கருத்தாய்வு: பெரும்பாலான உணவு விநியோக ஓட்டுநர்களின் வருமானம் $3,000க்கும் குறைவு

சிங்கப்பூரில் 10ல் ஏழு உணவு விநியோக ஓட்டுநர்களின் மாதச் சம்பளம் 3,000 வெள்ளிக்கும் குறைவு என்பது தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் 4,680 வெள்ளியாகப் பதிவானது.

உணவு விநியோக ஓட்டுநர்களின் சராசரி மாதச் சம்பளம் அைதவிடக் குறைவாக 1,925 வெள்ளியாக இருந்தது.

எனினும், 10ல் நான்கு உணவு விநியோக ஓட்டுநர்கள் ஒரு வாரத்திற்கு 44 மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்கின்றனர்.

ஒருவேளை தங்களின் வேலையை விடவேண்டிய சூழல் உருவானால் சிறிது காலத்திற்குத் தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் பார்த்துக்கொள்ளப் போதுமான சேமிப்பு கைவசம் இருப்பதாக நான்கில் ஒருவர் மட்டுமே தெரிவித்தனர்.

1,002 உணவு விநியோக ஓட்டுநர்களைக் கொண்டு கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

மூன்றில் ஒரு உணவு விநியோக ஓட்டுநர் குறைந்தது ஒருமுறை விபத்துக்கு ஆளாகி மருத்துவ உதவி தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் கருத்தாய்வில் தெரியவந்தது.

அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய உணவு விநியோக ஓட்டுநர்களைப் பாதுகாக்க அவர்களின் மத்திய சேமநிதிச் சந்தா கணக்குகளில் தொகை நிரப்புவதைக் கட்டாயமாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவதைக் கருத்தாய்வின் முடிவுகள் வலியுறுத்துவதாக கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (4 நவம்பர்) வெளியான அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!