தொழில்களை ஈர்க்க இந்தியா $1.6 டிரில்லியன் திட்டம்

இந்­தி­யா­வில் பாதி­ய­ளவு உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­கள் தாம­த­ம­டைந்­துள்­ளன. நான்­கில் ஒரு திட்­டத்­துக்­கான செலவு எதிர்­பார்க்­கப்­பட்ட அள­வை­விட கூடி­விட்­டது.

நெடுங்­கா­ல­மாக நீடிக்கும் இந்­தப் பிரச்­சினைக்கு தொழில்­நுட்­பம் தீர்­வாக அமை­யும் என்று இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நம்­பு­கி­றார்.

ரூ.100 டிரில்­லி­யன் (S$1.6 டி.) மதிப்­பு­டைய 'கதி சக்தி' எனும் பெரும் திட்­டத்­தின்­கீழ், 16 அமைச்சு­களை இணைக்­கும் மின்­னி­லக்­கத் தளம் ஒன்றை மோடி அர­சாங்­கம் உரு­வாக்­கு­கிறது.

திட்­டங்­க­ளின் வடி­வ­மைப்பு, அவற்­றுக்­கான ஒப்­பு­தல், செல­வின மதிப்­பீடு ஆகி­ய­வற்­றில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இந்­தத் தளம் தீர்வு வழங்­கும்.

கொவிட்-19 கார­ண­மாக சீனா அதன் கத­வு­களை இன்­ன­மும் முழு­மை­யா­கத் திறக்­காத நிலை­யில், திட்­டங்­களை விரைந்து முடிப்­ப­தால் இந்­தி­யா­வுக்கு ஒரு சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­தித் தரும்.

மேலும், நிறு­வ­னங்­கள் சீனா­வில் மட்­டு­மல்­லாது மற்ற நாடு­க­ளி­லும் முத­லீடு செய்­யும் கொள்­கை­யைக் கடைப்­பி­டிப்­ப­தா­லும் இந்­தி­யா­வுக்கு அனு­கூ­லம் கிடைக்­கிறது.

ஆசி­யா­வில் மூன்­றா­வது பெரிய பொரு­ளி­யல் நாடான இந்­தியா, படியாகக்கூடிய ஊழியர் அணியைக் கொண்டிருப்பதுடன், ஆங்­கி­லம் பேசும் திற­னா­ளர் அணி­யை­யும் பெற்றுள்­ளது.

'கதி சக்தி' திட்­டத்­தின்­கீழ், எடுத்­துக்­காட்­டாக, தொலைபே­சிக் கம்­பி­வ­டங்­கள் அல்­லது எரி­வா­யுக் குழாய்­களை அமைப்­ப­தற்­காக, புதிய சாலை மீண்­டும் தோண்­டப்­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்ய அர­சாங்­கம் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தும் என்று இந்­தி­யா­வில் முத­லீ­டு­களை ஊக்­கு­விக்­கும் அர­சாங்க அமைப்பு ஒன்று கூறி­யது.

இதற்­கி­டையே, சீனா­வின் செல்­வாக்­கும் அதி­க­ரித்­து­வ­ரும் வேளை­யில், இந்­தி­யா­வும் மங்­கோ­லி­யா­வும் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்தி வரு­கின்­றன.

கடந்த ஆண்டு தொடக்­கத்­தில், உள்­ளூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட கொவிட்-19 தடுப்­பூ­சி­களை மங்­கோ­லி­யா­வுக்கு இந்­தியா அனுப்ப முடி­வெ­டுத்­தது.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் இந்­தி­யா­வி­ட­மி­ருந்து முதல் தொகு­தி­யாக 150,000 கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­களை மங்­கோ­லியா பெற்­றுக்­கொண்­டது.

தெற்­கா­சி­யா­வி­லும் அதற்கு அப்­பாற்­பட்­டும் சீனா­வின் செல்­வாக்கை எதிர்­கொள்ள மங்­கோ­லி­யா­வை ஒரு முக்­கிய நாடாக இந்­தியா கருது­கிறது.

அதே­வே­ளை­யில் ரஷ்­யா­வை­யும் சீனா­வை­யும் அதி­கம் சார்ந்­தி­ருப்­ப­தைத் தவிர்க்க, இந்­தி­யாவை தனது பங்­கா­ளித்­துவ நாடாக்­கிக்­கொள்ள மங்­கோ­லியா விரும்­பு­கிறது.

கடந்த மாதம் மங்­கோ­லி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட முதல் தற்­காப்பு அமைச்­ச­ராக திரு ராஜ்­நாத் சிங் விளங்­கி­னார். இந்­தி­யா­வின் உத­வி­யு­டன் மங்­கோ­லி­யத் தலை­ந­கர் உலான் பாத்தோரில் இணை­யப் பாது­காப்­புப் பயிற்சி மையத்தை அவர் திறந்து வைத்­தார்.

இணையத் தாக்குதல்களை எதிர்நோக்கிய மங்கோலியாவுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவை இது காட்டுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!