நான்கறை, அதற்கும் சிறிய மறுவிற்பனை வீடுகளின் விலைமீது வீவக கவனம்

அண்­மைய சொத்­துச் சந்தை தணிப்பு நட­வ­டிக்­கை­யின் விளை­வாக விலை­கள் ஏறியுள்ளனவா என்­பதை அறிய நான்­கறை மற்­றும் அதை­விட சிறிய வீவக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

தனி­யார் சொத்து உரி­மை­

யா­ளர்­கள் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­கள் ஐந்­தறை மற்­றும் அதை­விட பெரிய வீவக மறு­விற்­பனை வீடு­க­ளுக்­கான தேவை­யைக் குறைக்­க­லாம்.

அதே­வேளை, இதற்கு மாறாக நான்­கறை மற்­றும் அதை­விட சிறிய வீடு­க­ளுக்­கான தேவை­யும் விலை­யும் உய­ரும் சாத்­தி­யம் இருப்­ப­தாக எழுந்த கருத்­தைத் தொடர்ந்து இந்­தக் கண்­கா­ணிப்­புக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

வீடு வாங்க விரும்­பு­வோ­ரும் சொத்­துச் சந்­தைப் பகுப்­பாய்­வா­ளர்­களும் இந்­தக் கருத்­தை வெளிப்படுத்தி இருந்தனர்.

தனி­யார் சொத்து உரி­மை­யா­ளர்­கள், தங்­க­ளது வீட்டை விற்று­ விட்டு வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்க விரும்­பி­னால் அவர்­கள் அந்த வீட்­டின் விற்

­ப­னைக்­குப் பிறகு 15 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

செப்­டம்­பர் 30 முதல் இந்­தப் புதிய விதி நடப்­பில் உள்­ளது.

இருப்­பி­னும், 55 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் தங்­க­ளது தனி­யார் சொத்­தி­லி­ருந்து நான்­கறை அல்­லது அதற்­கும் குறைந்த அள­வுள்ள வீவக மறு­விற்­பனை வீட்­டிற்கு மாறிக்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

15 மாத காலக் காத்­தி­ருப்பு பற்றி குறிப்­பிட்­டுப் பேசிய திரு லீ, "இந்த நட­வ­டிக்கை வீடு­

க­ளுக்­கான தேவையை தற்­கா­லி ­க­மாக மட்­டுப்­ப­டுத்­தும்.

"அதே­நே­ரம் மூத்­தோ­ரின் ஓய்வு வாழ்க்­கைக்­குப் போது­மான வசதி செய்து ­கொ­டுக்­கப்­பட வேண்­டும் என்­பதை நாம் ஒப்­புக்­கொள்ள வேண்­டும். பொருத்­த­மான சிறிய வீடு­களை, அதா­வது நான்­கறை அல்­லது அதற்­கும் குறைந்த அறை வீடு­க­ளுக்­கான தெரிவை நாம் அவர்களுக்கு வழங்­கு­வது அவ­சி­யம்," என்­றார் டெஸ்­மண்ட் லீ.

'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' நட­

வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக வீட­மைப்புப் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இளை­யர் பங்­கேற்ற கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் கலந்துகொண்­டார். அத­னை­யொட்டி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் அவர் பேசி­னார்.

புதிய நட­வ­டிக்கை கார­ண­மாக எதிர்­வி­ளை­வு­க­ளுக்­கான சாத்­தி­யம் உண்டா என்று வின­வி­ய­போது, "சந்தை நில­வ­ரத்தை நாம் கண்­கா­ணிக்க வேண்­டும், கண்­கா­ணித்தே ஆக­வேண்­டும்," என்­றார் திரு லீ.

வீவக மறு­விற்­பனை வீடு­களை வாங்­கும் தனி­யார் சொத்து உரி­மை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஈராண்­டு­க­ளாக இரட்­டிப்­பாகி வரு­கிறது என்­றார் அவர்.

"இது சொத்து கைமாற்­றத்­தில் எதி­ரொ­லிக்­கும் என்­பது நிச்­ச­யம்.

"தனி­யார் சொத்தை விற்­று­விட்டு வீவக மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் நுழை­யும் அவர்­கள், பொது­வாக, வீட்­டின் மதிப்­பீட்­டிற்கு மேல் அதிக தொகை தரத் தயா­ராக இருப்­பார்­கள்.

"வீவக மறு­விற்­பனை வீட்டை வாங்­கும் 10ல் ஒரு­வர் இந்த ரகத்­தைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பார்," என்று திரு லீ விளக்­கி­னார்.

இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீவக மறு­விற்­பனை விலை­கள் 7.8 விழுக்­காடு ஏற்­றம் கண்­ட­தைத் தொடர்ந்து புதிய சொத்­துச் சந்­தைத் தணிப்பு நட­

வ­டிக்­கை­கள் செப்­டம்­பர் 30ல் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

தனி­யார் சொத்தை விற்­று­விட்டு அதிக பணத்­து­டன் வீவக மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் சிலர் நுழைந்­த­தும் கட்­டு­மா­னத் துறை­யில் நிகழ்ந்த கொள்­ளை­நோய் தொடர்­பான இடை­யூ­று­களும் இந்த ஏற்­றத்­திற்கு முக்­கிய கார­ணங்­க­ளாக இருந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!