மலேசியத் தேர்தல்: மஇகா 10 தொகுதிகளிலும் போட்டியிடும்

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் ஒதுக்­கப்­பட்­டுள்ள பத்து நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் மலே­சிய இந்­தியர் காங்­கி­ரஸ் (மஇகா) போட்­டி­யி­டும் என்று அக்­கட்­சி­யின் தலை­வர் எஸ்ஏ விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார். நேற்று நடந்த மஇகா மத்­திய செயற்­கு­ழு­வின் அவ­சரக் கூட்­டத்­திற்கு பின்­னர் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

தொகுதி ஒதுக்­கீட்­டில் தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர் அக­மது ஸாகிட் ஹமி­டி­யின் முடி­வு­களை மஇகா ஏற்­றுக்­கொள்­ள­வ­தாக குறிப்­பிட்ட அவர், இது நியா­ய­மா­னது என்­றார்.

பேச்சுவார்த்­தை­க­ளுக்­குப் பிறகு 10 இடங்­களை மஇ­கா­வுக்கு தேசிய முன்­னணி ஒதுக்­கி­யுள்­ளது.

மேலும், தேசிய முன்­னணி நட்­புக் கட்­சி­க­ளான ஐபி­எப்ஃ, கிம்மா, மக்­கள் சக்தி ஆகிய கட்­சி­க­ளுக்­கும் இடம் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பதை மஇகா வர­வேற்­ப­தாக விக்­னேஸ்­வர் சொன்­னார்.

நேற்று முன்­தி­னம் நடந்த தேசிய முன்­னணி வேட்­பா­ளர் பட்­டி­யல் அறி­விப்பு நிகழ்­வில் மஇகா பங்­கேற்­கா­த­தற்கு தான் வேறு கூட்­டத்­திற்­குச் சென்றிருந்ததே கார­ணம் என்று அவர் மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

தேசிய முன்­ன­ணிக்கு ஆட்­சே­பம் தெரி­விக்­கும் வகை­யில் அந்­தக் கூட்­டத்­தில் அவர் கலந்துகொள்­ள­வில்லை என மஇகா வட்­டா­ரங்­கள் முன்­ன­தா­கத் தெரி­வித்­தன.

அந்­தக் கூட்­டத்­தில் மஇகா கேட்ட 12 நாடா­ளு­மன்ற இடங்­களுக்­குப் பதி­லாக 10 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டன.

மஇ­கா­வுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள தொகு­தி­க­ளும் அங்கு போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களும்:

பாடாங் செராய்

- சிவ­ராஜ் சந்­தி­ரன்

சுங்கை சிப்­புட்

- எஸ்.ஏ.விக்­னேஸ்­வ­ரன்

தாப்பா - எம்.சர­வ­ணன்

தெலுக் இந்­தான்- டி.முரு­கையா

போர்ட் டிக்சன் - ப.கம­ல­நா­தன்

உலு சிலாங்­கூர் - டி.மோகன்

கோத்தா ராஜா - கஜேந்­தி­ரன்

கோலா லங்­காட் - மோகனா முனி­யாண்டி

பத்து - கோகி­லன் பிள்ளை

சிகா­மட் - எம்.இரா­ம­சாமி

மஇகா பாரம்­ப­ரிய இட­மான சுங்கை பூலோ அம்­னோ­வுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போதைய ரெம்­பாவ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கைரி ஜமா­லு­டின் அங்கு ஆத­ர­வைப் பெற்று இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. மேலும் அம்னோ வேட்­பா­ளர் அந்த இடத்தை வெல்­வது மிக­வும் முக்­கி­ய­மா­ன­தா­க­வும் கரு­தப்­படுகிறது.

இதற்­கி­டையே, மக்­கள் சக்தி கட்­சி­யின் தலை­வர் ஆர்.எஸ்.தனேந்­தி­ரன் பினாங்­கி­லுள்ள நிபோங் திபால் தொகு­தி­யில் போட்­டி­யி­டு­கி­றார்.

நீண்­ட­கா­ல­மாக தேசிய முன்­ன­ணியை ஆத­ரித்து வந்­தி­ருக்­கும் ஐபி­எஃப் கட்­சிக்கு முதன்முறை­யாக பினாங்­கி­லுள்ள ஜெலுத்­தோங் நாடா­ளு­மன்­றத் தொகுதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஐபி­எஃப் கட்­சி­யின் தலை­வர் லோக­நா­தன் துரை­சாமி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்.

கடை­சி­யாக ஐபி­எஃப் கட்சி 1990 பொதுத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டது. ரசாலி ஹம்சா தலை­மை­யி­லான செமாங்­காட் 46 கட்­சி­யோடு கூட்­டணி அமைத்து ஐபி­எஃப் அந்­தத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டது. 2 நாடா­ளு­மன்­றத் தொகு­தி­கள் ஐபி­எஃப் கட்­சிக்கு அப்­போது ஒதுக்­கப்­பட்­டது.

அப்­போ­தைய தலை­வர் எம்.ஜி.பண்­டி­தன் தெலுக் இந்­தா­னி­லும், கட்­சி­யின் துணைத் தலை­வர் டாக்­டர் ஞான­பாஸ்­க­ரன் நிபோங் திபால் தொகு­தி­யி­லும் போட்­டி­யிட்­ட­னர். இருப்­பி­னும் தோல்வி கண்­ட­னர்.

அதன் பின்­னர் அப்­போ­தைய பிர­த­மர் மகா­தீ­ரின் அழைப்­பைத் தொடர்ந்து ஐபி­எஃப் கட்சி தேசிய முன்­ன­ணி­யின் நட்­புக் கட்­சி­யாக மாறி­யது. உறுப்­பி­யக் கட்­சி­யாக தேசிய முன்­ன­ணி­யில் இணை­யும் அதன் முயற்­சி­கள் வெற்றி பெற­வில்லை.

இந்த முறை ஐபி­எஃப் கட்­சிக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும் ஜெலுத்­தோங் தொகுதி ஜசெ­க­வின் கோட்­டை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ஒரு காலத்­தில் கர்ப்­பால் சிங் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று வந்த இந்­தத் தொகு­தி­யில் ஜசெ­க­வின் சார்­பில் ஆர்.எஸ்.என்.ராயர் மீண்­டும் போட்­டி­யி­டு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!