போதைப்பொருள் குற்றம்: பெர்த் விமான நிலையத்தில் சிங்கப்பூரர் கைது

ஆஸ்திரேலியாவின் பெர்த் விமான நிலையத்தில் நவம்பர் 16ஆம் தேதி  சிங்கப்பூர் ஆடவர் ஒருவரிடம் சட்டவிரோத போதைப்பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய எல்லைப் படையும் ஆஸ்திரேலிய மத்தியக் காவல்துறையும் நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

அந்த ஆடவரின் பயணப்பெட்டி சோதிக்கப்பட்டதில் 100 மி.லி. gamma butyrolactone (GBL) மற்றும் அனுமதிக்கப்படாத anabolic steroids போதைப்பொருள்கள் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றங்களுக்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தனக்குத் தெரியும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி அந்த ஆடவர் பெர்த் சென்றிருங்கினார். அவரது பயணப்பெட்டியை சோதிப்பதற்காக ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரி ஒருவர் அந்த ஆடவரை ஓரங்கட்டினார்.

அந்த ஆடவரிடம் வழக்கத்திற்கு மாறான நடத்தை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பது பற்றி ஆஸ்திரேலிய அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி பெர்த் மேஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு A$3,000 (S$2,757) அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு அவரால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!