40 ஆண்டுகளாக தூங்கிய உலகின் ஆகப்பெரிய ஹவாய் எரிமலை பொங்கி நெருப்பைக் கக்கியது

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள 'மவுனா லோவா' என்ற உலகின் ஆகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துத் தீப்பிழம்புகளை வெளியே தள்ளியதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் அந்த எரிமலை தொடர்ந்து வெளிப்படுத்துவதாக அவர்கள் கூறினர். அவசரநிலை ஊழியர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஹவாய் தீவின் பரப்பளவில் சுமார் அரைப் பகுதியை அந்த எரிமலை அடைத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் இன்னமும் எரிந்து வெடிக்கும் நிலையில் இருக்கும் எரிமலைகளில் இதுவே ஆகப் பெரியது என்று வர்ணிக்கப்படுகிறது.

மவுனா லோவா எரிமலையில் இருந்து வெளிவரும் நெருப்புக் குழம்பும் சாம்பலும் இப்போது அந்த மலையின் உச்சிப் பகுதியைச் சூழ்ந்த அளவிலேயே இருந்து வருகிறது. என்றாலும்கூட அதனால் அருகில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது.

அந்த எரிமலை பல ஆண்டுகளாகவே வெடிப்பதற்கான அறிகுறிகளைப் புலப்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை, வெடித்துப் பொங்கும் மவுனா லோவா எரிமலையை, அது அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் இருக்கும் கோனா என்ற நகரத்தில் இருந்து பார்க்க முடிகிறது என்றும் குறிப்பிட்டது.

இப்போதைக்கு அதனால் மக்களுக்கு ஆபத்தில்லை என்றாலும் எந்த நிலையிலும் ஆயத்தமாக இருந்துகொள்ளும்படி எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

கடல் மட்டத்தில் இருந்து 4,169 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள அந்த எரிமலை, 5,179 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

இதற்கு முன்னதாக அது 1984ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது அதன் குழம்பு ஐந்து மைல் அப்பால் இருக்கும் ஹிலோ என்ற நகரம் வரை பரவியது.

கடந்த 40 ஆண்டு காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

ஆகையால், இப்போது பெரிய அளவில் அந்த எரிமலை வெடித்துச் சிதறினால் பேராபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!