‘விட்டதைப் பிடிக்க மசெக மூன்று மடங்கு முயலும்’

அடுத்த பொதுத் தேர்­த­லில் மக்­கள் செயல் கட்சி வெற்றி பெறும் என்­ப­தற்கோ, அடுத்த பிர­த­ம­ராக தான் பொறுப்பு ஏற்பது தவிர்க்க இயலாததாக இருக்கும் என்­பதற்கோ உத்த­ர­வா­தம் எது­வும் இல்லை என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்கி­றார்.

இதை மன­தில்கொண்டு, முந்­திய தேர்­தலில் தான் இழந்த தொகுதி­களைக் கைப்பற்ற மசெக இரு மடங்கு, மும்­ம­டங்கு கடு­மை­யா­கப் பாடு­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

நாட்டை ஆள்­வ­தற்கு வலு­வான ஆதரவை சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் இருந்து பெற கட்சி தன்­னால் ஆன அள­வுக்குக் கடுமையா­கப் பாடு­படும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

மசெக மாநாடு, விரு­து­ விழா 2022 நிகழ்ச்­சி­யில் திரு வோங் நேற்று உரை­யாற்­றி­னார். கட்சி மாநாட்­டில் திரு வோங்­கின் முதல் உரை இதுவே ஆகும்.

சிங்­கப்­பூ­ரில் கால­வோட்­டத்­தில் தேர்­தலில் அர­சி­யல் போட்டி தீவி­ர­ம­டை­கிறது என்­ப­தில் தமக்கு ஐய­மில்லை என்று கூறிய அவர், தேர்­தல்­கள் கடு­மை­யா­ன­வை­யாக, முடிவைப் பொறுத்­த­வரை நிச்­ச­ய­மில்­லா­த­வை­யாக இருக்­கும் என்­ப­தால் கட்சி உறுப்­பி­னர்­கள் அதற்­குத் தோதாக தங்­க­ளைப் பலப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யைப் பற்றி குறிப்­பிட்ட துணைப் பிரதமர், அந்­தக் கட்சி இப்­போது நன்கு நிலைபெற்ற ஒன்­றாக ஆகி இருப்­பதைச் சுட்­டி­னார்.

பாட்­டா­ளிக் கட்சி சென்ற தேர்­த­லில் ஆறு தொகு­தி­களில் போட்­டி­யிட்­டது. அந்த ஆறு தொகு­தி­களில் அது பெற்ற வாக்­கு­கள், மசெ­க­வுக்குக் கிடைத்த வாக்கு­க­ளை­விட கொஞ்­சம் அதி­கம் என்­பதை­யும் திரு வோங் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதற்கு மேலும் பல தொகு­தி­களில் பாட்­டா­ளிக் கட்சி போட்­டி­யிட்டு இருந்­தால், நாட­ளா­விய அள­வில் மசெ­க­வுக்கு 61% வாக்கு கிடைத்து இருக்­குமா? மசெக மீண்­டும் ஆட்­சி­யைப் பிடித்து இருக்­குமா? என்று திரு வோங் கேள்­வி­களை முன்­வைத்­தார்.

அர­சி­யல் கட்சி என்ற முறை­யில் மசெக தனது அர­சி­யல் சவால்­க­ளை­யும் போட்­டி­யா­ளர்­க­ளை­யும் நேருக்­கு­நேர் எதிர்­கொண்டு வெற்­றி­பெற வேண்­டும் என்று அவர் வலி யுறுத்திக் கூறினார்.

சிங்­கப்­பூரை மசெக 1959 முதல் தொடர்ந்து ஆட்சி புரிந்து வரு­கிறது.

ஆகை­யால், தேர்­தல்­களில் தாங்­கள் யாருக்கு வாக்­க­ளித்­தா­லும் மசெக தானா கவே வெற்றி பெற்று ஆட்சி அமைத்து­வி­டும் என்ற ஓர் எண்­ணம் பலரின் மன­தில் பதிந்து இருக்­கிறது.

ஆனால் இதற்கு உத்­த­ர­வா­தம் எது­வும் இல்லை என்று திரு வோங் கூறி­னார்.

