மலேசியா: தொற்று கூடுகிறது, முகக்கவசம் அணிய வலியுறுத்து

மலே­சி­யா­வில் உரு­மா­றிய எக்ஸ்பிபி கொவிட்-19 கிருமி மீண்­டும் தலை­தூக்­கு­கிறது. இத­னால் கூட்­ட­மான இடங்­க­ளுக்­கும் உட்­புற இடங்­களுக்­கும் செல்­வோர் முகக்­கவசம் அணிந்­து­கொள்ள வேண்­டும் என்று நினை­வூட்­டப்­பட்டுள்ளது.

பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும். பாதிக்­கப்­ப­டு­வோர் உரிய நிபந்­த­னை­களைப் பின்­பற்றி நடந்­து­கொள்ள வேண்டும் என்று தற்­கா­லிக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தின் கூறினார்.

பரி­சோ­தனை, பரி­சோ­தனை முடிவைத் தெரி­யப்­ப­டுத்­து­வது, தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­வது, தக­வல் தெரி­விப்­பது, உதவி நாடுவது ஆகி­யவை அந்த நிபந்­தனை­களில் அடங்­கும் என்று அவர் விளக்­கி­னார்.

கிருமி தொற்­றக்­கூ­டிய ஆபத்து அதி­கம் உள்­ள­வர்­க­ளுக்கு 'பாக்ஸ்­லோ­விட்' மருந்து விநி­யோ­கிக்­கப்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 கிருமி வியா­ழக்­கி­ழமை 4,000 பேரை தொற்றி இருக்­கிறது. அவர்­களில் 96 பேர் உட­லில் அறி­குறி எது­வும் தெரி­ய­வில்லை. அல்­லது இலே­சான அறி­கு­றி­கள்­தான் தெரிந்­தன," என்று வியா­ழக்­கி­ழமை அவர் கூறி­னார்.

"இப்­போது புதிய கிருமி அலை தலை­தூக்கி இருக்­கிறது. அது ஒடுங்­குமா அல்­லது அதி­க­ரிக்­குமா என்­பது நம்­மு­டைய செய்­கை­களைப் பொறுத்தே இருக்­கிறது," என்று டுவிட்­ட­ரில் அவர் தெரி­வித்­தார்.

அடுத்த சில வாரங்­களில் எக்ஸ்பிபி கிரு­மித்­தொற்று அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக திரு கைரி கடந்த திங்­கள்கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தார்.

நாள் ஒன்­றுக்கு பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 5,000 வரை அதி­க­ரிக்­க­லாம் என்று அவர் கூறி­னார். மலே­சி­யா­வில் நவம்­பர் 19ஆம் தேதி பொதுத் தேர்­தல் நடக்­கிறது. இந்­தச் சூழ­லில் அங்கு கிரு­மித்­தொற்று தலை­தூக்­கு­கிறது.

தேர்­தல் பிர­சா­ரம் இன்று சனிக்­கி­ழமை தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தச் சூழ­லில் மிகக் கவ­ன­மாக மக்­கள் இருந்து­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் நினை­வூட்­டி­னார்.

தேசிய தேர்­தல் நடக்­கும்­போது பணி­யில் இருக்­கக்­கூ­டிய தேர்­தல் ஆணைய ஊழி­யர்­கள் உள்­ளிட்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் இரண்­டா­வது காப்­பூ­சியை (பூஸ்­டர்) போட்டுக்­கொள்ள வேண்­டும் என்று அவர் அறி­வுரை கூறி­னார்.

இத­னி­டையே, அமைச்­சர் சுங்கை பூலோ­வில் கொவிட்-19 புதிய அலை புரிந்துணர்­வுச் செயல்­திட்­டத்­தை நேற்று தொடங்கி வைத்­தார். தொற்று அதி­க­ரிப்­ப­தால் உட­ன­டி­யாக காப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­ளும்­படி அவர் மக்­களை வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

பொதுத் தேர்­த­லில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­கள் அல்­லது பொது­மக்­க­ள் கிருமி பாதிப்பு அறி­கு­றி­கள் ஏதே­னும் தங்களுக்குத் தெரி­ய­வந்­தால் அல்­லது அவர்­கள் கொவிட்-19 நோயா­ளி­யு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­திருந்­தால் உட­ன­டி­யாக சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்டும்.

பரி­சோ­தனை முடி­வு­களை 'மைசெ­ஜா­த்ரா' செயலி மூலம் தெரி­யப்­படுத்த வேண்­டும் என்று அவர் நினை­வூட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!