இணையவழி ஊழியருக்கு சேமநிதி, காப்புறுதி ஏற்பாடு பரிந்துரைகள் ஏற்பு; 2024 பிற்பகுதியில் புதிய கொள்கைகள் நடப்புக்கு வரும்

செய­லி­க­ளின் அடிப்­ப­டை­யில் வேலை பார்க்­கும் இணையவழி இணைப்புத்தள விநியோக ஊழியர்­கள், டாக்சி ஓட்­டு­நர்­கள், தனி­யார் வாடகை கார் ஓட்டுநர் கள் ஆகி­யோர் வேலை பார்க்கை யில் காயமடையும் பட்­சத்­தில் காப்­பு­று­திப் பாது­காப்­பைப் பெற­வி­ருக்­கி­றார்­கள்.

மத்­திய சேமநிதிச் சந்தா தொகை­யும் அவர்­கள் கணக்­கில் சேர­வி­ருக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய ஊழி­யர்­கள் ஏறக் குறைய 73,000 பேர் உள்ளனர்.

அவர்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­து­வ­தற்கு உத­வும் பெரிய அள­வி­லான கொள்­கைகள் நடை­மு­றைக்கு வர­வி­ருக்­கின்­றன.

அதன்­படி, அத்­த­கைய ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தும் நிறு­வ­னங்­கள், தரப்­ப­டுத்­தப்­பட்ட காப்­பு­று­திப் பாது­காப்பை அவர்­களுக்கு வழங்க வேண்டி இருக்கும். வேலை பார்க்கும்போது ஊழி­யர்­கள் காய­ம­டைந்­தால் அவர்களுக்கு இந்த ஏற்­பாடு பல­ன­ளிக்கும்.

மத்திய சேமநிதிச் சந்­தா­வைப் பொறுத்­த­வரை, 30 வயதை எட்­டா­த­வர்­க­ளுக்கு மட்­டுமே அது கட்­டா­ய­மாக்­கப்­படும். மற்­ற­வர்­களைப் பொறுத்­த­வரை விரும்­பினால் சேர்ந்­து­கொள்­ள­லாம்.

இவற்­றுக்கு வகை­செய்­யும் புதிய கொள்­கை­கள் முடிந்த வரை விரை­வாக 2024 பிற்­ப­கு­தி­யில் நடப்­புக்கு வரும்.

இணையவழி இணைப்புத்தள ஊழி­யர்­கள் ஆலோ­ச­னைக் குழு பரிந்­துரை­களை அர­சாங்­கம் நேற்று ஏற்றுக்­கொண்­டது.

அத­னை­ய­டுத்து இவை நடை­முறை சாத்­தி­ய­மா­கின்­றன. அந்தக் குழு 60 பக்க அறிக்­கையை அர­சாங்­கத்­தி­டம் தாக்­கல் செய்­தது.

இந்த மாற்­றங்­கள் கார­ண­மாக இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்குக் கிடைக்­கக்­கூ­டிய அடிப்­படை பாது­காப்பு ஏற்­பா­டு­கள், இதர துறை­களைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­குக் கிடைக்­கும் அள­விற்கு இருக்­கும்.

இதர துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு வேலை­யிட காய இழப்­பீட்­டுச் சட்­டம் பாது­காப்பு அளிக்­கிறது. அவர்­கள் மத்­திய சேம நிதிக்குத் தங்­கள் பங்குச் சந்­தாவைச் செலுத்த வேண்­டும்.

இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு உரிய சேம­நி­திச் சந்தா விழுக்­காடு, இதர துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கு­ரிய விழுக்­காட்டு அளவை எட்ட ஐந்­தாண்­டு­கள் ஆகும் என குழு தெரி­வித்துள்ளது.

குறை­வான விகி­தத்­தில் இருந்து அந்­தச் சந்தா தொடங்கும். பெரிய அள­வி­லான பொரு­ளி­யல் பாதிப்பு­கள் இருந்­தா­லொ­ழிய ஆண்­டுக்கு 2.5% முதல் 3.5% வரை அது கூடும்.

பரிந்­து­ரை­களை உரு­வாக்­கும் முயற்­சி­யில், இணை­யத் தளங்­களைப் பயன்­ப­டுத்­தும் 2,700 பேரை அணுகி இந்­தக் குழு கருத்துக் கேட்­டது. அவர்­களில் 91 விழுக்­காட்­டி­னர் விநி­யோ­கத் தள ஊழி­யர்­க­ளுக்கு உதவி வேண்­டும் என்று கருத்து கூறி­னர்.

அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­குச் சிறப்­பான பாது­காப்பை வழங்­கும் வகை­யில், அவர்­க­ளின் சேவைக்கு கூடு­த­லாக பணம் தர தாங்­கள் தயார் என்­றும் அவர்­கள் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!