‘குடியிருப்பாளர்கள் சந்தித்து, கலந்துறவாட பொது உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம்’

ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ

புதிய ஃபெர்ன்­வேல் சமூக மன்­றத்­தில் அமைந்­துள்ள உண­வங்­காடி நிலை­ய­மும் சந்­தை­யும் சமை­யலுக்குத் தேவை­யான மூலப் பொருள்­களை வாங்க குடி­யி­ருப்­பாளர்­களுக்கு வச­தியை ஏற்­படுத்தித் தரு­கின்றன. அங்­குள்ள குறிப்­பிட்ட சில கடை­களில் இந்த மூலப் பொருள்­க­ளைக் கொண்டு உணவு சமைக்க முடி­யும்.

சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய ஒரு சேவையை வழங்­கும் முதல் உண­வங்­காடி நிலை­யம் மற்­றும் சந்­தை­யாக இது விளங்­கு­கிறது.

ஃபெர்ன்­வேல் சமூக மன்­றத்­தின் அதி­கா­ர­பூர்வ திறப்பு நிகழ்ச்­சி­யில் நேற்று பேசிய பிர­த­மர் லீ சியன் லூங், இந்த வசதி குடும்­பத்­துக்கு உகந்­த­தா­க­வும் காற்­றோட்ட வச­தி­யு­ட­னும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

ஃபெர்ன்­வேல் போன்ற புதிய நகர்­க­ளின் திட்­ட­மி­டு­த­லுக்கு கருத்­தில் கொள்­ளப்­படும் விஷ­யங்­களுக்கு இது ஒத்­துப்­போ­கிறது.

“பொது உள்­கட்­ட­மைப்பு வசதி­களுக்கு இதில் பெரிய பங்குண்டு. குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒரு­வரை­யொருவர் சந்­தித்து, கலந்­து­ற­வாடி, ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த பொது­வான இடங்­கள் தேவை.

“இதைக் கருத்­தில் கொண்டே நாங்­கள் ஃபெர்ன்­வேல் சமூக மன்­றத்தை வடி­வ­மைத்­தோம். இது சமூ­கத்­துக்­கான மையப்­புள்­ளி­யாக விளங்கி, ஃபெர்ன்­வே­லில் இருந்து மட்­டு­மல்ல, நமது குழுத்­தொ­கு­திக்­கும் அதற்­கும் அப்­பாற்­பட்டு குடி­யி­ருப்­பா­ளர்­களை ஒன்­றி­ணைக்க உத­வும்,” என்­றார் பிர­த­மர் லீ.

அங் மோ கியோ குழுத்­தொ­கு­தி­யில் உண­வங்­காடி நிலை­யத்­தை­யும் சந்­தை­யை­யும் கொண்­டுள்ள இரண்­டா­வது சமூக மன்­றம் இது­வா­கும்.

இங்கு 28 உண­வங்­கா­டிக் கடை­களும் 20 சந்­தைக் கடை­களும் உள்­ளன. இவ்­விரு வச­தி­க­ளைக் கொண்­டுள்ள முத­லா­வது சமூக மன்­றம், ஹவ்காங்­கில் உள்ள சி யுவான் சமூக மன்­ற­மா­கும்.

விலைக் கட்­டுப்­ப­டி­யான, வசதி­யு­டைய உண­வுத் தெரி­வு­க­ளைப் பெற உண­வங்­காடி நிலை­யம் அமைக்­கப்­பட குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் கேட்­டுக்­கொண்­ட­தாக அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

ஃபெர்ன்­வேல் சமூக மன்­றத்தைக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விருப்­பமான ஒன்­றாக்க முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சொன்­னார். குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து கிடைத்த கருத்­து­க­ளின் அடிப்­படை­யில் நிகழ்ச்­சி­கள் உரு­வாக்­கப்­பட்டுள்­ளன. எடுத்­துக்­காட்­டாக, நல்­வாழ்வு வகுப்­பு­களும் சமையல்கலை வகுப்­பு­களும் இங்கு இடம்­பெறு­கின்­றன.

24 மணி நேர உடற்­ப­யிற்­சிக்­கூ­டம், மெது­வோட்­டம் ஓடு­வ­தற்­கான திடல் உள்­ளிட்ட இதர வசதி­களும் இங்கு உள்­ளன. குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யம், விளை­யாட்டு இடம், நட­வ­டிக்கை அறை­கள் போன்ற இளம் குடும்­பங்­க­ளுக்­கான சேவை­களும் இங்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

ஃபெர்ன்­வேல் எம்­ஆர்டி நிலை­யம், சிலேத்­தார் மால் கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் இச்­ச­மூக மன்­றம் அமைந்­துள்­ளது. அப்­ப­கு­தி­யில் கூடு­தல் சாலை­கள் திறக்­கப்­பட்­ட­வு­டன் சமூக மன்­றத்­துக்­குச் சென்று­வ­ரு­வது மேலும் வச­தி­யாக இருக்­கும் என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

புவாங்­கோக் டிரைவ் நீட்­டிப்­புப் பணி­க­ளுக்­கான இரண்­டாம் கட்­ட­மும் சிலேத்­தார், தெம்­ப­னிஸ் விரைவுச்­சா­லை­க­ளு­டன் ஃபெர்ன்­வேலை இணைக்­கும் புதிய செங்­காங் வெஸ்ட் டிரை­வும் 2025 இறுதிக்­குள் கட்டி முடிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஃபெர்ன்­வேல் சமூக மன்­றத்­துக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் 2018ஆம் ஆண்டில் தொடங்­கின. ஆனால் கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக பணி­கள் தாம­த­ம­டைந்­தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!