பணப் பட்டுவாடாவில் கவனக்குறைவு

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் நல்­லெண்­ணத்­து­டன் நிர்­வாக முக­வர் ஒரு­வ­ருக்கு விலக்கு அளித்­த­னர் என்­றும் பணப் பட்டு­வா­டா­வில் கவ­னக்­கு­றை­வாக இருந்­து­விட்­ட­னர் என்­றும் அல்­ஜு­னிட்-ஹவ்­காங் நகர மன்ற ஒப்­பந்­தப்­புள்ளி தொடர்­பில் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

'எஃப்எம் சொல்­யூ­ஷன்ஸ் அன்ட் சர்­வி­சஸ்' (எஃப்எம்­எஸ்­எஸ்) என்ற நிர்­வாக முக­வ­ரது ஒப்­பந்­தப்­புள்ளி தொடர்­பில் 2011 பொதுத் தேர்­த­லுக்­குப்­பின் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­களும் நகர மன்­றத்தை நிர்­வ­கித்து வந்­தோ­ரும் விலக்கு அளிக்க முடி­வெ­டுத்­தி­ருந்­த­னர்.

இதை அவர்­கள் நல்­லெண்­ணத்­து­டன் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது. இருப்­பி­னும், கட்­ட­ணங்­கள் அள­வுக்கு அதி­க­மா­கவோ முறை­கே­டா­கவோ வழங்­கப்­படும் அபா­யம் உண்டு என்­பதை அவர்­கள் அறிந்­தி­ருந்­த­னர் என்று நீதி­மன்­றம் குறிப்­பிட்­டது.

"இருப்­பி­னும், குறைந்­தது மூன்று ஆண்­டு­க­ளுக்கு இந்த நிலை தொடர அனு­ம­திக்­கப்­பட்­டது. அல்­ஜு­னிட்-ஹவ்­காங் நகர மன்­றம் ஜூலை 2011 முதல் ஜூலை 2014 வரை $23 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை­யைச் செலவு செய்­துள்­ளது," என்­றது நீதி­மன்­றம்.

முன்­னாள் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வ­ரான லோ தியா கியாங், கட்­சித் தலை­வர் சில்­வியா லிம், தற்­போ­தைய கட்­சித் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் ஆகி­யோர் நகர மன்­றம் தொடர்­பில் நம்­பிக்­கைக்­கு­ரிய அல்­லது நியா­ய­மான முறை­யில் கடமை ஆற்ற வேண்­டும் என்ற கட்­டா­யம் இல்லை.

இருப்­பி­னும் ஒரு சில அம்­சங்­க­ளைக் கவ­னக்­கு­றை­வா­கக் கையாண்­ட­தன் தொடர்­பில் அவர்­கள் பொறுப்­பேற்க வேண்­டும் என்று ஐவர் அடங்­கிய மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றத்­தில் தலைமை நீதி­ப­தி­யான சுந்­த­ரேஷ் மேனன் தெரி­வித்­தார். இத­னால் அவர்­கள் இழப்­பீடு செலுத்த நேரி­டும் என்­றும் கூறப்­பட்­டது.

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் தங்­க­ளின் நகர மன்­றம் தொடர்­பில் கடமை தவ­றி­யி­ருப்­பது தொடர்­பி­லும் பணத்தை முறை­கே­டா­கச் செல­வ­ழித்­தது தொடர்­பி­லும் கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் வழக்கு விசா­ர­ணையை அடுத்து 20 மாதங்­க­ளுக்­குப் பிறகு தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மூவ­ரின் நிர்­வா­கத்­தில் நகர மன்­றம் பல மில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான கட்­ட­ணங்­களை முறை­யற்று வழங்­கி­ய­தா­க­வும் பொறுப்­பா­ளர்­கள் என்ற முறை­யில் திரு­வாட்டி லிம்­மும் திரு லோ தியா கியாங்­கும் தங்­க­ளது கடமை தவ­றி­விட்­ட­தா­க­வும் முன்­ன­தாக உயர் நீதி­மன்ற நீதி­பதி கண்­ணன் ரமேஷ் கண்­ணன் தமது தீர்ப்­பில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நகர மன்­றத்தை நிர்­வ­கிக்க எஃப்எம்­எஸ்­எஸ் நிறு­வ­னத்­தைப் பணி­யில் அமர்த்­தி­ய­தன் மூலம் திரு சிங், தமது கடமை தவறி நடந்­து­கொண்­ட­தா­க­வும் அந்­தத் தீர்ப்­பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதை­ய­டுத்து, உயர் நீதி­மன்­றத் தீர்ப்பை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­ட­தில் நேற்று மேற்­கண்­ட­வாறு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ளது.

கூடு­தல் செய்தி - பக்­கம் 2ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!