தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை: 11 நிலையங்கள் திறப்பு

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்­ஆர்டி ரயில் பாதை­யின் (டிஈ­எல்) மூன்­றாம் கட்­டத்­தில் உள்ள 11 ரயில் நிலை­யங்­கள் நவம்பர் 13ஆம் தேதி பயணி­க­ளுக்­குத் திறக்­கப்­படும்.

அந்நிலையங்கள் திறக்­கப்­ப­டு ­வ­தைக் கொண்­டா­டும் வகை­யில், நவம்­பர் 11ஆம் தேதி ஒரு நாள் மட்­டும் புதிய ரயில் நிலை­யங்­ களுக்கு இடையே பய­ணி­கள் இல­வ­ச­மா­கப் பய­ணம் செய்­ய­லாம்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இதை நேற்று அறி­வித்­தது.

மொத்­தம் 13.2 கிலோ­மீட்­டர் தூர­முள்ள ரயில் பாதை செயல்­ ப­டத் தொடங்­கும்.

திறக்­கப்­ப­ட­வுள்ள 11 நிலை­யங்­கள் ஸ்டீவன்ஸ், நேப்­பி­யர், ஆர்ச்­சர்ட் பொலி­வார்ட், கிரேட் வோர்ல்ட், ஹேவ்­லாக், ஊட்­ரம் பார்க், மேக்ஸ்­வெல், ஷென்­டன் வே, மரினா பே, கார்­டன்ஸ் பை தி பே ஆகி­யவை.

அவற்­றில் நான்கு நிலை­யங்­கள், ரயில் நிலைய முனை­யங்­கள் ஆகும்.

ஸ்டீவன்ஸ் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து டௌன்­ட­வுன் பாதைக்கு மாற­லாம். ஆர்ச்­சர்ட் நிலை­யத்­தில் வடக்கு-தெற்­குப் பாதைக்கு மாற­லாம். கிழக்கு-மேற்கு, வட-கிழக்கு ரயில் பாதை­க­ளுக்­குச் செல்ல ஊட்­ரம் பார்க்­கைப் பயன்­ப­டுத்­த­லாம்.

வட்­டப் பாதை, வடக்கு- கிழக்­குப் பாதைக்கு இணைப்­பாக மரினா பே செயல்­படும்.

ஊட்­ரம் பார்க் முதல் மேக்ஸ்­வெல் ரயில் நிலை­யம் வரை நேற்று பய­ணம் செய்த போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், சிங்­கப்­பூ­ரின் ரயில் கட்­ட­மைப்­புக்கு டிஈஎல் பாதை முக்­கியமான ஒன்று என்றார்.

மற்ற ரயில் பாதை­களில் உள்ள முக்­கிய நிலை­யங்­க­ளு­டன் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை இணைக்­கப்­பட்­டி­ருக்­கும் என்­றார் திரு ஈஸ்­வ­ரன். மேலும் டிஈ­எல் ரயில்­பா­தை­யின் மூன்­றா­வது கட்­டம் திறக்­கப்­ப­டு­வ­தால் சுமார் 8,000 குடும்­பங்­க­ளின் பயண நேரம் குறை­யும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

உதா­ர­ணத்­துக்கு உட்­லண்ட்ஸ் சவுத் நிலை­யத்­தி­லி­ருந்து ஆர்ச்­சர்ட் செல்­லும் நேரம் 50 நிமி­டத்­தி­லி­ருந்து 35 நிமி­ட­மா­கக் குறை­யும்.

புதிய ரயில் நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தைக் கொண்­டா­டும் வகை­யில் நவம்­பர் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் பொது­மக்­கள், அவற்­றுக்கு இடையே இல­வச மாகப் பய­ணம் செய்­ய­லாம். சிறப்பு நிகழ்ச்­சி­களும் இடம்­பெ­றும்.

இல­வ­சப் பய­ணம் மூலம் புதிய ரயில் நிலை­யங்­கள் பற்றி அறிந்­து­கொள்­ளும் வாய்ப்பை பொது­மக்­கள் பெறு­வர் என்று நிலப் போக்­கு வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!