‘வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதே முதல் வேலை’

பிரதமர் பதவி ஏற்ற முதல் நாளில் அன்வார் பேச்சு

மலேசியாவில் பல்வேறு அரசியல் திருப்பங் களுக்கு இடையே பிரதமராகியுள்ள அன்வார் இப்ராகிம், வாழ்க்கைச் செலவுகளைக் குறைப் பதே முதல் வேலை என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட்டுள்ள நிலையில் மந்தமான பொருளியல் சூழ்நிலையில் 75 வயதான அன்வார் வியாழக்கிழமை பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மலேசியாவின் பழுத்த அரசியல்வாதியான மகாதீர் முகமதுவின் ஆரம்பகட்ட ஆதர வாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உச்சத்தைத் தொட்டு, பின்னர் ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டில் சிறையில் தள்ளப்பட்டு, அடி மட்டத்தில் வீழ்ந்து, புதிய கட்சியைத் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவராகி, பல எதிர்ப்புகளையும் மீறி இன்று பிரதமர் ஆகியுள்ளார் அன்வார்.

பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்கும்படி கூறி அன் வாரிடம் பிரதமர் பொறுப்பை மாமன்னர் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முதல் முறையாக பிரதமர் அலுவலகத்துக்கு வந்த அன்வார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாட்டின் பொருளியல் மீது முதல் கவனம் இருக்கும் என்றும் தமது அமைச்சரவை முந்தைய அரசாங்கத்தைவிட சிறியதாக இருக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

திரு அன்­வா­ரின் அமைச்­ச­ர­வை­யில் யார், யார் இடம்­பெ­று­வார்­கள் என்­பது தெரிய வில்லை. ஆனால் இரண்டு துணைப் பிர­த­மர்­கள் இருப்­பார்­கள் என்று முன்­ன­தாக அவர் கூறி­யி­ருந்­தார்.

முன்­னைய ஆளும் கூட்­ட­ணி­யான தேசிய முன்­ன­ணிக்கு ஒரு துணைப் பிர­த­மர் பதவி ஒதுக்கப்படும். மற்­றொரு துணைப்­பி­ர­த­மர் பதவி கிழக்கு மலேசிய கட்­சிக்கு வழங்கப் படும் எனத் தெரிகிறது.

இதற்­கி­டையே நேற்று வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையை முடித்­துக்­கொண்டு புத்ரா பள்ளி­வா­ச­லுக்கு வெளியே பேசிய அன்­வார், நிதி­ய­மைச்­சர் பொறுப்பை ஏற்­கும் எண்­ணம் தமக்கு இல்லை என்றார்.

தம்­புன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அவர், இறுதி முடிவு எடுப்­ப­தற்கு முன்பு அனைத்து சாத்­தி­யங்களும் ஆரா­யப்­படும் என்­று கூறினார்.

முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­மது அமைச்­ச­ர­வை­யில் 1990 முதல் 1998 வரை அன்­வார் இப்­ரா­கிம் நிதி அமைச்­ச­ராக இருந்­தார்.

அன்­வார் பிர­த­மர் ஆவ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்த பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான முகை­தீன் யாசின், அன்­வா­ருக்கு வாழ்த்­துத் தெரிவித்­துள்­ளார். திரு மகா­தீர் முக­ம­து­வும் அன்­வா­ருக்கு வாழ்த்­துக் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!