உற்று நோக்கப்படும் பைடன்- ஸி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றுள்ளது

சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இருதரப்பு சந்திப்பு நடத்தியுள்ளனர்.

ஜி20 உச்சநிலை சந்திப்பில் பங்கெடுப்பதற்காக, இந்தோனிசியாவின் பாலித் தீவில் நவம்பர் 14ஆம் தேதி திங்கள் அன்று வந்திறங்கினார் சீன அதிபர்.

இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கப்படுகிறது. திரு பைடன் அதிபராகப் பொறுப்பேற்றபின்னர் சீன அதிபரைச் சந்திப்பது இதுவே முதன்முறை.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அதிகரித்துவரும் பதற்றநிலைக்கிடையே இந்தச் சந்திப்பு நடக்கிறது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர், தைவான், வடகொரியா, வர்த்தகம் போன்ற விவகாரங்கள் காரணமாக இந்த இரு நாடுகளின் உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அவை குறித்து அந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுடனான அமெரிக்காவின் தொடர்புத் தடங்கள் திறந்தே இருக்கும் என்று அதிபர் பைடன் ஆசியத் தலைவர்களிடம் கம்போடியாவில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பாலித் தீவில் வந்திறங்கிய பைடன், சீனாவுடன் கடுமையாகப் போட்டி போடும் என்றும் அந்தப் போட்டி சண்டையில் முடிவடையாத வகையில் இருக்க பார்த்துகொள்ளும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!