ஒற்றுமையை வலுப்படுத்த கூடுதல் விடுப்பு யோசனை

சிங்­கப்­பூ­ரின் மர­பு­டைமை, கலா­சா­ரத்தலங்­க­ளைச் சென்று பார்க்­க­வும் சிங்­கப்­பூர் அடை­யாளத்­தைப் போற்­ற­வும் எல்லா சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சம்­ப­ளத்­

து­டன் கூடிய இரண்டு விடு­முறை நாள்­கள் கூடு­த­லா­கத் தேவைப்­ப­டலாம்.

இயூ டீ சமூக மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற 'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­றோர் முன்­வைத்த முக்­கிய பரிந்­து­ரை­களில் இது­வும் ஒன்று. குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் இதே­போன்ற சுமார் 20 கலந்­து­ரை­யா­டல்­களை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

சிங்­கப்­பூ­ரின் ஒற்­று­மையை மேம்படுத்துதல், அடுத்த பத்­தாண்­டு­கள் மற்­றும் அத­னை­யும் கடந்த வருங்­கா­லத்­திற்­கான திட்­டங்­களை வகுத்­தல் போன்­றவை தொடர்­பான கருத்­து­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் சிங்­கப்­பூரர்­கள் வெளிப்­ப­டுத்­து­வற்கு ஏது­வாக இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்டு வரு­கிறது.

மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொகு தியில் மக்­கள் கழ­கம் நேற்று நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் 136 பேர் கலந்­து­கொண்­ட­னர். இவர்­களில் ஆகச்சி றி­ய­வ­ரின் வயது 16; ஆகப்­பெ­ரி­ய­வ­ரின் வயது 75.

பரா­ம­ரிப்பு, ஒற்­றுமை, திற­ன­ளித்­தல் போன்­றவை உள்­ளிட்ட ஆறு பிர­தான அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது.

இவற்­றில் ஒற்­று­மையை வலுப் படுத்­தும் அம்­சம் தொடர்­பாக யோசனை தெரி­வித்­த­வர்­கள், கலா­சா­ரம் பற்றி அதி­கம் தெரிந்து கொள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு சம்­ப­ளத்­து­டன் கூடிய இரண்டு நாள் விடு­முறை கூடு­த­லாக வழங்­கப்­ப­ட­லாம் என்­ற­னர்.

சிங்­கப்­பூர் அடை­யா­ளத்­தைப் பகிர்ந்­து­கொள்­வ­தன்­வழி மக்­கள் சிறந்த முறை­யில் ஒருங்­கி­ணைய இந்த விடு­முறை நாள்­கள் உத­வும் என்­பது அவர்­க­ளின் கருத் தாக இருந்­தது.

தேசிய அடை­யா­ளங்­க­ளைத் தெரிந்­து­கொள்­வ­தோடு

மர­பு­டை­மைத்­த­லங்­க­ளுக்­கும் கலா­சா­ரத்தலங்­க­ளுக்­கும் செல்­ல­வும் இந்த நாள்­களை சிங்­கப்­பூ­ரர்­கள் பய­னுள்ள முறை­யில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும் என்­ற­னர் அவர்­கள்.

திற­ன­ளித்­தல் என்­னும் அம்­சம் தொட்­டுப் பேசி­ய­வர்­கள், பள்­ளி­களில் மாற்­றங்­கள் செய்ய பரிந்­து­ரைத்­த­னர். குறிப்­பாக, தொடக்­கப் பள்­ளி­களில் நேரடி திறன்­ மேம்பாட்டுப் பயிற்சி தொடர்­பான பாடங்­களை அறி­மு­கம் செய்­ய­லாம் என அவர்­கள் யோசனை தெரி­வித்­த­னர்.

இதன்­மூ­லம், ஊழி­ய­ர­ணி­யில் நுழை­யும் முன்­னரே வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரி­டத்­தில் திறன் களை வளர்க்­க­லாம் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

இதுபோன்ற தேசிய கலந்­

து­ரை­யா­ட­லில் கலந்­து­கொள்­வது எல்லாத் தரப்பு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் அவ­சி­யமானது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரிவித்­தார்.

நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்று கருத்­து­க­ளைப் பகிர்ந்து­கொண்ட அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்த அவர், "கொள்­ளை­நோய்க்­குப் பிறகு புதிய பாதை­யில் அடி­யெ­டுத்து வைக்­கும் நமக்கு ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் என்ன நினைக்­கிறார்­ என்­பதை அறிந்­து­கொள்­வது முக்கியம்," என்­றார்.

'எல்லா சிங்கப்பூரர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய இரு நாள்கள் வழங்கலாம்'

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!