ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆறு பேரை இந்திய உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நளினி ஸ்ரீகரன், ஆர்.பி. ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரான பேரறிவாளனை விடுதலை செய்திருந்தது.

அதே உத்தரவு மற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று அது கூறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு மாநில ஆளுநரிடம் பரிந்துரைத்ததை இந்திய உச்சநீதிமன்றம் சுட்டியது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை காங்கிரஸ் கட்சி துரதிஷ்டவசமானது என்று வருணித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!