சிக்கலான பிரச்சினைகள் எழும்போது எதிர்க்கட்சிகள் காணாமல் போய்விடுகின்றன: பிரதமர் லீ

ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு சட்டப்படி குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 377ஏ-யை ரத்து செய்வது போன்ற பிரச்சினையான விவகாரங்கள் எழும்போது எதிர்க்கட்சிகள் காணாமல் போய்விடுவதாக பிரதமர் லீ சியன் லூங் விமர்சித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பிரதமர் லீ உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஒரு நாள் அரசாங்கத்தை அமைக்கும் இலக்கு எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால், அவை ஒதுங்கி மறைந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

சட்டப்பிரிவு 377ஏ உள்ளிட்ட சிக்கலான விவகாரங்களில் அரசாங்கம் பிரச்சினையை மதிப்பிட்டு, வாதங்களைச் சீர்தூக்கி, தனக்கு இயன்றவரை தெரிந்தபடி செல்லும் சரியான பாதையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது என்றார் பிரதமர்.

சட்டப் பிரிவு 377ஏ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எங்கே தென்படுகின்றன? அவை அரசாங்கத்தின் அணுகுமுறையை விமர்சிக்கின்றனவா? அரசாங்க நடவடிக்கையை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா? மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளனவா? இவற்றில் எதுவும் இல்லை,” என்றார் பிரதமர்.
யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாததால் எதிர்க்கட்சிகள் மறைவாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரை நிர்வகிக்க விரும்பினால் அவ்வாறு காணாமல்போய் விடமுடியாது என்றார் அவர்.

அதே நேரம் அரசியல் லாபத்துக்காக மனக்கசப்பைத் தூண்டும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் மிகப் பெரும் கவலை அளிப்பதாக திரு லீ சொன்னார்.

சில நேரங்களில் இனப் பாகுபாட்டு தொனியில் அவை பேசுகின்றன. ஒரு குறிப்பிட்ட வர்த்தக உடன்பாடு பற்றி பேசினாலும், உண்மையாக அவை ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைப் பற்றி பேசுவதாக அவர் கூறினார். அக்கட்சிகள் தங்கள் பேச்சாலும் கேள்விகளாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவதில்லை. மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்துவதே அவற்றின் நோக்கம் என்றார் திரு லீ.

எதிர்க்கட்சிகளின் அத்தகைய பொறுப்பற்ற செயல்கள் நம் வாழ்க்கையை எவ்விதத்திலும் மேம்படுத்துவதில்லை என்றும் பிளவை ஏற்படுத்தும் அரசியல் மேலோங்கும்போது நடப்பதை வேறு இடங்களில் நாம் பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!