இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மசோதா ஒருமனதாக நிறைவேறியது

இணை­யப் பாது­காப்பை வலுப்­ப­டுத்­தும் மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றி­யது. இதன்­படி, 2023ல் தீங்­கி­ழைக்­கும் உள்­ள­டக்­கத்­தைக் கொண்ட பதி­வு­க­ளைச் சில மணி­நே­ரத்­திற்­குள் முடக்க, சமூக ஊட­கத் தளங்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும்.

அவ்­வாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட பின்­பும் பதிவை இணை­யத்­தளம் அகற்ற மறுத்­தால், சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­கள் அப்­ப­தி­வைக் காணா­த­வாறு இணை­யச் சேவை வழங்­கு­நர்­க­ளுக்­குத் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) அனு­ம­தித் தடை ஆணை­யைப் பிறப்­பிக்­கும்.

முதன்­மு­த­லில் கடந்த மாதம் 3ஆம் தேதி­யன்று இந்த 'இணை­யப் பாது­காப்பு (இத­ர திருத்­தங்­கள்) மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டது. இது சிங்­கப்­பூர் பய­னா­ளர்­கள் தீங்­கி­ழைக்­கக்­கூ­டிய இணை­யப் பதி­வு­க­ளைக் காண்­பது தொடர்­பில் தெளி­வான உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்­கும் அதி­கா­ரத்தை ஐஎம்­டி­ஏக்கு வழங்­கும்.

தற்­போது வெளி­நா­டு­களில் இயங்­கி­வ­ரும் நிறு­வ­னங்­கள், சிங்­கப்­பூ­ரின் ஒலி/ஒளி­ப­ரப்­புச் சட்­டத்­தின்­கீழ் வராது.

இதன் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் இரண்டு நாட்­க­ளாக நடை­பெற்ற விவா­தத்­தில் தீங்­கி­ழைக்­கும் இணை­யப் பதி­வு­க­ளின் அதி­க­ரிப்பு குறித்­துக் கிட்­டத்­தட்ட 20 உறுப்­பி­னர்­கள் தங்­கள் கருத்­து­களை முன்­வைத்­த­னர்.

குறிப்­பாக, சிறு­வர்­கள் போன்ற எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ருக்­குப் பாது­காப்பு அளிக்­கும் நடை­மு­றை­கள் கூடு­த­லாக தேவைப்­ப­டு­வ­தா­கச் சிலர் கோரி­னர்.

மேலும், 'அரு­வ­ருப்­பு­மிக்க' உள்­ள­டக்­கத்தை எவ்­வாறு அதி­கா­ரி­கள் நிர்­ண­யிப்­பார்­கள் என்­பது குறித்­தும் எம்­பிக்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

இளம் பிள்­ளை­க­ளின் இணை­யப் பயன்­பாட்­டுக்­குக் கட்­டுப்­பா­டு­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது பற்­றி­யும் சிலர் ஆலோ­சனை தெரி­வித்­த­னர்.

"இளம் தலை­மு­றை­யி­னர் அள­வுக்கு அதி­க­மான நேரத்­திற்­குத் திரை­யைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது வளர்ச்சி பாதிக்­கப்­ப­டு­கிறது. சமூக ஊட­கப் பதி­வு­களை மணிக்­க­ணக்­காக பார்­வை­யி­டு­வ­தற்கு அவர்­கள் அடி­மை­யா­கா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்," என்று ராடின் மாஸ் தனித்­தொ­குதி எம்­பி­யான மெல்­வின் யோங் கூறி­னார்.

இணைய வர்த்­த­கத் தளங்­கள், இணைய விளை­யாட்­டுத் தளங்­கள், 'டெலி­கி­ராம்' போன்ற அரை-தனி­யார் சமூ­கத் தளங்­கள் ஆகி­யவை, சமூக ஊட­க­மாக இயங்­காத நிலை­யில் அவை இந்­தச் சட்­டத்­தின்­கீழ் கரு­தப்­ப­டுமா என்­பது குறித்து நீ சூன் குழுத்­தொ­குதி எம்பி திரு லூயிங் இங் வின­வி­னார்.

தீங்கு இழைக்­கக்­கூ­டி­யது என்­பது பரந்­து­பட்­டது என்­பதை எம்­பிக்­கள் சுட்­டி­ய­தன் தொடர்­பில் வெளி­நா­டு­களில் ஆயு­த­மேந்­திய போரில் பங்­கேற்க சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அழைப்பு விடுக்­கும் பதி­வு­கள், விலங்கு வதை­யைச் சித்­தி­ரிக்­கும் காட்­சி­கள் போன்­றவை சட்­டத்­தின்­கீழ் கரு­தப்­ப­டுமா என்­பது குறித்து பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­கு­தி­யின் எம்பி சக்­தி­யாண்டி சுபாட் கேள்வி எழுப்­பி­னார்.

இருப்­பி­னும் ஆரம்­பக்­கட்­டத்­தி­லேயே மிக அதி­க­மான தளங்­களும் இணை­யத் தீங்­கு­களும் மசோ­தா­வின் கீழ் கரு­தப்­பட்­டால் அது எளி­தில் கையா­ளக்­கூ­டி­ய­தாக இருக்­காது என்­றும் நாள­டை­வில் பய­னற்­ற­தாக மாறி­வி­டும் என்­றும் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தமது நிறை­வு­ரை­யில் குறிப்­பிட்­டார்.

தனிப்­பட்ட முறை­யில் நிக­ழும் உரை­யா­டல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கம் இல்­லா­விட்­டா­லும் மிக அதி­க­மான உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழுக்­கள் இயங்கி வரு­வ­தைத் தாம் அறிந்­துள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார். அரு­வ­ருப்­பான உள்­ள­டக்­கத்­தைப் பரப்­பு­வ­தில் இது­போன்ற குழுக்­கள் ஈடு­ப­டும்­போது அது தனிப்­பட்ட முறை­யில் நிக­ழும் உரை­யா­டல் என்­றா­காது என்று விளக்­கி­னார் அவர். இது­போன்ற சூழ­லில் குழுக்­க­ளுக்கு எதி­ரான ஐஎம்­டிஏ நட­வ­டிக்கை எடுக்­கும் அதி­கா­ரம் உண்டு என்­றார்.

இந்­நி­லை­யில், இணை­யப் பய­னா­ளர்­கள் அளிக்­கும் புகார்­கள் தொடர்­பில் சமூக ஊட­கச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டி­யி­ருக்­கும் என்­றும் திருவாட்டி டியோ விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!