மலேசியா: மாமன்னர்-பிரதமர் சந்திப்பில் அரசியல் பேச்சில்லை

மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சஃப்ரி யாக்கோப் அந்நாட்­டின் மாமன்­ன­ரை நேற்று சந்­தித்­தார்.

நாடா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது பற்றி இரு­வ­ரும் பேச்சு நடத்­தக்­கூடும் என்ற எதிர்­பார்ப்­பின் அடிப்­படை­யில் அதற்­கான அறி­கு­றி­கள் ஏதே­னும் தென்­ப­டுமா என்­பதைப் பல­ரும் அணுக்­க­மா­கக் கண்­காணித்து வந்­த­னர்.

அந்­தச் சந்­திப்பு 45 நிமி­டங்­கள் நடந்­தது. அதை­ய­டுத்து பிர­த­மர், ஆளும் அம்னோ கட்சி தலை­மை­யகத்­தில் இதர தலை­வர்­க­ளைச் சந்தித்­தார்.

மாமன்­னர்-பிர­த­மர் சந்­திப்­பின்­போது நாடா­ளு­மன்றக் கலைப்பு பற்றி எது­வும் விவா­திக்­கப்­ப­ட­வில்லை என்று பிர­த­மர் அலு­வ­ல­கம், அரண்­ம­னை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­களை மேற்­கோள்­காட்டி நேற்று தக­வல்­கள் வெளி­யா­யின.

மலே­சி­யா­வில் முன்­ன­தாக நேற்று பர­ப­ரப்­பாக பல நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றன. ஆண்டு இறு­தி­யில் ஏற்­ப­டக்­கூ­டிய வெள்­ளம் பற்­றிய எதிர்­பார்ப்பு குறித்து காலை­யில் மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அகம்­மது ஷாவுக்கு விளக்­கப்­பட்­டது. பிறகு பிர­த­மர், நண்­ப­க­லில் நிதி­ய­மைச்­சர் சப்­ருல் அஜிசை சந்­தித்து 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டம் பற்றி பேசி­னார்.

இந்­தச் சந்­திப்­புக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பிர­த­மர், மாமன்­ன­ரு­டன் கூடிய சந்­திப்­பின்­போது நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்­பது பற்றி தான் விவா­திக்­கக்­கூ­டும் என்று கோடி­காட்டி இருந்­தார்.

என்­றா­லும் அதன் கார­ண­மாக வர­வு­செ­ல­வுத் திட்ட தாக்­க­லில் ஏதே­னும் மாற்­றம் ஏற்­ப­டுமா என்­பது பற்றி கருத்­து­ரைக்க அவர் மறுத்­து­விட்­டார்.

பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மாமன்­ன­ரு­டன் கூடிய சந்­திப்பு அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முன்­பாக வாரா­வா­ரம் இடம்­பெ­றும் வழக்­க­மான ஒன்­று­தான் என்று தெரி­வித்துவிட்டார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டம், திட்­ட­மிடப்­பட்­ட­தைப் போல இன்று வெள்­ளிக்­கி­ழமை தாக்­க­லா­குமா என்று கேட்­ட­தற்கு, அதை இப்­போதே சொல்­லி­விட்­டால் பர­ப­ரப்பு எது­வும் இருக்­காது என்று பிர­த­மர் நேற்றுக் கூறி­னார்.

இத­னி­டையே, வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட்­டா­லும் வரும் வாரங்­களில் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இன்­ன­மும் இருக்­கும் என்றே தெரி­கிறது. மலே­சி­யா­வில் தேர்­தல் நடக்க இன்­னும் ஓராண்டு காலம் இருக்­கிறது.

இருந்­தா­லும் அம்னோ தலை­வர் ஸாகித் ஹமிடி இந்த ஆண்­டில் தேர்­தலை நடத்த விரும்­பு­கி­றார்.

இதற்கு ஆத­ர­வாக கட்­சி­யில் ஒரு பிரிவு அம்னோ துணைத் தலை­வரை நெருக்கி வரு­கிறது.

அம்னோ செப்­டம்­பர் 30ஆம் தேதி உச்ச மன்­றக் கூட்­டத்தை நடத்­தி­யது. அம்னோ தலை­வர், துணைத் தலைவர், திரு இஸ்­மா­யில் உள்­ளிட்ட மூன்று துணைத் தலை­வர்­கள் அடங்கிய ஐவர் குழு சந்­தித்­தது. தேர்­த­லுக்கு ஆயத்­த­மா­கும்­படி பிறகு மாவட்ட தலை­வர்­க­ளி­டம் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!