யாருக்கு ஆதரவு அளிப்பது; பாரிசான் நேஷனலில் குழப்பம்

மலே­சி­யா­வில் நடந்த பொதுத் தேர்த­லில் யாருக்­கும் பெரும்­பான்மை கிடைக்­காத நிலை­யில், பக்­கத்­தான் ஹரப்­பான் தரப்­பில் அன்­வார் இப்­ரா­ஹிம் தலை­மை­யில் கூட்டு அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

அதே­வே­ளை­யில், பெரிக்­காத்­தான் நேஷ­னல் அணி முகை­தீன் யாசின் தலை­மை­யில் கூட்டு அர­சாங்­கத்தை அமைக்க மறு­பக்­கம் முயற்­சி­களை முடுக்­கி­விட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்­த­லில் வெறும் 30 இடங்­க­ளில்­தான் வென்று இருக்கிறது என்­றா­லும் பாரி­சான் நேஷ­னல் அடுத்த அர­சாங்­கத்தை அமைப்­ப­தில் முக்­கி­ய­மான முடிவு எடுக்­கும் சக்­தி­யாக இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

பாரி­சான் நேஷ­னல் தலை­வர்கள் நேற்று மாமன்­ன­ரைச் சந்­தித்­தார்­கள். ஐக்­கிய அர­சில் அங்கம் வகிக்­கும்­படி பாரி­சான் நேஷ­னலை மாமன்­னர் கேட்­டுக்­கொண்­ட­தாக தெரி­ய­வந்துள்ளது. இந்த யோசனையை அன்­வார் இப்­ரா­ஹிம் தாரா­ள­மாக வர­வேற்று இருக்­கி­றார்.

மாமன்­ன­ரைச் சந்­தித்த பிறகு பேசிய பாரி­சான் நேஷ­னல் தலை­வர் ஸாகித் ஹமிடி, ஐக்­கிய அரசை அமைக்­கும்­படி மாமன்னர் உத்­த­ர­விட்டு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, பாரி­சான் நேஷனலின் முக்­கிய கட்­சி­யான அம்­னோ­வின் தலை­வர் ஸாகித், மன்­ன­ருக்கு அனுப்­பிய ஒரு கடி­தத்­தை தான் பார்த்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

பாரி­சான் நேஷ­னல் அணி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லா­ரும் அன்­வா­ருக்கு ஆதரவு அளிப்­ப­தாக அந்­தக் கடி­தத்­தில் உறுதி தெரி­வித்துள்ளதாக அது மேலும் கூறி­யது.

ஆனால் யாரை ஆத­ரிப்­பது என்­ப­தில் பாரி­சான் நேஷ­னல் தலை­வர்­க­ளி­டையே இணக்­கம் இல்லை என்று அந்த அணி­யின் தலை­வர்­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

மாமன்­ன­ரி­டம் ஸாஹித் கடி­தம் கொடுத்த விவ­கா­ரம் பற்றி கருத்து கூறிய மலே­சிய சீனர் சங்க தலைமைச் செய­லா­ளர் சோங் சின் ஊன், முத­லில் கடிதத்தை மறுத்த ஸாஹித் பிறகு ஒப்­புக்­கொண்­ட­தாகக் கூறி­னார்.

ஸாஹித் செயல் மாமன்­னரை ஏமாற்­றும் முய­ற்சி என்று அம்னோ முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் மூசா சாடி­னார். இந்­நி­லை­யில், மலே­சிய மாமன்னர் இன்று நாட்­டின் இதர மன்­னர்­க­ளு­டன் சிறப்புக் கூட்­டம் நடத்தி நில­வ­ரம் பற்றி விவா­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!