தென்கொரியா: ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை (அக்டோபர் 29) இரவு ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெரிய அளவிலான கூட்டம், ஒரே நேரத்தில் ஒடுக்கமான பாதைக்குள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினரும் 20களில் உள்ளவர்களும் ஆவர். உயிரிழந்தவர்களில் 19 பேர் வெளிநாட்டவர்கள். அவர்கள் ஈரான், உஸ்பெகிஸ்தான், சீனா, நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சோல் நகரின் இட்டவோன் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமுற்றவர்களில் 19 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றனர்.

தென்கொரியா கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து சோல் நகரில் நடைபெற்ற முதல் ‘ஹாலோவீன்’ நிகழ்வாக இது அமைந்தது. கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலரும் முகக்கவசங்களையும் ‘ஹாலோவீன்’ உடைகளையும் அணிந்திருந்தனர்.

நேரம் செல்ல செல்ல, கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி இரவு 10.20 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் இரவு 9.20 மணிக்கு) இச்சம்பவம் நிகழந்தது.

“ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது பெரிய எண்ணிக்கையிலானோர் கீழே விழுந்தனர். இதனால் உயிர்ச்சேதம் அதிகரித்தது. உயிரிழந்தோரில் பலரும் இரவு நேர கேளிக்கைக்கூடத்திற்கு அருகே இருந்தனர்,” என்று யோங்சன் தீயணைப்பு நிலையத் தலைவர் சோங் சுங் பியோம் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத பிரபலம் ஒருவர் அப்பகுதியில் உள்ள மதுபானக்கூடத்திற்குச் சென்றதாகவும் இது பெரிய கூட்டத்தை அங்கு ஈர்த்ததாகவும் உள்ளூர் செய்தி நிறுவனமான வொய்டிஎன் தெரிவித்தது.

தீயணைப்பு வீரர்கள் 346 பேர் உட்பட 848 அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!