ஜிஎஸ்டி வரியைக் கூட்ட ஒப்புதல் மசோதா நிறைவேற்றம்: 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 8% வரி; 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் 9%

சிங்­கப்­பூ­ரில் ஜிஎஸ்டி எனப்­படும் பொருள், சேவை வரியை உயர்த்­து­வ­தற்கு வகை­செய்­யும் ஜிஎஸ்டி திருத்த மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றி­யது.

இதை­ய­டுத்து, ஜிஎஸ்டி வரி வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் 1 விழுக்­காடு உயர்ந்து 8% ஆகும். பிறகு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் மேலும் 1% கூடி 9% ஆக இருக்­கும்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடந்த விவா­தத்­தில் ஆளும் கட்சி, எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­கள் 15 பேர் கலந்­து­கொண்டு பேசி­னர். கடை­சி­யில் மசோதா நிறை­வேறி­யது.

அந்த மசோதா தொடர்பில் நேற்று ஐந்து மணி நேரம் விவா­தம் நடந்­தது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய பட்டாளிக் கட்சி உறுப்­பி­னர்­களும் சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்­லாத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் லியோங் முன் வாய், ஹேசல் புவா ஆகி­யோ­ரும் வரி உயர்­வுக்கு ஆட்சே­பம் தெரி­வித்­த­னர்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­சரு­மான லாரன்ஸ் வோங் அவர்­க­ளுக்­குப் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

விவா­தத்தை முடித்து வைத்துப் பேசிய திரு வோங், 2022 வர­வு­செ­ல­வுத் திட்டத்­தின்­போது இந்த விவ­கா­ரம் பற்றி நாடாளு­மன்­றத்­தில் நடந்த விவா­தத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் எதிர்த்­த­ரப்பு இப்­போது வேறு­பட்ட ஒரு பாதை­யைக் கைக்­கொண்டு இருக்­கிறது என்­றும் இது தமக்கு ஏமாற்றம் அளிப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

ஜிஎஸ்டி திருத்த மசோதா விவா­தத்­தின்­போது நேற்று பேசிய பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­கள், வரி உயர்வை எதிர்த்துக் குரல்­கொ­டுத்­த­னர்.

அர­சாங்­கத்­திற்கு வரு­மா­னத்­தைக் கொணர மாற்று வாய்ப்பு வழி­கள் இருப்­ப­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்துப் பேசிய திரு வோங், அத்­த­கைய மாற்று வழி­க­ளைப் பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லிக்­க­வில்லை என்பது போன்ற கருத்­து­களை எதிர்த்­தரப்­பி­னர், குறிப்­பாக பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்கள் முன்­வைத்து இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

ஆனால் அவர்­கள் சொல்­வது முற்றி லும் பொய் என்று திரு வோங் கூறி­னார்.

நேர்­மை­யாக, பொறுப்­பான முறை­யில் நடந்­து­கொள்­ளும்­படி பட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­களை திரு வோங் வலி­யுறுத்­தி­க் கேட்டுக்கொண்டார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யி­னர் முன்­வைக்­கும் மாற்று யோச­னை­கள், நடுத்­தர வரு­மானப் பிரி­வி­னர் அதிக தொகை­யைச் செல­விட வேண்­டிய நிலையை உரு­வாக்கும் அல்லது சிங்­கப்­பூர் தன்­னு­டைய சேமிப்­பில் இருந்து மேலும் தொகையை எடுத்து பயன்­ப­டுத்த வேண்­டிய நிலையை ஏற்­படுத்­தும் என்­பதை அவர்­கள் ஒப்­புக்­கொள்ள வேண்டும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

"மாற்று வழி­கள் அனைத்­தை­யும் அர­சாங்­கம் கவ­ன­மாக பரி­சீ­லித்து இருக்­கிறது என்­பதை ஏற்­றுக்­கொள்­ளக்கூடிய கண்­ணி­ய­மா­வது குறைந்­த­பட்­சம் அவர்­களி­டம் இருக்­க­வேண்­டும்.

