ஆயுளை பத்து வாரம் குறைத்த கொரோனா

சிங்­கப்­பூர்வாசி­க­ளின் ஆயுள், வரலாற்­றி­லேயே முதன்­மு­த­லாக சென்ற ஆண்­டில் குறைந்து இருக்­கிறது. கொவிட்-19 கிருமி காரணமாக வழக்­கத்­திற்கு மாறாக கூடுதல் மரணங்­கள் இடம்­பெற்றதே, 60 ஆண்­டு­கள் காணாத இந்­தக் குறை­வுக்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர்வாசி­க­ளின் பிறப்­பின் போது எதிர்­பார்க்­கப்­படும் ஆயுள் 2019ல் கொவிட்-19க்கு முன் 83.7 ஆண்­டு­க­ளாக இருந்­தது.

இது சென்ற ஆண்­டில் 83.5 ஆண்­டு­க­ளாக சுமார் 10 வாரம் குறைந்­து­விட்­டது. 1957ஆம் ஆண்டுக்­குப் பிறகு பிறப்­பின்­போது ஆயு­ளில் இடம்­பெற்­றிருக்­கும் முத­லா­வது சரிவு இது­தான்.

இந்த விவ­ரங்­களை மக்­கள்­தொகை போக்கு 2022 அறிக்கை தெரி­வித்­தது. அந்த அறிக்­கையை புள்­ளி­வி­வ­ரத் துறை செப்­டம்­பர் மாதப் பிற்­ப­கு­தி­யில் வெளி­யிட்­டது.

ஆயுள் என்­பது மூன்­றாண்டு காலத்­தில் மரண விகித அடிப்­படை­யில் கணக்­கி­டப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்­டுக்­கான புள்ளி­வி­வ­ரங்­கள் முதற்­கட்ட புள்­ளி­விவரங்­கள்தான். அவை 2020 முதல் 2021 வரைப்­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் அடிப்­ப­டை­யில் தொகுக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

2020 முதல் 2022 வரைப்­பட்ட தக­வல்­கள் எல்­லாம் சேர்க்­கப்­பட்டு இறுதி விவ­ரம் அடுத்த ஆண்டில்­தான் தெரி­ய­வ­ரும் என்று புள்ளி­வி­வ­ரத் துறை­யின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று தலை­வி­ரித்­தா­டி­ய­போது கூடு­தல் மர­ணங்­கள் ஏற்­பட்­டு­விட்­டன. இத­னால் மரண விகி­தம் அதி­ க­ரித்­து­விட்­டது.

ஆகை­யால், 2020, 2021ஆம் ஆண்­டு­களில் குழந்தைகள் பிறக்­கும்­போது எதிர்­பார்க்­கப்­பட்ட ஆயுள் குறைந்து­விட்­டது.

கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டது முதல் பல கார­ணங்­க­ளால் ஏற்­பட்ட மர­ணங்­க­ளுக்­கும் தொற்று இல்­லா­மல் இருந்­தி­ருந்­தால் ஏற்­பட்டு இருக்­கக்­கூ­டிய மர­ணங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட வேறு­பாட்டை கூடு­தல் மர­ணங்­கள் குறிக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் 2020ஆம் ஆண்டு முதல் 2022 ஜூன் மாதம் வரை 2,490 கூடு­தல் மர­ணங்­கள் நிகழ்ந்­த­தாக செப்­டம்­பர் மாதம் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அந்தக் கூடு­தல் மர­ணங்­களில் ஏறக்­கு­றைய ஐந்­தில் மூன்று மர­ணங்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்றே நேரடிக் கார­ணம்.

கொவிட்-19 தொற்­றி­ய­தற்­குப் பிறகு 90 நாள்க­ளுக்­குள் இதர நோய்­கள் கார­ண­மாக மாண்ட நோயா­ளி­கள் மற்­ற­வர்­கள்.

சென்ற ஆண்­டில் நிகழ்ந்த மர­ணங்­க­ளுக்­கான முக்­கிய கார­ணங்­களில் கொவிட்-19 ஐந்­தா­வது இடத்­தைப் பிடித்­தது என்று அமைச்­சின் அறிக்கை கூறியது.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­களுக்கு இடையே, ஏற்­பட்ட மர­ணங்­களில் 3.5% கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­பட்­டன.

புற்­று­நோய், இதய நோய், சளிக்­காய்ச்­சல், வாதம் தொடர்­பான நோய்­கள் ஆகி­யவை மர­ணங்­களுக்­கான முதல் நான்கு முக்­கிய கார­ணங்­களாக இருந்­தன.

சென்ற ஆண்­டில் 24,292 பேர் மர­ணம் அடைந்­தார்­கள். இந்த எண்­ணிக்கை 2020ல் 22,054 ஆக இருந்­தது. சென்ற ஆண்டு மர­ணம் 10.1% அதி­க­ரித்­தது.

பிறப்­பில் எதிர்­பார்க்­கப்­படும் ஆயுள் என்­பது ஒரு­வ­ரின் உண்­மை­யான வாழ்­நாளைக் கணிப்­ப­தாக இராது என்­பதை புள்­ளி­விவரத் துறை­யின் பேச்­சா­ளர் சுட்­டிக்­காட்­டி­னார். இருந்­தா­லும் சிங்­கப்­பூர் மக்­க­ளின் சரா­சரி ஆயு­ளுக்­கான ஓர் அறி­கு­றி­யாக அது இருக்­கும் என்­றும் அவர் விளக்­கி­னார்.

தொற்று இருந்­தா­லும்­கூட ஆயுளைப் பொறுத்­த­வரை சில அம்­சங்­கள் மாறா­மல் இருக்­கின்­றன.

பெண்­க­ளைப் பொறுத்­த­வரை சென்ற ஆண்­டில் பிறப்­பின்­போது எதிர்­பார்க்­கப்­பட்ட ஆயுள் 85.9 ஆண்­டு­க­ளாக இருந்­தது. 2019ஆம் ஆண்­டி­லும் இதே அள­வு­தான் இருந்­தது. ஆண்­க­ளைப் பொறுத்­த­வரை சென்ற ஆண்­டில் ஆயுள் 81.1 ஆண்­டா­கக் குறைந்­தது. இது 2019ல் 81.4 ஆண்­டாக இருந்­தது.

இந்த நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய கல்வித் துறை­யா­ளர்­கள், பொது­வா­கவே பெண்­க­ளி­டம் உடல்­நல உணர்வு அதி­கம் என்றனர்.

ஆபத்­தான பழக்­க­வ­ழக்­கங்­களில் ஈடு­படும் போக்கு பெண்­களை­விட ஆண்­க­ளி­டம் அதி­கம்.

இதன்­ கா­ர­ண­மாக ஆண்­க­ளின் ஆயுட்­கா­லம் பாதிக்­கப்­படும் வாய்ப்பு இருக்­கிறது என்று அவர்­கள் விளக்­கி­னர்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக இதர பல நாடு­க­ளி­லும் ஆயுள் குறைந்து இருக்­கிறது என்று கல்­வித் துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

அத்­த­கைய குறைவு சிங்­கப்­பூரில் இடம்­பெற்று இருப்­ப­தை­விட மிக அதி­க­மாக இருக்­கிறது என்றும் அவர்­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!