இந்தோனீசிய கலவரம்: நூற்றுக்கு மேல் பலி

இந்­தோ­னீ­சி­யா­வின் கிழக்கு ஜாவா காற்­பந்­துத் திட­லில் மூண்ட கல­வ­ரத்­தின் தொடர் பில் மாண்­டோர் எண்­ணிக்கை 125 என்று கிழக்கு ஜாவா துணை ஆளு­நர் எமில் டார்­டேக் நேற்று மாலை கூறி­னார்.

முன்­ன­தாக, தவ­றா­னக் கணக்­கெ­டுப்­பால் 174 பேர் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­ட­தென ராய்ட்­டர்ஸ் கூறி­யது.

மாண்டோரில் பெரும்­பா­லா­னோர் கூட்ட நெரி­ச­லில் சிக்­கி­யும் மூச்­சுத்­தி­ண­றி­யும் உயி­ரி­ழந்­த­னர். உல­கின் ஆக மோச­மான காற்­பந்து துயர் சம்­ப­வங்­களில் ஒன்­றாக இது வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சனிக்­கி­ழமை இரவு மாலாங் என்­னும் இடத்­தில் உள்ள விளை­யாட்­டுத் திட­லில் உள்­ளூர் காற்­பந்­துப் போட்­டி­கள் நடை­பெற்­ற­போது பெர்­சி­பாயா சுர­பாயா அணி அரேமா காற்­பந்து கிளப் அணியை 3-2 என்­னும் கோல்

கணக்­கில் தோற்­க­டித்­தது.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­களில் முதல்­முறை அரேமா அணி அதன் பரம வைரி­யி­டம் தோற்­ற­தால் அத­னைத் தாங்க இய­லாத ரசி­கர்­கள் திட­லுக்­குள் இறங்கி வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­னர்.

அவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப்­பு­கைக் குண்­டு­களை வீசி னர். அத­னால், பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் திரண்­டி­ருந்த பார்­வை­யா­ளர்­கள் பீதி­ய­டைந்து அரங்­கி­லி­ருந்து வெளி­யேற ஓடி­னர். ஒரே­நே­ரத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வெளி­யே­றும் வாயில் களை நோக்கி ஓடி­ய­தால் தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. கீழே விழுந்த பலர் மிதி­பட்டு உயி­ரி­ழந்­த­னர். மேலும் பலர் மூச்­சுத்­தி­ணறி இறந்­த­னர்.

விளை­யாட்­ட­ரங்­கில் மட்­டும் 34 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் எஞ்­சி­யோர் மருத்­து­வ­ம­னை­களில் மாண்­ட­தா­க­வும் கிழக்கு ஜாவா காவல்­துறை தலைமை அதி­காரி நிக்கோ ஆஃபின்டா கூறி­னார். மேலும், இரு காவ­லர்­கள் உயிரிழந்­த­தா­க­வும் குறிப்­பிட்ட அவர், மாண்­டோ­ரில் ஐந்து வய­துக் குழந்­தை­யும் அடங்­கும் என்­றார்.

கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் காவல்­து­றை­யின் வாக­னங்­களை அடித்து நொறுக்­கி­ய­தோடு பல வாக­னங்­க­ளுக்­குத் தீ வைத்­த­னர். எரிந்து சேத ம­டைந்த அவை நேற்­றுக் காலை எலும்­புக்­கூ­டா­கக் காட்சியளித்­தன.

இதற்­கி­டையே, விளை­யாட்­ட­ரங்­கில் அனு­ம­திக்­கப்­பட்ட அள­வைக்­காட்­டி­லும் கூடு­த­லாக 4,000 பேருக்கு நுழை­வுச்­சீட்டு விற்­கப்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் முகம்­மது மஹ்­ஃபுட் மஹ்­மு­தின் தெரி­வித்­தார். 38,000 பேருக்­குப் பதில் 42,000 பேருக்கு நுழை­வுச்­சீட்டு வழங்­கப்­பட்­ட­தாக அவர் தமது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் குறிப்­பிட்­டார்.

அதே­நே­ரம், காற்­பந்து விளை­யாட்­டுக்­கான பாது­காப்பு அம்­சங்­கள் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று 'கொம்­பாஸ் டிவி' தொலைக்­காட்­சி­யி­டம் இளை­யர், விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் ஸைனு­தீன் அமாலி தெரி­வித்­தார். விளை­யாட்­ட­ரங்­கிற்­குள் பார்­வை­யா­ளர்­களை அனு­ம­திக்­கா­மல் இருப்­பது குறித்­தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

சம்­ப­வம் குறித்து தாம் பெரி­தும் வருந்­து­வ­தா­கக் குறிப்­பிட்ட இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, இதுவே நாட்­டின் கடைசி காற்­பந்­துத் துய­ராக இருக்­கும் என்று தாம் நம்­பு­வ­தா­கக் கூறி­னார். விசா­ரணைக்கு உத்தரவிட்ட அவர், விசாரணை முடி­யும்வரை 'பிஆர்ஐ லிகா 1' காற்­பந்து லீக் ஆட்­டங்­க­ளை­ நிறுத்தி வைக்குமாறு இந்­தோ­னீ­சிய காற்­பந்­துச் சங்­கத்தைக் கேட்டுக்கொண்டார்.

20 வய­துக்­குற்­பட்­டோ­ருக்­கான ஃபிஃபா உல­கக்­ கிண்­ணப் போட்­டி­களை அடுத்த ஆண்டு இந்­தோ­னீ­சியா ஏற்று நடத்­த­வி­ருக்­கும் வேளை­யில் இந்த அசம்­பா­வி­தம் நடை­பெற்­றுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!