எஃப்1: சாதனை அளவாக 302,000 பார்வையாளர்கள்

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்­டுக்­கான எஃப்1 கார் பந்­த­யத்­தைக் காண சாதனை அள­வாக 302,000 பேர் திரண்­ட­தாக சிங்­கப்­பூர் கிராண்ட் பிரி அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த மூன்று நாள் நிகழ்­வைக் காண வந்­தோர் எண்­ணிக்கை சிங்­கப்­பூர் இரவு நேர கார் பந்­தய வர­லாற்­றில் இதுவே ஆக அதி­கம்.

இதற்கு முன்­னர் 2008ஆம் ஆண்டு எஃப்1 கார் பந்­த­யம் முதல்­மு­றை­யா­க நடைபெற்ற­போது அத­னைக் காண 300,000 பேர் வந்­ததே இது­வரை சாத­னை­யாக இருந்­தது. இந்த ஆண்­டின் எண்­ணிக்கை அதனை முறி­ய­டித்­து­விட்­டது.

கொவிட்-19 காலத்­தைக் கடந்து ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நடை­பெற்ற போட்­டி­யைக் காண உள்­ளூர் மக்­க­ளுக்கு நிக­ராக உல­கப் பார்­வை­யா­ளர்­களும் வந்து குவிந்­த­னர். மொத்த எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்­டுப் பார்­வை­யா­ளர்­க­ளின் விகி­தம் 49%.

ஆகக் கடை­சி­யாக 2019ஆம் ஆண்டு நடந்த எஃப்1 பந்­த­யத்­தைக் காண 268,000 பேர் வந்­தி­ருந்­த­னர். 2020, 2021 ஆண்­டு­க­ளுக்­கான பந்­த­யம் கொவிட்-19 பர­வல் கார­ண­மாக ரத்து செய்­யப்­பட்­டது.

“இந்த அள­வுக்­குப் பார்­வை­யா­ளர்­கள் திரண்­டி­ருப்­பது நாம் நடத்­தும் கார் பந்­த­யத்­தின் மீதான ஆர்­வத்­தையே பிர­தி­ப­லிக்­கிறது,” என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் அவர் கூறு­கை­யில், “சிங்­கப்­பூர் மீட்­சி­கண்டு வரு­வதை உணர்த்­தும் மிக­வும் அரு­மை­யான அறி­குறி இது. சாதனை அள­வா­கப் பார்­வை­யா­ளர்­கள் வந்­தி­ருப்­பது பரந்த பொரு­ளி­ய­லுக்­கு­ரிய சாத­க­மான அம்­சம்.

“ஹோட்­டல்­களில் தங்­கு­வோர் விகி­தம் மிக­வும் வலு­வ­டைந்­துள்­ளது. சிங்­கப்­பூர் ப­ய­ணத்துறைக் கழ­கத்­தின் தர­வு­க­ளின்­படி, ஹோட்­டல் அறை­க­ளின் வாட­கை­யும் சாதனை அள­வாக ஓர் இர­வுக்கு சரா­ச­ரி­யாக $440 என்று உயர்ந்­

தி­ருக்­கிறது,” என்­றார் திரு ஈஸ்

­வ­ரன்.

சந்­திப்­புக் கூட்­டங்­கள், மாநா­டு­ கள் மற்­றும் கண்­காட்­சி­கள் என்­னும் அம்­சங்­களை உள்­ள­டக்­கிய குறைந்­த­பட்­சம் 25 நிகழ்­வு­கள் இடம்­பெற்­ற­தை­யும் பந்­தய காலத்­தை­யொட்டி கிட்­டத்­தட்ட 90,000 பேரா­ளர்­கள் இங்கு வரு­கை­பு­ரிந்­துள்­ள­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

“ஒட்­டு­மொத்­தத்­தில், இந்த ஆண்­டின் ஃபார்முலா 1 பந்­த­யம் மிக­வும் வலு­வான ஒன்­றாக அமைந்­துள்­ளது. உல­கம் முழு­வ­தும் இருந்து வலு­வான ஆத­ரவு கிடைத்­துள்­ளது.

“சிங்­கப்­பூர் மீண்­டும் பழைய பாதைக்­குத் திரும்­பி­விட்­டது என்று சொல்­ல­லாம்,” என்­றும் திரு ஈஸ்

­வ­ரன் தெரி­வித்­தார்.

2008ல் இர­வு­நேர கார் பந்­த­யம் தொடங்­கப்பட்டது­மு­தல் சுற்­றுப்­ப­ய­ணி­கள் மூலம் $1.5 பில்­லி­ய­னுக்­கும் மேல் வரு­வாய் கிடைத்­துள்­ளது.

அத்­து­டன் பந்­த­யம் நெருங்­கும் சம­யத்­தில் வரும் ஒவ்­வொரு வார­இறு­தி­யி­லும் பந்­த­யச் சுற்­றின் வட்­டா­ரத்­தில் 30,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு வேலை­வாய்ப்­பும் கிட்­டி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எஃப்1 கார் பந்­த­யத்­திற்­காக ஒவ்­வோர் ஆண்­டும் செல­வா­கும் $135 மில்­லி­ய­னில் 60% தொகையை வர்த்­தக, தொழில் அமைச்­சும் சிங்­கப்­பூர்­ ப­யணத்துறைக் கழகமும் வழங்­கு­கின்­றன.

எஞ்சிய தொகைக்கு ‘சிங்கப்பூர் கிராண்ட் பிரி’ அமைப்பு பொறுப்பு ஏற்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!