2023ல் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் சொத்து வரியைச் செலுத்த வேண்டும்

ஒருமுறை வரிக் கழிவாக $60 வரை வழங்கப்படும்

பெரும்­பா­லான வீட்டு உரி­மை­யாளர்­கள் அடுத்த ஆண்டு கூடுதல் சொத்து வரி­யைச் செலுத்த வேண்­டும். வீட்டு வாடகை உயர்­வைப் பிர­தி­ப­லிக்க பெரும்­பா­லான குடி­யிருப்­பு­க­ளின் ஆண்டு மதிப்பு உயர்த்­தப்­ப­டு­வதே இதற்­குக் கார­ணம்.

இதைச் சரி­கட்ட, வீட்டு உரி­மை­யா­ளர் வசிக்­கும் அனைத்­துக் குடி­யி­ருப்­பு­க­ளுக்­கும் $60 வரை­யி­லான வரிக் கழிவை அர­சாங்­கம் ஒரு­முறை வழங்­கும். நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் இத­னைத் தெரி­வித்­தன.

2023 ஜன­வரி 1ஆம் தேதி­யி­ல் இ­ருந்து பெரும்­பா­லான தனி­யார் சொத்­து­க­ளுக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­கு­மான ஆண்டு மதிப்பு உயர்த்­தப்­படும்.

விலை­யு­யர்ந்த தனி­யார் சொத்து­களை வைத்­தி­ருப்­போர், குறிப்­பாக முத­லீட்­டிற்­காக சொத்­து­களை வாங்­கி­யோரே வரி உயர்­வால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வர்.

எடுத்­துக்­காட்­டாக, வீட்டு உரி­மை­யா­ளர் வசிக்­கும் பட்­சத்­தில், $100,000க்கு­மேல் ஆண்டு மதிப்­புடைய சொத்­து­க­ளுக்­கான வரி அடுத்த ஆண்டு 23 விழுக்­கா­டாக இருக்­கும்.

அந்தக் குடியிருப்பில் வீட்டு உரி­மை­யா­ளர் வசிக்கவில்லை எனில், வரி 27 விழுக்­கா­டாக இருக்­கும்.

அடுத்த ஆண்டு தொடங்கி ஈராண்­டு­க­ளுக்கு சொத்து வரி உயர்வு நடப்­புக்கு வரு­வது குறித்து இவ்­வாண்­டின் வர­வு­செலவுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டு இ­ருந்­தது.

ஓரறை, ஈரறை வீட்டு உரி­மை­யா­ளர்­கள் சொத்து வரி செலுத்த தேவை­யில்லை.

அவர்­க­ளது வீடு­களின் ஆண்டு மதிப்பு $8,000க்குக்­கீழ் இருப்­பதே இதற்­குக் கார­ணம்.

மூவறை மற்­றும் அதற்­கும் பெரிய வீடு­களில் வசிக்­கும் பெரும்­பா­லா­னோர், இவ்­வாண்­டு­டன் ஒப்பிடுகையில், வரிக் கழி­வைக் கருத்­தில்­கொண்டு $30 முதல் $70 வரை கூடு­த­லாக சொத்து வரி செலுத்த வேண்­டும்.

மூவறை வீடு­களில் வசிப்­போர், வரிக் கழி­வுக்­குப் பிறகு கூடு­தலாக $7 முதல் $30 வரை செலுத்த வேண்­டும். நான்கறை, ஐந்­தறை, எக்­சி­கி­யூட்­டிவ் வீடு­களில் வசிப்­போர் $33.60 முதல் $67.20 வரை கூடு­த­லாக செலுத்த வேண்­டும்.

ஒரு­முறை வழங்­கப்­படும் 60 விழுக்­காடு வரிக் கழிவு, அடுத்த ஆண்டு செலுத்த வேண்­டிய சொத்து வரி­யி­லி­ருந்து தானாக கழிக்­கப்­படும்.

இந்த வரிக் கழிவுக்­கான உச்ச வரம்பு $60ஆக நிர்­ண­யிக்­கப்­பட்­டு உள்­ளது.

சொத்­து­க­ளின் ஆண்டு மதிப்­பைத் தீர்­மா­னிக்க சந்­தை­யில் வீட்டு வாடகை நில­வ­ரத்தை உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் கண்­கா­ணித்து வரு­கிறது.

கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் சொத்­து­க­ளின் ஆண்டு மதிப்பு கடை­சி­யாக மாற்றி அமைக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து வீவக மற்­றும் தனி­யார் வீட்டு வாடகை 20 விழுக்­காட்­டிற்­கும் மேல் உயர்ந்­து இ­ருப்­ப­தாக ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!