2025க்குள் 12,000 புதிய வாகன மின்னூட்டு நிலைகள் வீவக வாகன நிறுத்துமிட மின்னூட்டு நிலைகளை 5 நிறுவனங்கள் அமைக்கும்

அதி­க­ரித்து வரும் மின்­சார வாக­னங்­க­ளின் தேவைக்கு ஏற்ப கிட்டத்­தட்ட 2,000 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வாகன நிறுத்­து­மி­டங்­களில் 12,000 மின்­சார வாகன மின்னூட்டு நிலை­களை நிறுவ இந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் அர­சாங்­கம் ஏலக்­குத்­த­கையை வழங்­கி­யுள்­ளது.

ஏலக்­குத்­த­கைக்கு 11 நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்­தன. அவற்­றில் ஐந்து நிறு­வ­னங்­கள் தேர்வு பெற்­றன.

அவை, சார்ஜ் +, கம்ஃபர்ட்­டெல்­குரோ இன்­ஜி­னி­ய­ரிங், எஸ்பி மொபி­லிட்டி, ஷெல் ஈஸ்­டர்ன் பெட்­ரோ­லி­யம், ஸ்ட்ரெய்ட்ஸ் ஆட்­டோ­மோட்­டிவ் சர்­வீ­சஸ் ஆகியன.

சிங்­கப்­பூ­ரின் வடக்கு, வட­கிழக்கு, கிழக்கு, மேற்கு, மத்­திய வட்­டார வீவக வாகன நிறுத்­து­மி­டங்­களில் மின்னூட்டி வச­தி­களை அமைப்­ப­தற்கு இந்த ஐந்து நிறு­வ­னங்­கள் பொறுப்­பேற்­கும். இதற்­கான பணி­கள் 2023ன் முதல் காலாண்­டில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சன்­டெக் சிங்கப்பூர் மாநாடு கண்­காட்சி மையத்­தில் நேற்று நடை­பெற்ற சிங்­கப்­பூர் அனைத்­து­லக போக்கு­வ­ரத்து மாநாட்­டில் பேசிய போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தார்.

விண்­ணப்­பங்­களை மதிப்­பிடு­வ­தில், கட்­ட­ணம், வணி­கத் திட்­டங்­கள் உள்­ளிட்ட பல காரணி­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

மின்னூட்டு நிலை­க­ளுக்கு தேவை­யான மின்­சா­ரத்தை திறம்­பட பயன்­ப­டுத்­து­வ­தில் இந்த நிறு ­வ­னங்­களின் ஆற்­ற­லும் பரி­சீலிக்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது. குறிப்­பிட்­ட­ளவு மின்­சார திற­னைக் கொண்டு, கூடி­ய­பட்ச சேவையை வழங்க இது உத­வும்.

இந்த நிறு­வ­னங்­கள் வரும் 2025ஆம் ஆண்­டின் இறு­திக்­குள் சிங்­கப்­பூ­ரின் ஒவ்­வொரு வீடமைப்பு வளர்ச்­சிக் கழக கார் பேட்­டை­யி­லும் குறைந்­தது மூன்று மின்னூட்டு நிலை­களை அமைக்க வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

எதிர்­கா­லத்­தில் தேவை அதி­க­ரிக்­கும்­போது ஒரு வாகன நிறுத்து­மி­டத்­திற்கு 12 மின்னூட்டு நிலை­களை இந்­நி­று­வ­னங்­கள் அமைக்க முடி­யும்.

இந்த ஆண்­டில் இது­வரை பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்து புதிய கார்­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னவை மின்­சார கார்­கள் எனக் கூறப்பட்டது.

மின்­சார வாக­னத்­துக்கு மாறு­வ­தற்­கான மாதாந்­திரப் பதிவு செப்­டம்­பர் மாதம் புதிய உச்­ச­மாக 19 விழுக்­காட்டை எட்­டி­யது. இது 2021ஆம் ஆண்­டில் காணப்­பட்­ட­தை­விட மும்­ம­டங்கு அதி­கம்.

மின்­சார கார்­க­ளுக்கு மாறு­வது அதி­க­ரித்து வரு­கிறது. 2022ஆம் ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் பதி­வு­செய்­யப்­பட்ட கார்­களில் 8.4% மின்­சார கார்கள்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்­ப­ரில் வழங்­கப்­பட்ட ஏலக்­குத்­த­கையை அடுத்து இந்­தப் பெரிய அள­வி­லான ஏலக்­குத்­தகை இடம்­பெற்­றுள்­ளது.

அது பொது வாகன நிறுத்­து­மி­டங்­களில் 600க்கும் மேற்­பட்ட மின்னூட்டு நிலை­களை அமைக்க வச­தியை ஏற்­ப­டுத்­தி­யது. அவற்­றில் 60% நிலை­கள் செயல்­ப­டத் தொடங்­கி­ விட்­டன.

போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­த­தாக ஆக்கும் முயற்­சி­களில் ஒன்­றாக, அர­சாங்­கம் பொதுப் போக்­கு­வரத்தை மேம்­ப­டுத்­து­கிறது என்றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

வரும் 10 ஆண்­டு­களில் ஒவ்­வோர் ஆண்­டும் புதிய எம்­ஆர்டி நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தன் வழி ரயில் போக்­கு­வ­ரத்து விரி­வாக்­கப்­படும்.

வரும் 2040க்குள் பத்­தில் எட்டு வீடு­கள் 10 நிமி­டங்­களில் ரயில் நிலையங்களுக்கு நடந்து செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்று அமைச்சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!