இப்­போது முதல் ஒவ்­வொரு தேர்­தலிலும் எந்­தக் கட்சி அர­சாங்­கத்தை அமைக்­கும் என்­ப­தே முக்­கியப் பிரச்சினையாக இருக்கும் என்­றார் அவர்.

"மசெக செயல்வீரர்­கள் முயற்­சி­களை முடுக்­கி­விட வேண்­டும்; குடி­யி­ருப்­பாளர் களின் கவ­லையைப் போக்­க­வேண்­டும்;

"அவர்­களு­டன் தொடர்­பு­கொண்டு அடித்­த­ளத்­தில் ஆத­ரவை ஒன்று திரட்ட வேண்­டும்," என்று திரு வோங் அழைப்பு விடுத்­தார்.

"தவ­றான எண்­ணங்­க­ளை­யும் பொய்­களை­யும் சரிப்­ப­டுத்­தும் துணிச்­சல் நம்­மிடம் இருக்க வேண்­டும்;

"கட்­சி­யும் அர­சாங்­க­மும் எவை எவற்றை சாதித்து இருக்­கின்­றன என்­பதை எல்­லாம் மக்­க­ளி­டம் எடுத்­துச்சொல்ல வேண்­டும்;

"அதே­போல மக்­க­ளின் ஆத­ரவு இருக்­கும்­வரை தொடர்ந்து சாதிக்­கப்­ப­ட­வி­ருக்கும் அம்­சங்­கள் பற்­றி­யும் நாம் மக்­க­ளி­டம் எடுத்துச்சொல்ல வேண்­டும்," என்­றார் திரு வோங்.

கட்சிக் கிளை அலு­வ­ல­கங்­க­ளுக்­குப் போகும்போதெல்­லாம் இரண்டு கேள்விகளே பெரும்­பா­லும் தன்­னி­டம் கேட்­கப்­படு­வ­தாக திரு வோங் கூறி­னார்.

"அடுத்த தேர்­தல் எப்­போது? நான் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்­கப்போவது எப்­போது? என்­று­தான் பல­ரும் கேட்­கி­றார்­கள்.

"அடுத்த தேர்­தல் 2025ஆம் ஆண்டுக்குள் நடக்க வேண்­டும். தேர்­தல் 2025ல் நடந்­தா­லும் அதற்கு முன் நடந்­தா­லும் போட்டி கடு­மை­யா­ன­தாக இருக்­கும் என்­பது முன்­ன­தா­கவே தெரிந்த ஒன்று," என்­றா­ர­வர்.

"ஆகை­யால், தேர்­தல் எப்­போது நடக்கும் என்­பதோ, அடுத்த பிர­த­ம­ராக பதவி ஏற்பு எப்­போது என்­பதோ இப்­போது முக்­கி­யம் அல்ல. ஆனால், கடு­மை­யான போட்­டியைக் கொடுத்து வெற்றி பெறும் அள­வுக்கு நாம் ஆயத்­த­மாக வேண்­டும் என்­ப­து­தான் முக்­கி­ய­மா­னது. இதைச் சாதிக்க அர­சாங்­கத்­தி­லும் அர­சி­ய­லி­லும் கட்சி நல்ல முறை­யில் செயல்பட வேண்­டும்," என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

கட்சி அலு­வ­ல­கத்­திற்குச் செல்­கை­யில் கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டம் இருந்து தமக்கு ஆத­ரவு கிடைத்து இருப்­பதைக் கண்­டு­கொண்­ட­தாக திரு வோங் கூறி­னார்.

"நாட்­டிற்­கும் கட்­சிக்­கும் பட்ட கட­னைத் திருப்பி அடைக்க சேவை­யாற்ற கிடைத்த பெரும் பாக்­கி­யம் இது. என் மீது வைக்கப்பட்டு உள்ள நம்­பிக்­கையை நான் ஒருபோதும் அலட்­சி­ய­மா­கக் கரு­தி­யது கிடை­யாது.

"என் கட்­சிக்­கும் என் மக்­க­ளுக்­கும் என் நாட்­டிற்­கும் என்­னால் முடிந்த அளவுக்கு முழு பலத்­தை­யும் பயன்­ப­டுத்தி பாடு­ப­டு­வேன் என்று உறுதி அளிக்­கி­றேன்," என திரு வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!