3,000 பக்தர்கள் தீ மிதித்து பக்தி பரவசம்

சிங்­கப்­பூ­ரில் இந்­துக்­க­ளின் மிகப் புரா­தன தீமி­தித் திரு­விழா கொவிட்-19 தலை காட்டி­யது முதல் இந்த ஆண்டு ஆகப் பெரிய அள­வில் கட்­டுப்­பா­டு­கள் இல்­லா­மல் வெகு­சி­றப்­பாக நடந்­தது.

சவுத் பிரிட்ஜ் ரோட்­டில் உள்ள மிகப் பழ­மை­யான ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் ஏறத்­தாழ 1,000 தொண்­டூ­ழி­யர்­கள் உதவியுடன் 9,500க்கும் மேற்­பட்ட பக்­தர்கள் சூழ, கிட்­டத்­தட்ட 3,000 பேர் பூக்­கு­ழி­யில் இறங்கி தீ மிதித்து தங்­கள் வேண்­டு­தல்­களை நேற்று நிறை­வேற்­றி­னர்.

கொவிட்-19 கார­ண­மாக 2020ஆம் ஆண்­டில் தீமி­தித் திரு­வி­ழா­வில் பொது மக்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. சென்ற ஆண்டு 950 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லில் இருந்து ஸ்ரீ மாரியம்­மன் கோயில் வரை 4 கி.மீ. நடை­யும் ஈராண்­டு­க­ளுக்­குப் பின்னர் இந்த ஆண்டு இடம்­பெற்­றது.

இந்த ஆண்டு கட்­டுப்­பா­டு­கள் எதுவுமில்லை. என்­றா­லும் நேரக் கட்­டுப்­பா­டு­களு­ட­னான முன்­ப­தி­வுத் திட்­டம் இந்த ஆண்­டும் அமல்­ப­டுத்­தப்­பட்­டது.

எந்­த­வொரு நேரத்­தி­லும் கூட்­டத்­தில் அதி­க­பட்­சம் 500 பேர் மட்­டுமே இருப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில், பக்­தர்­கள் சிராங்­கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லில் இருந்­தும் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் இருந்­தும் இரு குழுக்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு இருந்­த­னர்.

காலை­யில் மழை பெய்­த­தால் தீமிதித் விழா தாம­த­மா­கத் தொடங்­கி­யது. மாரி­யம்­மன் கோயி­லின் தலைமை பண்­டா­ரம் வேணு­கோ­பால் திரு­நா­வுக்­க­ரசு, 39, நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் கர­கம் சுமந்து வந்து மாலை 7.18 மணிக்குப் பூக்­குழி இறங்கி விழா­வைத் தொடங்கி வைத்­தார்.

நேற்­றுக் காலை தொடங்­கிய படு­களத்திற்­குப் பின்­னர் 18 அடி நீளம், 8 அடி அக­ல­மான பூக்­கு­ழி தயா­ரா­னது.

இந்த ஆண்­டில் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் ஏற்­பாட்­டில் யூடி­யூப், ஃபேஸ்புக் வழி­யாக விழா நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. தொடர்பு, தக­வல் அமைச்­சரும் உள்­துறை இரண்­டாம் அமைச்­ச­ரு­மான ஜோச­ஃபின் டியோ தீமிதி விழா­வில் கலந்­து­கொண்­டார்.

கொரோனாவுக்கு முந்திய காலத்துடன் ஒப்­பி­டும்போது இந்த ஆண்­டில் தீ மிதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏறக்­கு­றைய 40% குறைந்­தி­ருக்­கிறது என்­றா­லும் பக்­தர்­க­ளின் மன­தில் பெரும் நிறைவை இந்த ஆண்டு காண­மு­டிந்­தது என்று கூறினார் கோயில் நிர்வாக தலைவர் திரு சீ. லெச்சுமணன்.

நேற்று தீ மிதித்த பக்­தர்­களில் ஒரு வரான 19 வயது மாண­வர் கதி­ர­வன் சந்­தி­ர­சே­க­ரன், 16 வய­தில் தீ மிதிக்கத் தொடங்­கி­னார். இந்த ஆண்­டு முழங்காலில் காயம் பட்­டி­ருந்­தா­லும் தீ மிதித்து நேர்த்­திக்­க­டனை நிறை­வேற்­றி­னார், இந்த பிஎஸ் பி அகா­டமி­ முத­லாம் ஆண்டு விளை­யாட்­டுத் துறை படிப்­பு மாண­வர்.

அதோடு மட்­டு­மின்றி, இந்த ஆண்டு முதன் முத­லாக தீ மிதித்த தெமா­செக் பல­துறை தொழிற்­கல்­லூரி மாண­வ­ரான 18 வயது கீர்த்­தி­கே­சன் கணே­சன் என்ப வருக்­கும் அந்த மாண­வர் உத­வி­னார்.

தீ மிதித்­தது பற்றி கருத்துக் கூறிய கீர்த்­தி­கே­சன், என்­ இந்த அனு­ப­வம் என் அச்­சம் அனைத்­தை­யும் போக்க உதவி இருக்­கிறது என்று கூறி­னார்.

தக­வல் தொழில்­நுட்ப அதி­கா­ரி­யான திரு சிவ­கு­ம­ரன் சாத்­தப்­பன், 53, இந்த ஆண்டு 28வது முறை­யாக தீ மிதித்­தார்.

தன்­ தாயார் குண­ம­டைய வேண்டி தனது 21வது வய­தில் முதன்­மு­த­லாக தீ மிதிக்­கத் தொடங்­கிய இவ­ரு­டைய வேண்டு­தல் நிறை­வே­றி­யதை அடுத்து இன்றுவரை தொடர்ந்து தீ மிதித்து வரு­கி­றார்.

வரும் ஆண்­டு­களில் தனது 18 வயது மக­னும் தீமிதி விழா­வில் கலந்­து­கொண்டு தீ மிதிப்­பார் என்று இவர் நம்­பிக்­கைத் தெரி­வித்­தார்.

சுகா­தா­ரத் துறை­யில் பணி­யாற்­றும் திரு கும­ர­வேலு பழ­னி­வேலு, 40, தன்­ தந்­தையின் தீமி­திப் பாரம்­ப­ரி­யத்­தைத் தான் தொடர்­வ­தா­கக் கூறி­னார்.

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக தீ மி­தித்­து வந்த தந்­தை­யு­டன் தனது இரு­ப­தா­வது வய­தில் தீ மி­திக்க தொடங்­கிய திரு கும­ர­வேலு, இந்த ஆண்டு 17வது முறை­யா­கத் தீக்­குழி இறங்­கி­னார்.

தந்­தை­யின் மறை­வுக்­குப் பின்­னர் தீமிதி திரு­விழா தந்­தை­யை­யும் தீமிதி நினைவு­களை­யும் நினை­வு­கூ­ரும் ஒரு வாய்ப்­பாக மாறி­யுள்­ள­தாக இவர் தெரி­வித்­தார்.

சுகாதாரத்துறையில் பணியாற்றும் 47 வயது திரு ராஜாகாந்த், இவ்வாண்டின் திருவிழா களைகட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து தீ மிதித்து வரும் கட்டுமான ஊழியரான திரு இளங்கோவன் விஸ்வ நாதன் என்பவர், தான் தீ மிதிக்கத் தொடங்கியது முதல் குடும்பத்தின் நிதி நெருக்கடிகள் தீர்ந்து வாழ்வின் நிறைவைக் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!