யான, செழிப்­பான ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்தை உரு­வாக்க இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் பங்­காற்­ற­லாம்," என்று திரு வோங் கூறி­னார்.

இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்ட ஐந்து நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணத்­தின் கடைசி நாளான நேற்று முன்­தி­னம் அவர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­னார்.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும்     சரு­மான எஸ். ஈஸ்­வ­ரன் ஆகி­யோ­ரு­டன் இணைந்து துணைப் பிர­த­மர் வோங் புதிய இரு­நாட்டு வட்­ட­மே­சைக் கூட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

இந்­தி­யத் தரப்­பில் அந்­நாட்­டின் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர், வர்த்­தக, தொழில் அமைச்­சர் பியுஷ் கோயல் ஆகி­யோர் அந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

தங்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்­பு­களை அடுத்த கட்­டத்­திற்­குக் கொண்டு செல்­வது குறித்து இரு நாடு­களும் சில கால­மா­கக் கலந்து ஆலோ­சித்து வந்­த­தா­கத் திரு வோங் தெரி­வித்­தார். ஒத்­து­ழைப்­பைப் படிப்­ப­டி­யாக மேம்­ப­டுத்த இறு­தி­யில் வட்­ட­மேசை கூட்­டம் நடத்த முடி­வெ­டுத்­த­தாக அவர் கூறி­னார்.

வட்­ட­மேசை கூட்­டம் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார். அதோடு, கூட்­டத்­தின் செயல்­பாட்டு முறை­யும் காலப்­போக்­கில் தேவைக்­கேற்ப மாற­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

உதா­ர­ண­மாக, வருங்­கா­லத்­தில் கூடு­த­லான துறை­சார்ந்த அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளக்­கூ­டும்.

சிங்கப்பூர்-இந்திய சத்திப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் மட்டும் முதன்­மு­றை­யாக நடை­பெற்ற கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர். அத­னால் அவர்­க­ளால் வெளிப்­ப­டை­யான முறை­யில் பேச்­சு­வார்த்தை நடத்த முடிந்­த­தா­கத் திரு வோங் சுட்­டி­னார்.

கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளு­மாறு இரு நாடு­க­ளைச் சேர்ந்த பல வர்த்­த­கத் தலை­வர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

"அமைச்­சர்­கள் கலந்­து­பே­சிய அம்­சங்­களில் கிட்­டத்­தட்ட நிக­ரா­ன­விற்­றில் அவர்­களும் ஒத்­து­ழைக்க பல வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது," என்று துணைப் பிரதமர் திரு வோங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!