"அந்த யோச­னை­கள் பற்றி வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின்­போது தீவி­ர­மாக முற்றிலும் யோசித்து, பிற­கு­தான் வரியை உயர்த்­து­வது என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது. பொறுப்­புள்ள ஓர் அர­சி­யல்­கட்சி இப்­படி­தான் செய்­தி­ருக்­கும் என்­பதே எனது எண்­ணம்," என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

"ஆனால், பாட்­டா­ளிக் கட்சி வேறு பாதை­யைத் தேர்ந்­தெ­டுத்து இருப்­பது எனக்கு ஏமாற்­றம் அளிக்­கிறது.

"இத்­த­கைய அணு­கு­முறை அர­சி­யல் செல்­வாக்­கைப் பெருக்­கிக்கொள்ள தலை­சி­றந்த வழி­யாக இருக்­கும் என்று எதிர்க்­கட்­சி­கள் கரு­து­வதே இதற்­கான கார­ண­மாக இருக்­கும் என நினைக்­கி­றேன்.

"மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கம் கரு­ணை­யில்­லாத ஒன்று. அதை அணுகு­வது சிர­மம் என்று பல ஆண்­டு­க­ளா­கவே அந்­தக் கட்­சி­யி­னர் முத்­திரை குத்தி வந்­தி­ருக்­கி­றார்­கள்," என்றார் திரு வோங்.

விவா­தத்­தில் கலந்­து­கொண்ட எதிர்த்­தரப்பு உறுப்­பி­னர்­கள், ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்­பெ­றக்­கூ­டிய காலநேரத்­தைப் பற்றி கேள்வி எழுப்­பி­னர்.

அண்­மைய மாதங்­க­ளா­கவே சிங்­கப்­பூ­ரில் பண­வீக்க நெருக்­க­டி­கள் அதி­க­மாக இருப்­பதை அவர்கள் சுட்­டினர்.

மசெக ஈஸ்ட் கோஸ்ட் தொகுதி உறுப்­பி­ன­ரான திரு­வாட்டி ஜெசிகா டான் உள்­ளிட்ட பல உறுப்­பி­னர்­கள், நடுவே நசுக்­கப்­படும் பிரி­வைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளி­டம் ஜிஎஸ்டி வரி உயர்வு ஏற்­ப­டுத்­தக்­கூடிய தாக்­கம் பற்றி கவலை தெரி­வித்­த­னர். இத்­த­கைய ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய இளம் பிள்­ளை­க­ளை­யும் முதிய பெற்­றோர் அல்­லது உற­வி­னர்­களையும் கவ­னித்­துக் கொள்ள வேண்டி இருக்­கிறது என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

உறுப்­பி­னர்­க­ளின் பேச்­சைத் தொடர்ந்து விவா­தத்தை முடித்து வைத்துப் பேசிய துணைப் பிர­த­மர் திரு வோங், பொரு­ளி­யல் நில­வ­ரங்­கள் சவால்­மிக்­க­வை­யாக இருக்­கும் ஒரு காலத்­தில் இடம்­பெ­றும் ஜிஎஸ்டி வரி உயர்வு பற்றி அவர்­கள் தெரி­விக்­கும் கவ­லை­யைச் சுட்­டினார்.

ஜிஎஸ்டி வரி உயர்வு என்­பது மிகச் சிர­ம­மான ஒரு முடிவு என்­றா­லும் அது தேவைப்­ப­டக்­கூ­டிய ஒன்­றாக இருக்­கிறது என்று கடை­சி­யில் முடிவு செய்­யப்­பட்­ட­தாக திரு வோங் குறிப்­பிட்­டார்.

இப்­போ­தைய நில­வ­ரங்­க­ளைப் பார்க்­கை­யில், சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லும் தொழி­லா­ளர் சந்­தை­யும் இன்­ன­மும் நிலை­யாக, உறு­தி­யா­க­ இ­ருந்து வரு­கின்­றன.

இந்த ஆண்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி 3% முதல் 4% வரை இருக்­கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் திரு வோங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!