எதிர்கால தொற்றுநோய்க்கு சிங்கப்பூர் தயாராகிறது

$100 மில்லியன் செலவில் தேசிய ஆய்வுத் திட்டம் தொடங்கியது

கொவிட்-19 தொற்­று­நோய் பிடி­யி­லி­ருந்து ஒரு வழி­யாக மீண்டு வந்­துள்ள சிங்­கப்­பூர், அடுத்­த­தாக அது­போன்ற நோய்ப் பர­வல் ஏற்­பட்­டால் உட­ன­டி­யா­கச் செயல்­பட்டு சமா­ளிப்­ப­தற்­காக பெருந்­திட்­டத்­து­டன் தயா­ரா­கி­றது.

ஐந்து ஆண்­டு­களில் நூறு மில்­லி­யன் வெள்ளி நிதி­யு­த­வி­யு­டன் அதற்­கான தேசிய ஆய்­வுத் திட்­டம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

பிர­பேர் (Prepare) எனும் தொற்­று­நோய்க்கு எதி­ரான தயார்­நிலை, பதில் நட­வ­டிக்கை திட்­டம், எதிர்­கால மிரட்­டல்­க­ளைச் சமா­ளிக்க பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­களை ஒருங்­கி­ணைக்­கும்.

சிங்­கப்­பூ­ருக்கு அப்­பா­லும் கடல் கடந்து, ஆய்­வுப் பங்­கா­ளித்­து­வத்தை வலுப்­ப­டுத்­து­ வ­தோடு, தக­வல்­க­ளைப் பகிர்ந்து அனைத்­து­லக அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்­து­செ­யல்­பட திட்­டம் வகை செய்­கிறது.

'பிர­பேர்' திட்­டத்­துக்கு டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யின் பேரா­சி­ரி­யர் வாங் லின்ஃபா தலைமை ஏற்­றுள்­ளார். தொற்று நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தைச் சேர்ந்த டேவிட் லியே அவ­ருக்­குத் துணை­யா­கச் செயல்­ப­டு­வார்.

நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், 'பிர­பேர்' ஆய்­வுத் திட்­டத்தை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்து உரை­யாற்­றி­னார்.

"அறி­வி­யல்­பூர்­வ­மான ஆதா­ரங்­கள், தர­வு­க­ளின் வழி­காட்­ட­லு­டன் கொவிட்-19 பெருந்­தொற்றை சிங்­கப்­பூர் சமா­ளித்­துள்­ளது. அந்த அனு­ப­வத்­து­டன் எதிர்­கால கொள்­ளை­ நோயை­யும் சமா­ளிக்க சிங்­கப்­பூர் தன்னை மேலும் மேம்­ப­டுத்தி தயா­ரா­கிறது," என்­றார்.

கடந்த 2003ல் சார்ஸ் நோய் ஏற்­பட்­ட­போது சிங்­கப்­பூர் அடுத்த கொள்­ளை­நோய்க்கு தயா­ராக இருந்­தா­லும் செயல்­பா­டு­களை பாதிக்­கும் இடை­வெ­ளி­கள் இன்­ன­மும் இருந்­தன.

சிங்கப்பூரில் முதல் கொவிட்-19 நோயாளி யிடமிருந்து கிருமி மாதிரிகளைப் பெற்றபோது கிருமியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற மூன்று நாள்கள் ஆனது என்று கூறிய பேராசிரியர் வோங், இது, வழக்கத்தை விட வேகமாக இருந்தாலும் தாமதம் இருந்தது என்றார்.

'பிரபேர்' வழிகாட்டிக் குழுவின் இணைத் தலைவரான பேராசிரியர் டான் சோர் சுவான், கொள்ளைநோய் ஏற்பட்டபோது குறுகிய காலத்தில் வலுவானத் தீர்வுகள் தேவைப் பட்டதாகவும் சொன்னார்.

சிங்கப்பூரின் தலைமை சுகாதார அறிவிய லாளருமான திரு டான், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை எப்படி பராமரிப்பது என்பதற்கு மருத்துவர்களுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது என்றார்.

இந்தச் சூழ்நிலையில் சிங்கப்பூருக்கு இருந்த சிறந்த தொடர்புகளால் அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதாரக் கழகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிந்ததற்கு தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான லியோ யீ சின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதத்தில் ஆய்வுத் திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!