நெருக்கடியிலும் வலுவாக வளர்ந்த உறவு

சீன அதி­பர் ஸி ஜின்­பிங்கும் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்கும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நேற்று மாலை சந்தித்துக்கொண்டனர். ஏபெக் பொரு­ளி­யல் மாநாட்­டில் இச்­சந்­திப்பு நிகழ்ந்­தது. மூன்­றாண்­டு­களில் இரு தலை­வர்­களும் சந்­தித்­துக்­கொண்­டது இதுவே முதல்­முறை. முன்­ன­தாக, கொள்­ளை­நோய் பர­விய காலத்­தில் இவ்­வி­ரு­வ­ரும் பல தடவை மெய்­நி­கர் வாயி­லா­கச் சந்­தித்து உரை­யா­டி­னர்.

நேற்றைய சந்­திப்­பின்­போது சீனா­வின் 20வது கம்­யூ­னிஸ்ட் கட்சி தேசிய மாநாடு வெற்­றி­க­ர­மாக நடந்து முடிந்­த­தற்­காக சீன அதி­ப­ருக்கு திரு லீ தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார். சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான அணுக்க, பன்முனை உற­வு­களை இரு தலை­வர்­களும் மறு­ உறு­திப்­ப­டுத்­தி­னர். கொள்­ளை­நோய் காலத்­தி­லும் உலக அள­வில் சவால்­கள் உரு­வெ­டுத்து வரும் வேளை­யி­லும் இரு நாடு­களும் தொடர்ந்து ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­திய விதம் குறித்­தும் இரு­

வ­ரும் கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­தாக பிரதமர் லீயின் பத்திரிகைச் செய லாளர் திருவாட்டி சாங் லி லின் கூறி னார். கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநாடு குறித்­தும் சீனா­வின் வளர்ச்­சிக்­கா­கத் தாம் வகுத்­துள்ள திட்­டங்­கள் குறித்­தும் பிர­தமர் லீயி­டம் சீன அதி­பர் விளக்­கி­னார்.

இரு­த­ரப்பு உற­வு­கள், வட்­டார விவ­கா­ரங்­கள், அமெ­ரிக்க-சீன உற­வின் நிலைத்­தன்மையை நிர்வகிப்பது உள்­ளிட்ட அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் குறித்­தும் இரு தலை­வர்­களும் கலந்­துரை­யா­டி­னர். சீனா­வுக்கு விரை­வி­லேயே வரு­மாறு திரு லீக்கு சீன அதி­பர் அழைப்பு விடுத்­தார். அதே­போல மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வரு­மாறு திரு ஸியை திரு லீ கேட்­டுக்­கொண்­டார்.

சந்திப்பின் போது சிங்கப்பூர் வெளியு றவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அருகில் இருந்தனர். 29வது ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலைக் கூட்டத்தில் பங் கேற்க இரு தலைவர்களும் பேங்காக் சென்றுள்ளனர். இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!