அமெரிக்க இடைக்கால தேர்தல்: குடியரசு, ஜனநாயகக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி

அமெ­ரிக்­கா­வின் இடைக்­கா­லத் தேர்­த­லில் போட்டி கடு­மை­யாக இருக்­கும் இடங்­களில் இன்­ன­மும் பெரும்­பா­லான முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டாத நிலை­யில், அதி­பர் ஜோ பைட­னின் ஜன­நா­ய­கக் கட்­சி­யி­ட­மி­ருந்து குடி­ய­ர­சுக் கட்சி கட்­டுப்­பாட்­டைக் கைப்­பற்­றுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

இந்­நி­லை­யி­லும் ஜன­நா­ய­கக் கட்­சிக்கு ஒரு சிறு வெற்றி கிட்­டி­யுள்­ளது. என்­பிசி நியூஸ், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளின் முன்­னு­ரைப்­பின்­படி, குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த மருத்­து­வர் மெஹ்­மெட் ஓஸ் என்­ப­வரை ஜன­நா­ய­கக் கட்­சி­யின் திரு ஜான் ஃபெட்டர்­மேனை வீழ்த்தி பென்­சில்­வே­னி­யா­வில் முக்­கி­ய­மான அமெ­ரிக்க செனட் சபை இடத்தை வென்­றுள்­ளார். இத­னால் சபை­யில் அவ­ரின் கட்சி பெரும்­பான்மை வகிக்­கும் வாய்ப்­பும் அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, ஜன­நா­ய­கக் கட்­சி­யி­னர் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பா­கச் செய்­துள்­ள­னர் என்­ப­தற்­கான ஆரம்­ப­க்கட்ட அறி­கு­றி­கள் தென்­படு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பிர­தி­நி­தி­கள் சபை­யில் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­ன­ருக்­குப் பெரும்­பான்மை கிட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில் திரு பைட­னின் சட்­டம் இயற்­றும் செயல்­பா­டு­களில் தொய்வு ஏற்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஆகக் கடு­மை­யான போட்டி நில­வும் 53 இடங்­களில், 12 இடங்­கள் மட்­டுமே முடி­வா­கி­யுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் முன்­னு­ரைப்பு காட்­டு­கிறது. அத­னால், இறுதி முடி­வு­கள் இன்­னும் சில காலத்­திற்­குத் தெரி­யா­மல் போக­லாம். 12 இடங்­களில் ஜன­நா­ய­கக் கட்­சி­யி­னர் 10 இடங்­களில் வெற்றி பெறு­வர் என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், அரி­ஸோனா, ஜார்­ஜியா, நெவாடா போன்ற முக்­கி­ய­மான இடங்­களில் போட்டி மும்­மு­ர­மா­கக் கவ­னிக்­கப்­படும் நிலை­யில் செனட் சபைக்­கான போட்டி இழு­ப­றி­யில் உள்­ளது.

இந்­நி­லை­யில், என்­பி­சிக்­குப் பேட்­டி­ய­ளித்த குடி­ய­ர­சுக் கட்­சி­யின் அமெ­ரிக்க செனட்­டர் லின்சி கிரா­ஹாம், "செனட் சபை­யில் குடி­ய­ர­சுக் கட்சி பெரும்­பான்மை வகிக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் இருக்­கி­றேன். 51, 52 என்ற நிலை­யில் இது முடி­வு­ற­லாம்," என்­றார்.

இருப்­பி­னும், மிகச் சிறிய வித்­தி­யா­சத்­தில் குடி­ய­ர­சுக் கட்­சிக்­குப் பெரும்­பான்மை கிட்­டி­னா­லுங்­கூட, திரு பைட­னின் அதி­கா­ரத்­துக்கு பங்­கம் ஏற்­ப­ட­லாம். அத்­து­டன் அவ­ரின் நிர்­வா­கம் குறித்­தும் அவ­ரு­டைய குடும்­பத்­தி­னர் குறித்­தும் அர­சி­யல்­சார்ந்த விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இத்தேர்­த­லில் செனட் சபை­க்கான 35 இடங்­க­ளுக்­கும் 36 ஆளு­நர் இடங்­க­ளுக்­கும் இடம்­பெற்­றுள்ளன. தேர்­தல் தினத்­திற்கு முன்­ன­தா­க 46 மில்­லி­யன் அமெ­ரிக்­கர்­கள் அஞ்­சல் வழி­யா­க­வும் நேர­டி­யா­க­வும் வாக்­க­ளித்­து­விட்­ட­தாக அமெ­ரிக்க தேர்­தல் திட்­டத் தர­வு­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

அந்த வாக்­கு­களை எண்­ணு­வ­தற்கு அதிக நேரம் தேவைப்­படும் என்று மாநி­லத் தேர்­தல் அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

அதி­க­ரிக்­கும் பண­வீக்­க­மும் கருக்­க­லைப்பு உரி­மை­யும் முக்­கி­யப் பிரச்­சி­னை­க­ளாக வாக்­கா­ளர்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன. 10ல் மூவர் இதில் இவ்­வி­ரண்­டில் ஒன்­றைத் தங்­க­ளின் முதல் அக்­க­றைக்­கு­ரிய பிரச்­சி­னை­யா­கக் கரு­து­வ­தா­கக் கருத்­துக்­க­ணிப்­பு­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, ஃபுளோரி­டா­வில் வாக்­க­ளித்த திரு டிரம்ப், மூன்­றா­வது முறை­யாக அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது குறித்து அடிக்­கடி மறை­மு­க­மா­கக் குறிப்­பி­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. வரும் 15ஆம் தேதி­யன்று பெரி­ய­தோர் அறி­விப்­பைத் தாம் செய்­ய­வி­ருப்­ப­தா­க­வும் அவர் திங்­கட்­கி­ழ­மை­யன்று கூறி­யி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!