நிபுணர்களுக்கு இங்கு இன்னமும் அதிக தேவை

உல­க­ள­வில் தொழில்­நுட்ப நிறு­வனங்­கள் ஊழி­யர்­களைக் குறைத்து வரு­கின்­றன. ஆனால், சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்ப நிபுணர்­க­ளுக்கு இன்­ன­மும் தேவை அதி­க­மாக இருக்­கிறது என்று தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் தெரி­வித்­தார்.

உலகத் தொழில்­நுட்ப நிறு­வனங்­களில் வேலை இழந்தவர்கள் என்டியுசி ஏற்­பாட்­டில் நடக்­கும் தக­வல் தொழில்­நுட்ப வேலை, தேர்ச்சிச் சந்­தை­யில் கிடைக்­கும் சுமார் 400 வேலை­களில் பொருத்­த­மா­ன­வற்றைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொள்வது பற்றி பரி­சீ­லிக்­க­லாம் என்­று திரு இங் கூறி­னார்.

இந்­தச் சந்தை இணை­யம் மூலம் இம்­மா­தம் 25ஆம் தேதி வரை நடக்­கிறது.

உள்­ளூர் சந்­தை­யைப் பொறுத்­தவரை தொழில்­நுட்ப நிபு­ணர்­களுக்­குத் தேவை ஏரா­ள­மாக இருக்­கிறது என்று அவர் தெரிவித்தார்.

"பொருத்­த­மா­னவர்­க­ளுக்குப் பொருத்­தமான வேலை கிடைக்க இந்­தச் சந்தை மூலம் நாங்­கள் உதவி வரு­கி­றோம்," என்று திரு இங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

"இங்கு தொழில்­நுட்ப நிபு­ணர்­களுக்­குப் பற்­றாக்­குறை நிலவுகிறது. வாய்ப்­பு­கள் வெளிப்படையாக இருக்­கின்­றன. கொஞ்ச காலம் வேலை பார்க்­கா­த­வர்­க­ளுக்­கும் வேலை இருக்­கிறது.

"நடுவே வாழ்க்­கைத் தொழிலை மாற்­றிக்­கொள்ள விரும்­பு­வோ­ரும் தொழில்­நுட்­பத் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொண்டு அதில் வேலை பெற வாய்ப்பு இருக்­கிறது," என்­றும் அவர் கூறி­னார்.

"இந்­தத் தொழில்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் தேர்ச்­சி­களைக் கைக்கொள்­ளக்­கூ­டிய மனப்­போக்­கு­டன் திக­ழ­வேண்­டும். எப்­போ­துமே தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக் கொண்டு வர­வேண்­டும்.

"இந்­தத் துறை வேக­மா­கப் பரி­ண­மிப்­பதே இதற்­கான கார­ணம்," என்று அவர் தெரி­வித்­தார்.

மரினா பேயில் உள்ள என்­டியுசி சென்­ட­ரில் நேற்று நடந்த தொழில்­நுட்ப வேலை சந்­தை­யில் பொருத்த மான வேலை­யைத் தேடி சுமார் 135 பேர் வந்­தி­ருந்­த­னர்.

அந்­தச் சந்­தை­யில் 30 நிறு­வனங்­கள் ஏறத்தாழ 400 வேலை வாய்ப்­பு­களை அளித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!