பறிபோனது லைமன் நகர்; பின்வாங்கியது ரஷ்யப் படை

ரஷ்யா கைப்­பற்­றிய முக்­கிய கோட்­டை­யான லைமன் நகர் உக்­ரேன் வசம் திரும்ப வந்­துள்­ளது. இந்த வெற்­றியை உக்­ரே­னிய வீரர்­கள் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

உக்­ரே­னி­டம் இருந்து கைப்­பற்­றிய நான்கு வட்­டா­ரங்­களை தன்­னு­டன் இணைத்­துக்­கொண்­ட­தாக மார்­தட்­டி­ய­தற்கு மறு­நாள் ரஷ்­யா­வுக்கு இந்­தத் தோல்வி ஏற்­பட்­டது.

இத­னைத் தொடர்ந்து, குறைந்த சக்திவாய்ந்த அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் சாத்­தி­யம் ரஷ்­யா­வுக்கு இருப்­ப­தாக அதி­பர் புட்­டி­னுக்கு நெருங்­கிய சகா ஒரு­வர் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் தெரி­வித்து உள்­ளது.

உக்­ரே­னின் இரண்­டா­வது பெரிய நகரான கார்க்­கி­வி­லி­ருந்து சுமார் 160 கிலோ­மீட்­டர் தொலை­வில் அமைந்­துள்ள லைமன் நகரை கடந்த மே மாதம் ரஷ்யா கைப்­பற்­றி­யது. அப்­போ­து­மு­தல் ரஷ்­யப் படை­யி­ன­ரின் தரை­வ­ழித் தொடர்­புக்­கும் தள­வா­டப் பயன்­பாட்­டுக்­கும் ஒரு முக்­கிய இணைப்­பாக அந்­ந­கர் இருந்து வந்­தது.

சனிக்­கி­ழமை உக்­ரே­னி­யப் படை­வீ­ரர்­கள் சுற்­றி­வ­ளைத்­த­தைத் தொடர்ந்து ரஷ்­யப்படை பின்வாங்கி அங்­கி­ருந்து வெளி­யே­றி­யது. அந்­ந­க­ரின் மத்­திய பகு­தி­யில் நின்­று­ கொண்டு உக்­ரே­னிய வீரர்­கள் காணொ­ளிப் படம் எடுத்து சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­ட­னர். உக்­ரே­னின் ஆயு­தப்­படை லைமன் நக­ரைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­து­விட்­ட­தாக அதில் அவர்­கள் வெற்­றிக்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தி­னர்.

அங்­கி­ருந்த நக­ர­மன்­றக் கட்­ட­டத்­தின் உச்­சி­யில் பறந்த ரஷ்­யக் கொடியை கீழே இறக்கிய உக்­ரே­னிய வீரர்­கள் அதனை வீசி எறிவதும் அந்­தக் காணொ­ளிப் பதி­வில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்த வெற்றி தொட­ரும் என்­றும் அடுத்த இலக்கு டோன்­பாஸ் வட்­டா­ரம்­தான் என்­றும் உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார். டோன்­பாஸ் வட்­டா­ரம் ரஷ்­யா­வின் பிடி­யி­லுள்ள டொ னேட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய வட்­டா­ரங்­களை ஒட்டி உள்­ளது.

"டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் பறக்­கும் உக்­ரே­னிய கொடி­க­ளின் எண்­ணிக்கை கடந்த வாரம் அதி­க­ரித்­தது. இந்த வாரம் இது இன்­னும் அதி­க­மா­கும்," என திரு ஸெலென்ஸ்கி தமது காணொளி உரை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், லைமன் நகரை உக்­ரேன் கைப்­பற்­றி­யி­ருப்­பது ரஷ்ய ராணு­வத்­திற்கு புதிய தலை­வ­லி­யைக் கொடுக்­கும் என்று அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லாய்ட் ஆஸ்­டின் தெரி­வித்­துள்­ளார்.

"இப்­போ­துள்ள நில­வ­ரம் எங்­க­ளுக்கு உற்­சா­கம் அளிக்­கிறது," என்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!