நிதி அமைச்சர் பொறுப்பை பிரதமர் அன்வாரே ஏற்கிறார்

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், புதிய அமைச்­ச­ரவை குறித்த விவ­ரங்­களை நேற்று வெளி­யிட்­டார். நிதி அமைச்­சர் பொறுப்பை திரு அன்­வாரே ஏற்­கி­றார். அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி துணைப் பிர­த­ம­ரா­கி­றார்.

மொத்தம் 28 அமைச்­சர்­களைக் கொண்ட சிறிய அமைச்­ச­ரவை அறி­விக்­கப்­பட்­டு உள்­ளது. ஐக்­கிய அர­சாங்­கத்­தில் அங்­கம் வகிக்­கும் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே பொறுப்பு பிரித்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சிய வர­லாற்­றின் முதன்­மு­றை­யாக, இரு துணைப் பிர­த­மர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்டுகளை எதிர்­நோக்­கும் ஸாஹிட்டுடன் சேர்த்து, முன்னாள் பொதுப் பணித்­துறை அமைச்­ச­ரான கம்­புங்­கான் சர­வாக் கட்சி­யின் ஃபடில்லா யூசோ­ஃபும் துணை பிர­த­ம­ரா­கி­றார்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி தரப்­பில் 15 அமைச்­சர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். நிதி, உள்­துறை, கல்வி போன்ற முக்­கிய அமைச்­சு­க­ளுக்கு அவர்­கள் பொறுப்பு வகிக்­கின்­ற­னர்.

ஜன­நா­யக செயல் கட்­சித் தலை­மைச் செய­லா­ளர் ஆண்டனி லோக் போக்­கு­வ­ரத்து அமைச்­சராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். பக்கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி முன்பு ஆட்­சி­யில் இருந்­த­போது இதே பத­வியை அவர் வகித்­து இருந்­தார்.

தேசிய முன்­ன­ணிக் கூட்­ட­ணிக்கு ஆறு அமைச்­சர் பொறுப்பு­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. தற்­காப்பு, சட்­டம், கழகச் சீர­மைப்பு, அனைத்­து­லக வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை உள்­ளிட்­டவை அந்த அமைச்­சு­களில் அடங்­கும்.

புதிய அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் திங்கள்கிழமை சிறப்­புக் கூட்­டம் ஒன்­றில் கலந்து­கொள்ள இருக்­கின்­ற­னர்.

பேராக் மாநி­லம், ஈப்­போ­வில் நேற்று முன்­ன­தாக திரு அன்­வார் நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசி­னார்.

"அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் தத்­தம் அமைச்­சு­களை நிர்­வ­கிப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் குறித்து இந்­தக் கூட்­டத்­தில் பேசப்­படும். அதோடு, அர­சாங்க ஊழி­யர்­க­ளு­டன் சேர்ந்து எவ்­வாறு பணி­யாற்­று­வது, ஊட­கங்­க­ளி­டம் எவ்­வாறு அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வது, அர­சாங்க நிதியை எவ்­வாறு வீண­டிக்­கா­மல் இருப்­பது போன்ற விவ­கா­ரங்­கள் குறித்­தும் கலந்­தா­லோ­சிக்­கப்­படும்," என்று அவர் கூறி­ய­தாக 'மலாய் மெயில்' செய்தித் தளம் தெரி­வித்­தது.

ஐக்­கிய அர­சாங்­கத்தை வழி­நடத்த தமக்கு ஆத­ர­வ­ளித்­த­தற்­கான வெகு­ம­தி­யாக இந்த அமைச்­ச­ரவை நிய­ம­னங்­களைக் கரு­தக்­கூ­டாது என்று திரு அன்­வார் கடந்த வாரம் கூறி­யி­ருந்­தார்.

பக்­கத்­தான் ஹரப்­பான், தேசிய முன்­னணி, கபுங்­கான் சர­வாக் கட்சி, கபுங்­கான் ராக்­யாட் சாபா ஆகிய கூட்­ட­ணி­கள் ஐக்­கிய அர­சாங்­கத்­தில் அங்­கம் வகிக்­கின்­றன. இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், முகை­தீன் யாசின் ஆகி­யோ­ரின் தலை­மைத்­து­வத்­தின்­கீழ் இருந்த அமைச்­ச­ர­வை­க­ளை­விட தமது அமைச்­ச­ரவை சிறி­ய­தாக இருக்கும் என்று திரு அன்­வார் உறுதி அளித்தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!