ஆறு மாதம் முதல் 4 வயது சிறார்க்கு வரும் 25ஆம் தேதி முதல் தடுப்பூசி மழலையருக்குத் தடுப்பூசி

ஆறு மாதம் முதல் நான்கு வயது வரை­யி­லான மழ­லை­யர்க்­கான தடுப்­பூசி நடவடிக்கை வரும் 25ஆம் தேதி தொடங்­கப்­படும்.

அவர்­களுக்கு மொடர்னா நிறு­வ­னத்­தின் ஸ்பைக்­வேக்ஸ் தடுப்­பூ­சி முதல் இரண்டு தவ­ணை­க­ளா­கச் செலுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

மேலும் ஐந்து வயது முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­கள் 25ஆம் தேதி முதல் ஃபைசர்-பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி தடுப் பூ­சியை பூஸ்­டர் தடுப்­பூ­சி­யா­கப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

ஆறு மாதத்­துக்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் எனும் கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான நிபு­ணர் குழு செய்த பரிந்­துரையை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள குழந்­தை­கள் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான குறைந்­த­பட்ச பாது­காப்பு பெறு­வதை அது உறு­தி­செய்­யும் என்­றது அமைச்சு.

அவ்­வ­யது சிறார்க்கு மொடர்னா நிறு­வ­னத்­தின் ஸ்பைக்­வேக்ஸ் தடுப்­பூசி ஏற்­றது என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

மொடர்­னா­வின் ஸ்பைக்வேக்ஸ் தடுப்­பூ­சியை, ஆறு மாதம் முதல் ஐந்து வய­துள்ள சிறு­வர்­க­ளுக்கு, ஒரு தவ­ணைக்கு 25 மைக்­ரோ­கி­ராம் எனும் அள­வில் செலுத்த வேண்­டும் என்­றும் இரண்டு தடுப்­பூ­சி­க­ளுக்­கும் எட்டு வாரம் இடை­வெளி இருக்க வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் ஐந்து வய­தி­லி­ருந்து 11 வயது வரை­யி­லான சிறு­வர்­ களுக்கு பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்று நிபு­ணர் குழு பரிந்­து­ரைத்­த­தை­யும் தான் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது

10ஆம் தேதி முதல்

முழு வழக்கநிலை

அத்­து­டன் வரும் 10ஆம் தேதி திங்­கட்­கி­ழமை முதல் தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான அனைத்து நட­வ­டிக்­கை­களும் அகற்­றப்­படும் என்­றும் அமைச்சு அறி­வித்­தது.

500க்கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்­கள் கொண்ட நிகழ்ச்­சி­கள், நட­னங்­கள் இடம்­பெ­றும் இர­வு­நே­ரக் கேளிக்கை விடு­தி­கள், உணவங்காடி நிலையங்கள் உள்ளிட்ட உண­வு­பா­னக் கடை­களில் அமர்ந்து உண்­ணு­தல் ஆகி­ய­வற்­றுக்கு தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருந்­தன.

அன்றாட வழக்கநிலைக்குத் திரும்புவதால் அந்நடவடிக்கைகள் அகற்றப்படுவதாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!