இல்லப் பணிப்பெண்களுக்கு மாதத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு நாள் கட்டாய ஓய்வு: மனிதவள அமைச்சு

அனைத்து வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கும் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஓய்வு வழங்கப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

இல்லப்பணிப்பெண்ணும் அவர்களின் முதலாளிகளும் பரஸ்பர ஒப்பந்தத்தின் பேரில் ஓய்வு நாள் எப்போது எடுத்துக்கொள்வது என்பது நிர்ணயிக்கப்படவேண்டும்.

மாதாந்திர ஓய்வு நாள் இரு தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ப நீக்குப்போக்காக எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஓய்வு நாள் ஒரு முழு நாளாக அல்லது இரு அரை நாள்களாக எடுத்துக்கொள்ளப்படலாம். வாரத்தில் எந்த நாளிலும் ஓய்வு நாள் அமையலாம்.

ஓய்வு நாளில் இல்லப்பணிப்பெண் வெளியே செல்லாமல் வீட்டிலேயும் கழிக்கலாம்.

மேலும் மாதாந்திர ஓய்வு நாள் அதிக பட்சம் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்கலாம். அதாவது ஒரு மாதம் ஓய்வே எடுக்காத இல்லப்பணிப்பெண் அடுத்த மாதம் முடிவதற்குள் அந்த ஓய்வு நாளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இல்லப்பணிப்பெண்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் புத்துணர்வு பெற்று வருவதற்காகவும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆதரவுக் கட்டமைப்புகளைப் பணிபெண்கள் பெறுவதற்காகவும் அமைச்சு கடந்த ஆண்டு அறிவித்ததன் ஒரு கட்டமாக இந்த புதிய நடவடிக்கை அமைகிறது.

இல்லப்பணிப்பெண்கள் வேலை தொடங்குவதற்கு முன்னரே ஓய்வு நாள் நிர்ணயிக்கப்படவேண்டும். இந்த ஓய்வு நாள் மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் இந்த இணைப்பில் பதிவு செய்யப்படவேண்டும்.

இது குறித்த வழிகாட்டிகளை அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!