மலேசியப் பொதுத்தேர்தல்: பிற்பகல் 2 மணி வரை 58 விழுக்காடு வாக்குப் பதிவு

மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

பிற்பகல் 2 மணி அளவில் 58 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.

இந்தத் தேர்தலில் சுமார் 21 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் நான்கு மில்லியன் பேர் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மலேசியாவில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் களத்தில் நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன.

பிரதமர் பதவிக்கு ஆறு பேர் இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டியும் மோதலும் நிலவுகின்றன.

எனினும், 70 மலாய் பேராசிரியர்களைக் கொண்ட குழு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாக கூறியுள்ளதை அடுத்து, கடைசி நேரத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் முன்னிலை வகிப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

சில இடங்களில் கனமழையைப் பொருட்படுத்தாமல், மக்கள் வாக்களிப்பதற்கு திரண்டிருந்தனர்.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும், சாலை சுங்கவரிக் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காலமானதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 221 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு மலேசியாவில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் எந்த கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளைக் கைப்பற்றுகிறதோ, அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும், வலிமையைப் பெறும் என்கிறார் செல்லியல் இணையத்தள ஆசிரியர் இரா.முத்தரசன்.

வாக்குப்பதிவுக்காக விடுமுறை அளிக்கப்பட்டதால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலைகள் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்படுகின்றன.

இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு, நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!