19 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

சிங்­கப்­பூர்-சீனா கூட்டு மன்­றத்­தின் 18வது இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­புக் கூட்­டத்­தில் இரு­நா­டு­களும் 19 ஒப்­பந்­தங்­களில் நேற்று கையெ­ழுத்­திட்­டன.

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்­ட­லில் இந்த உயர்­மட்ட கூட்­டம் நடை­பெற்­றது. அதில் தரப்­புக்கு 14 அமைச்சர்கள் கலந்­து­கொண்­

ட­னர்.

கூட்­டத்­துக்­குத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்­டும் சீனா­வின் துணைப் பிர­த­மர் ஹான் செங்­கும் தலைமை தாங்­கி­னர்.

கொவிட்-19 நெருக்கடிநிலை தலைதூக்கியதிலிருந்து இருதரப்பு பிரதிநிதிகளும் நேரில் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை.

பசு­மைத் திட்ட மேம்­பாடு, பசுமை நிதித் திட்­டம், இணையவழி வர்த்­த­கம், பொதுச் சுகா­தா­ரம், புத்­தாக்­க­மிக்க ஒத்­து­ழைப்பு, சுற்­றுப்­ப­ய­ணப் பரி­மாற்­றங்­கள் போன்­றவை தொடர்­பான ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

19 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருப்­பது சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு அதிக அளவு அதி­க­ரித்­தி­ருப்­ப­தைக் காட்­டு

­வ­தாக செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு ஹெங் தெரி­வித்­தார்.

"இரு­நா­டு­க­ளின் அமைச்சர் களுக்கு இடை­யி­லான இந்­தக் கூட்­டம் பெரு­ம­ள­வில் பல­னைத் தந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரின் தேவை­

க­ளுக்கு ஏற்­ப­வும் பொரு­ளி­யலை உரு­மாற்ற மேற்­கொள்­ளப்­படும் பணி­க­ளுக்கு ஏற்­ப­வும் புதிய பாதையை இந்­தக் கூட்­டம் உரு­வாக்கி உள்­ளது. சீனா­வின் புதிய மேம்­பாட்­டுத் திட்­டத்­துக்­கும் இந்­தக் கூட்­டம் மிகப் பொருத்­த­

மா­னது," என்று துணைப் பிர­த­மர் ஹெங் தெரி­வித்­தார்.

கையெ­ழுத்­தி­டப்­பட்ட புதிய ஒப்­பந்­தங்­கள் பசு­மைத் திட்­டம், மின்­னி­லக்­கம், இணைப்பு ஆகிய கருப்­பொ­ருள்­க­ளைக் கொண்­டவை என்­றார் அவர்.

"இந்­தக் கருப்­பொ­ருள்­க­ளைக் கொண்ட ஒப்­பந்­தங்­கள் சிங்கப் பூருக்கும் சீனாவிற்கும் மட்­டுமே முக்­கி­ய­மா­னவை அல்ல. இந்த வட்­டா­ரத்­துக்­கும் உலக நாடு­க­ளுக்­கும் முக்­கி­ய­மா­னவை," என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் பீப்பள்ஸ் பேங்க் ஆஃப் சீனாவும் இணைந்து பசுமை நிதிப் பணிக்குழுவை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!