6 கிலோமீட்டர் தூர புதிய சைக்கிளோட்டப் பாதை

மத்திய வர்த்தக வட்டாரத்தில் பல்வேறு எம்ஆர்டி நிலையங்களை இணைக்கும்

சிங்­கப்­பூ­ரின் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் மேலும் ஒரு 6 கிலோ­மீட்­டர் தூர சைக்­கி­ளோட்டப் பாதை தொடங்­கப்­பட்டுள்­ளது.

பல்­வேறு எம்­ஆர்டி நிலை­யங்­க­ளை­யும் மரினா அணைக்­கட்டு போன்ற பிர­பல வட்­டா­ரங்­க­ளை­யும் வேலை­யி­டங்­க­ளு டன் இணைக்­கும் வகை­யில் இந்­தப் பாதை அமைக்­கப்­பட்டு உள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று கூறி­யது.

இந்­தப் பாதை கிளார்க் கீயில் தொடங்கி பேஃபிரண்ட் மற்­றும் தஞ்­சோங் பகார் வரை நீள்­கிறது. இதன்­மூ­லம் கிளார்க் கீ, தஞ்­சோங் பகார் மற்­றும் தெலுக் ஆயர் எம்­ஆர்டி நிலை­யங்­

க­ளுக்கு இணைப்பு கிடைக்­கும்.

இவற்­று­டன், அண்­மை­யில் திறக்­கப்­பட்ட தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் அமைந்­துள்ள ஷெண்­டன் வே, மரினா பே மற்­றும் கார்­டன்ஸ் பை த பே ஆகிய நிலை­ய­ங்

க­ளை­யும் புதிய பாதை இணக்­கும்.

எம்ஆர்டி நிலையங்களில் இருந்து தஞ்­சோங் பகார் பிளாசா, லாவ் பா சாட், மார்­க்கெட் ஸ்தி­ரீட் உண­வங்­காடி நிலை­யம் மற்­றும் ஹோங் லிம் வர்த்­தக வளா­கம் போன்­ற­ பகுதிகளுக்கு சைக்கிளில் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் செல்ல புதிய பாதை உதவும் என்று போக்குவ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

தஞ்­சோங் பகா­ரில் நேற்­றுக் காலை நடை­பெற்ற இந்த சைக்­கி­ளோட்டப் பாதைத் தொடக்க நிகழ்­வில் அமைச்­சர் கலந்­து­கொண்­டார்.

தீவின் பல பகு­தி­களை இணைக்­கக்­கூ­டிய சிங்­கப்­பூ­ரின் சைக்­கி­ளோட்டக் கட்­ட­மைப்பை விரி­வாக்­கும் திட்­டத்­தின் பகுதி­ க­ளாக புதிய பாதை­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

"இங்கு மத்­திய வர்த்­தக வட்­டா­ர­மும் மர­பு­டைமை வட்­டா­ர­மும் உள்­ளன. இவற்றை அடைய வாக­னங்­களில் செல்­வ­தைக் காட்­டி­லும் நடந்­தும் சைக்­கிள் மூல­மா­க­வும் செல்­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­கம். உள்­கட்­ட­மைப்­பை­யும் இணைப்­பு­க­ளை­யும் மேம்­ப­டுத்­து­வ­தோடு மட்­டு­மல்­லா­மல் நகர்ப்­புற நில­வ­னப்­பை­யும் அவற்­றின் அடை­யா­ளத்­தை­யும் மேம்­ப­டுத்­து­வதே சைக்­கி­ளோட்ட பாதை ஏற்­பா­டு­க­ளின் நோக்­கம்," என்று வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு ஈஸ்­வ­ரன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

தொடங்­கப்­பட்டு உள்ள புதிய பாதை­யோடு சேர்த்து தற்­போது 21 கிலோ­மீட்டர் நீள சைக்­கி­ளோட்ட பாதை­யும் பூங்கா இணைப்­பு­களும் உள்­ளன. புதிய பாதை­களை ஏற்­ப­டுத்­தும் பணி 2018ஆம் ஆண்டு தொடங்­கி­யது.

இது­போன்ற வட்­டா­ரங்­களில் நடப்­ப­தும் சைக்­கி­ளோட்­டு­வ­தும் அதி­க­ரிக்­கும்­போது அதற்­கேற்ற அதிக உள்­கட்­ட­மைப்பு ஆத­ர­வும் வச­தி­களும் தேவைப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார். சைக்­கிள் நிறுத்­து­மி­டம், குளிப்­

ப­தற்­கான வசதி, பூட்­டிக்­கொள்­ளக்­கூ­டிய பாது­காப்பு போன்ற வசதிகள் அவை என்­றும் அவர் கூறி­னார்.

இத்­த­கைய வச­தி­களை நிறுவ, துடிப்­பான பயண மானி­யத் திட்­டத்­தின்­கீழ் ஒவ்­வொரு மேம்­பாட்டு வச­தி­க­ளுக்­கும் அதி­க­பட்­சம் $80,000 வரை நிதி உதவி அளிக்­க­லாம் என நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கரு­து­கிறது.

அதா­வது, இத்­த­கைய வச­தி

­க­ளின் கட்­டு­மா­னச் செல்­வில் 80 விழுக்­காடு வரை இந்­தத் திட்­டத்­தின்­கீழ் நிதி உதவி வழங்­கு­வது ஏற்­பாடு. நடந்து செல்­வோ­ரும் சைக்­கிள் ஓட்­டு­வோ­ரும் பாது­காப்­பான, சொகு­சான பயண அனு­

ப­வத்­தைப் பெறும் வகை­யில், ஏற்­கெ­னவே இருந்த சமிக்ஞை முறை சந்­திப்­பு­கள் விரி­வாக்­கப்­பட்டு உள்­ள­தாக ஆணை­யம் கூறி­யது. அத்­து­டன் இந்­தப் பாதை­களில் புதிய சந்­திப்­பு­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அது தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!